சங்கீதம் 36 : 1 (RCTA)
தீமையானது பாவியின் மனத்தைத் தூண்டுகிறது: அவன் மனக்கண் முன் இறை அச்சம் என்பதே இல்லை.
சங்கீதம் 36 : 2 (RCTA)
தன் குற்றம் வெளியாகாது, வெறுப்புக்குள்ளாகாது என்று நினைத்து வீண் நம்பிக்கை கொள்கிறான்.
சங்கீதம் 36 : 3 (RCTA)
அவன் பேசுவதெல்லாம் கொடுமையும் வஞ்சகமுமே: நல்லறிவு கொண்டு நன்மை செய்வதை நிறுத்தி விட்டான்.
சங்கீதம் 36 : 4 (RCTA)
தூங்கும் போது கூட அவன் நினைத்துக் கொண்டு இருப்பதெல்லாம் அக்கிரமமே: நெறிகெட்ட வழியில் அவன் நடக்கிறான்; தீய வழியை விட்டு அவன் விலகுவதில்லை.
சங்கீதம் 36 : 5 (RCTA)
ஆண்டவரே, உமது அருளன்பு வானங்கள் வரைக்கும் உயர்ந்துள்ளது: உமது சொல்லுறுதி மேகங்களையே எட்டுகிறது.
சங்கீதம் 36 : 6 (RCTA)
உம்முடைய நீதி மிக உயர்ந்த மலைகள் போல உயர்ந்துள்ளன; உம் நியாயத் தீர்ப்புகள் அடி காணாத கடல் போல் ஆழ்ந்துள்ளன: ஆண்டவரே, மனிதர்களையும் விலங்குகளையும் நீர் காப்பாற்றுகிறீர்.
சங்கீதம் 36 : 7 (RCTA)
இறைவா, உமதருள் எவ்வளவு உயிர்மதிப்புள்ளது! மனுமக்கள் உம் இறக்கைகளின் நிழலில் வந்து அடைக்கலம் புகுகின்றனர்.
சங்கீதம் 36 : 8 (RCTA)
உமது வீட்டில் உள்ள செழுமையால் அவர்கள் நிறைவு கொள்கின்றனர்: உம் பேரின்ப நீரோடையில் அவர்களது தாகத்தைத் தணிக்கின்றீர்.
சங்கீதம் 36 : 9 (RCTA)
ஏனெனில், உயிர்தரும் ஊற்று உம்மிடமே உள்ளது: உமது ஒளியிலே நாங்கள் ஒளி காண்போம்.
சங்கீதம் 36 : 10 (RCTA)
உம்மை வணங்குபவர்களுக்கு உமது இரக்கத்தையும், செம்மையான நெஞ்சினர்க்கு உமது நேர்மையையும் காண்பித்தருளும் .
சங்கீதம் 36 : 11 (RCTA)
செருக்குள்ளவன் என்னை நசுக்க விடாதேயும்: பாவியின் கையில் நான் அகப்பட விடாதேயும்.
சங்கீதம் 36 : 12 (RCTA)
தீமை செய்தவர்கள் இதோ அழிந்து போயினர், வீழ்த்தப்பட்டார்கள்: அவர்கள் மீண்டும் எழப்போவதில்லை.
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12