சங்கீதம் 35 : 1 (RCTA)
ஆண்டவரே, என்னோடு வழக்காடுபவனுடன் நீர் வழக்குத் தொடுத்தருளும்: என்னைத் தாக்குபவன் மீது நீரே போர் தொடுத்தருளும்.
சங்கீதம் 35 : 2 (RCTA)
கேடயத்தையும் பரிசையையும் உம் கையில் எடுத்துக் கொள்ளும்: எனக்குத் துணையாக எழுந்தருளும்.
சங்கீதம் 35 : 3 (RCTA)
உம் கையில் ஈட்டியை ஓங்கி என்னைத் துண்புறுத்துவோரை வழிமறித்தருளும்: 'உன் பாதுகாப்பு நாமே' என்று என்னிடம் சொல்லியருளும்.
சங்கீதம் 35 : 4 (RCTA)
என் உயிரைப் பறிக்கத் தேடுவோர் ஏமாற்றமடைவார்களாக, வெட்கமுறுவார்களாக: எனக்குத் தீமை செய்ய நினைப்போர் பின்னடைவார்களாக, நாணித் தலை குனிவார்களாக.
சங்கீதம் 35 : 5 (RCTA)
ஆண்டவரின் தூதர் அவர்களை விரட்டிச் செல்ல, அவர்கள் காற்றில் பறக்கும் பதர் போலாவார்களாக.
சங்கீதம் 35 : 6 (RCTA)
ஆண்டவருடைய தூதர் அவர்களைத் துரத்திச் செல்ல, அவர்கள் செல்லும் வழி இருள் மிக்கதும் வழுக்கலுமாயிருப்பதாக.
சங்கீதம் 35 : 7 (RCTA)
ஏனெனில், காரணம் எதுவுமின்றி எனக்கு அவர்கள் கண்ணி வைத்தார்கள்: காரணமின்றி அவர்கள் என் உயிரை வாங்கப் படுகுழி வெட்டினார்கள்.
சங்கீதம் 35 : 8 (RCTA)
எதிர்பாராத அழிவு அவர்களுக்கு வருவதாக, அவர்கள் விரித்த வலையில் அவர்களே பிடிபடுவார்களாக: அவர்கள் வெட்டிய குழியில் அவர்களே விழுவார்களாக.
சங்கீதம் 35 : 9 (RCTA)
என் உள்ளமோ ஆண்டவரில் அக்களிப்புக்கொள்ளும்: அவர் அருளிய மீட்பை நினைத்து மகிழ்ச்சி கொள்ளும்.
சங்கீதம் 35 : 10 (RCTA)
எனக்குள்ள வலிமையெல்லாம்: 'ஆண்டவரே உமக்கு இணை யார்? வலிமை மிக்கவனிடமிருந்து எளியவனை விடுவிக்கும் உமக்கு, கொள்ளையடிப்பவனிடமிருந்து துயருற்றவனையும் ஏழையையும் காக்கும் உமக்கு இணை யார்?' என்கிறது.
சங்கீதம் 35 : 11 (RCTA)
வன்னெஞ்சச் காட்சிகள் எழுந்தனர்: என்ன வென்றும் அறியாத காரியங்களைப் பற்றி என்னிடம் கேள்வி கேட்டனர்.
சங்கீதம் 35 : 12 (RCTA)
நான் செய்த நன்மைக்குப் பதிலாக எனக்குத் தீமையே செய்தனர்: என் நெஞ்சம் ஆழ்துயரில் அமிழ்ந்தச் செய்தனர்.
சங்கீதம் 35 : 13 (RCTA)
நனோ அவர்கள் நோயுற்றிருக்கையில் சாக்குத்துணி அணிந்து, நோன்பிருந்து என்னை வாட்டிக் கொண்டேன்: என்னுள்ளே வெகுவாய்ச் செபம் செய்தேன்.
சங்கீதம் 35 : 14 (RCTA)
அவனை என் நண்பன், என் சகோதரன் போல் நினைத்துத் துயர் கொண்டேன்: தன் தாயை நினைத்துத் துயருறுபவன் போல் துயர் கொண்டு அலைந்தேன்.
சங்கீதம் 35 : 15 (RCTA)
ஆனால் நான் தளர்ச்சியுற்றபோது அவர்கள் ஒன்று கூடி மகிழ்ந்தனர்: எதிர்பாராத நேரத்தில் எனக்கெதிராய் ஒன்று கூடி என் மேல் பாய்ந்தார்கள்.
சங்கீதம் 35 : 16 (RCTA)
ஓயாமல் என் மேல் பழி சுமத்தினார்கள்; சோதனைக்குள்ளாக்கினார்கள்; ஏளனத்துக்கு உட்படுத்தினார்கள்: பல்லைக் கடித்து கொண்டு என் மீது விழுந்தார்கள்.
சங்கீதம் 35 : 17 (RCTA)
ஆண்டவரே எதுவரைக்கும் இதைப் பார்த்துக்கொண்டிருப்பீர்? கர்ஜனை செய்து தாக்குவோரிடமிருந்து, சிங்கங்களிடமிருந்து என் உயிரைக் காத்தருளும்.
சங்கீதம் 35 : 18 (RCTA)
பெருங்கூட்டத்தில் நான் உமக்கு நன்றி செலுத்துவேன்: திரளான பெருமக்களிடையே உம்மைப் புகழ்வேன்.
சங்கீதம் 35 : 19 (RCTA)
வஞ்சகரான என் எதிரிகள் என் மீது வெற்றி கொண்டு மகிழ விடாதேயும்: காரணமின்றி என்னைப் பகைப்பவர் கண் சிமிட்ட விடாதேயும்.
சங்கீதம் 35 : 20 (RCTA)
அவர்கள் பேசுவது அமைதிப் பேச்சன்று: நாட்டில் அமைதியுடன் வாழ்வோருக்கு, வஞ்சகமாய்க் கெடுதி செய்வதே அவர்கள் நினைவெல்லாம்.
சங்கீதம் 35 : 21 (RCTA)
என்னை எதிர்த்து அவர்கள் தம் வாயை அகலத் திறக்கின்றனர்: 'ஆ, ஆ, எங்கள் கண்ணாலேயே பார்த்தோமே' என்கின்றனர்.
சங்கீதம் 35 : 22 (RCTA)
ஆண்டவரே, நீர் இதைப் பார்த்தீரன்றோ: பேசாமலிராதேயும் ஆண்டவரே, என்னை விட்டுத் தொலைவில் போய் விடாதேயும்.
சங்கீதம் 35 : 23 (RCTA)
என் இறைவா, என் ஆண்டவரே, என் வழக்கைத் தீர்க்க எழுந்து வாரும்: எனக்குப் பாதுகாப்பளிக்க விழித்தெழும்.
சங்கீதம் 35 : 24 (RCTA)
ஆண்டவரே, உம் நீதிக்கேற்ப என் வழக்கைத் தீர்த்தருளும்: என் இறைவா, அவர்கள் என் மேல் வெற்றி கொண்டு மகிழ்ச்சியுற விடாதேயும்.
சங்கீதம் 35 : 25 (RCTA)
ஆ, ஆ, நாம் விரும்பியது போலாயிற்று' என்று அவர்கள் தம் உள்ளத்தில் நினைக்கவிடாதேயும்: 'அவனை விழுங்கி விட்டோம்' என்று அவர்கள் சொல்ல விடாதேயும்.
சங்கீதம் 35 : 26 (RCTA)
எனக்கு நேர்ந்த இடர்களை நினைத்து மகிழ்ச்சியுறும் அவர்களனைவரும், ஒன்றாய்க் கலங்கி வெட்கமுறுவார்களாக.
சங்கீதம் 35 : 27 (RCTA)
எனக்கு எதிராகத் தலைதூக்குபவர்கள், வெட்கமும் மானக்கேடும் அடைவார்களாக; எனக்குச் சார்பாய்ப் பேசுபவர்கள் அக்களித்து அகமகிழ்வார்களாக: 'தம் ஊழியனின் நலத்தைக் காக்கும் ஆண்டவரது பெருமை விளங்கட்டும்' என்று எப்பொதும் சொல்வார்களாக.
சங்கீதம் 35 : 28 (RCTA)
என் நாவோ உமது நீதியை எடுத்துரைக்கும்: உமது புகழை என்றென்றும் பாடும்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28