சங்கீதம் 38 : 1 (RCTA)
ஆண்டவரே, நீர் சினம் கொண்டு என்னைக் கடிந்து கொள்ளாதேயும்: சீற்றங் கொண்டு என்னைத் தண்டியாதேயும்.
சங்கீதம் 38 : 2 (RCTA)
ஏனெனில், உம் அம்புகள் என் மேல் பாய்ந்தன: உம் திருக் கரத்தின் தண்டனையும் என் மேல் விழுந்தது.
சங்கீதம் 38 : 3 (RCTA)
நீர் சினங்கொண்டதால் என் உடலில் நலமே இல்லை: என் பாவத்தால் என் எலும்புகளெல்லாம் நெக்குவிட்டுப் போயின.
சங்கீதம் 38 : 4 (RCTA)
என் குற்றங்கள் என் தலைக்கு மேல் பெருகி எழுந்தன: பெரும் சுமைபோல் என்னை மிகவே நசுக்குகின்றன.
சங்கீதம் 38 : 5 (RCTA)
என் காயங்கள் அழுகி நாற்றம் எடுக்கின்றன: இதற்கு என் அறியாமையே காரணம்.
சங்கீதம் 38 : 6 (RCTA)
தலை குனிந்து மிகத் தளர்வடைந்து, நாளெல்லாம் துயரத்தில் மூழ்கி வாழ்கிறேன்.
சங்கீதம் 38 : 7 (RCTA)
என் இடுப்பெல்லாம் வீங்கி நலிவடைந்துள்ளது: என் உடலில் நலமான உறுப்பெதுவுமே இல்லை.
சங்கீதம் 38 : 8 (RCTA)
நலிவடைந்து நான் மிக நொறுங்குண்டேன்: என் நெஞ்சம் ஏங்கியதால் நான் தேம்பி அழலானேன்.
சங்கீதம் 38 : 9 (RCTA)
ஆண்டவரே, என் விருப்பம் எல்லாம் நீர் அறிந்துள்ளீர்: என் புலம்பலை நீர் அறியாமலில்லை.
சங்கீதம் 38 : 10 (RCTA)
என் நெஞ்சம் துடிக்கிறது: பலங்குன்றிப் போனேன், என் கண் பார்வையே மங்கிப் போனது.
சங்கீதம் 38 : 11 (RCTA)
என் நண்பர், என் தோழர் எல்லாருமே என் துன்ப நேரத்தில் தொலைவில் நின்றார்கள்: என் உறவினரும் என்னை அணுகவில்லை.
சங்கீதம் 38 : 12 (RCTA)
என் உயிரைப் பறிக்கத் தேடுவோர் எனக்குக் கண்ணி வைக்கின்றனர்: எனக்குத் தீமை செய்ய விரும்புவோர், கேடு வருமென அச்சுறுத்துகின்றனர்; எப்போதும் எனக்கெதிராய்ச் சூழ்ச்சி செய்கின்றனர்.
சங்கீதம் 38 : 13 (RCTA)
யானோவெனில் செவிடன் போல் கேளாமல் இருக்கிறேன்: ஊமை போல் வாய் திறவாமல் நிற்கிறேன்.
சங்கீதம் 38 : 14 (RCTA)
கேள்வியற்ற மனிதன் போல் ஆனேன்: பேச்சற்றவனுக்கு நிகரானேன்.
சங்கீதம் 38 : 15 (RCTA)
ஆண்டவரே, என் நம்பிக்கை எல்லாம் உம்மீதே வைத்திருக்கிறேன்: ஆண்டவராகிய என் இறைவா, என் மன்றாட்டை நீர் கேட்டருள்வீர்.
சங்கீதம் 38 : 16 (RCTA)
என் அடி சறுக்கும் போது, என்னைப் பார்த்து மகிழ்ச்சியுற விடாதீர்: எனக்கெதிராய் பெருமை கொள்ள விடாதீர்" என்று வேண்டுகிறேன்.
சங்கீதம் 38 : 17 (RCTA)
சறுக்கி விழும் றிலையில் இருக்கிறேன்; என் வருத்தம் எந்நேரமும் என் கண் முன்னே இருக்கின்றது.
சங்கீதம் 38 : 18 (RCTA)
என் குற்றத்தை நான் ஒப்புக்கொள்கிறேன்: நான் செய்த பாவத்தினிமித்தம் நான் பெரிதும் கவலையுற்றிருக்கிறேன்.
சங்கீதம் 38 : 19 (RCTA)
காரணமின்றி என்னை எதிர்ப்பவர்கள் வலிமை மிக்கவர்கள்: அநியாயமாய் என்னைப் பகைப்பவர் பலராயுளர்!
சங்கீதம் 38 : 20 (RCTA)
நன்மைக்குத் தீமை செய்பவர் பலர்: நான் நன்மையைக் கடைப்பிடிப்பதால் என்னைத் தாக்குபவர் பலர்.
சங்கீதம் 38 : 21 (RCTA)
ஆண்டவரே, என்னைக் கைவிடாதேயும்: என் இறைவா, எனக்கு வெகு தொலைவிலிராதேயும்.
சங்கீதம் 38 : 22 (RCTA)
எனக்கு உதவி புரிய விரைந்து வாரும்: ஆண்டவரே, என் மீட்பரே, விரைந்து வாரும்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22