சங்கீதம் 34 : 1 (RCTA)
ஆண்டவரை நான் எந்நேரமும் போற்றுவேன்: அவரது புகழ் எப்போதும் என் நாவில் ஒலிக்கும்.
சங்கீதம் 34 : 2 (RCTA)
என் ஆன்மா ஆண்டவரில் பெருமைகொள்ளும்: சிறுமையுற்றோர் இதைக் கேட்டு அக்களிப்பார்களாக.
சங்கீதம் 34 : 3 (RCTA)
என்னோடு ஆண்டவரை மகிமைப்படுத்துங்கள்: எல்லோரும் சேர்ந்து அவரது பெயரைப் புகழ்ந்தேத்துவோம்.
சங்கீதம் 34 : 4 (RCTA)
நான் ஆண்டவரைத் தேடினேன்; அவர் என் மன்றாட்டைக் கேட்டருளினார்: எல்லாவித அச்சத்தினின்றும் என்னை விடுவித்தார்.
சங்கீதம் 34 : 5 (RCTA)
அவரை நோக்குங்கள், மகிழ்ச்சி அடைவீர்கள்: வெட்கத்தால் தலைகுனிய மாட்டீர்கள்.
சங்கீதம் 34 : 6 (RCTA)
இதோ! திக்கற்றவன் கூவியழைக்க, ஆண்டவர் அவன் குரலைக் கேட்டார்: எல்லா நெருக்கடியினின்றும் அவனை விடுவித்தார்.
சங்கீதம் 34 : 7 (RCTA)
ஆண்டவருக்கு அஞ்சி வாழ்வோரைச் சுற்றி, அவருடைய தூதர் பாளையம் இறங்கிக் காத்திடுவார்.
சங்கீதம் 34 : 8 (RCTA)
ஆண்டவர் எவ்வளவு நல்லவர் என்று சுவைத்துப் பாருங்கள்; அவரிடம் தஞ்சம் புகுவோன் பேறு பெற்றவன்.
சங்கீதம் 34 : 9 (RCTA)
ஆண்டவருடைய புனிதர்களே, அவருக்கு அஞ்சுங்கள்: ஏனெனில், அவருக்கு அஞ்சுவோருக்கு எதுவும் குறைவுபடாது.
சங்கீதம் 34 : 10 (RCTA)
வலிமையுற்றோர் வறிஞராய்ப் பசியுற்றார்; ஆண்டவரைத் தேடுவோர்க்கோ எந்த நன்மையும் குறைவுபடாது.
சங்கீதம் 34 : 11 (RCTA)
வாரீர் மக்களே, நான் சொல்வதைக் கேளீர்: உங்களுக்குத் தேவ பயத்தைக் கற்பிப்பேன்.
சங்கீதம் 34 : 12 (RCTA)
வாழ்க்கை மீது பற்றுதல் கொண்டுள்ளவன் யார்? நலன்களைத் துய்க்க நீடிய வாழ்வை விரும்பும் மனிதன் யார்?
சங்கீதம் 34 : 13 (RCTA)
உன் நாவை நீ தீமையினின்றி காத்திடு: வஞ்சக மொழி பேச வாயெடுக்காதிரு.
சங்கீதம் 34 : 14 (RCTA)
தீமையைத் தவிர்த்து நன்மை செய்: சமாதானத்தை விரும்பித் தேடு.
சங்கீதம் 34 : 15 (RCTA)
ஆண்டவருடைய கண்கள் நீதிமான்களை நோக்குகின்றன; அவருடைய செவிகள் அவர்களது குரலைக் கேட்கின்றன.
சங்கீதம் 34 : 16 (RCTA)
ஆண்டவருடைய முகம் தீயோரை எதிர்த்து நிற்கின்றது: ஆண்டவர் பூமியிலிருந்து அவர்களுடைய நினைவையே எடுத்து விடுவார்.
சங்கீதம் 34 : 17 (RCTA)
நீதிமான்கள் கூக்குரலிட்டனர்; ஆண்டவர் அவர்களுக்குச் செவி சாய்த்தார்: எல்லாத் துன்பங்களினின்றும் விடுவித்தார்.
சங்கீதம் 34 : 18 (RCTA)
உள்ளம் நொறுங்குண்டவர்களுக்கு அருகிலேயே உள்ளார் ஆண்டவர்: மனம் நைந்தவர்களைக் காத்தருள்வார்.
சங்கீதம் 34 : 19 (RCTA)
நீதிமானின் துயரங்கள் பல: ஆனால் அவயைனைத்தினின்றும் ஆண்டவர் அவனைக் கடைத்தேற்றுவார்.
சங்கீதம் 34 : 20 (RCTA)
அவர்களுடைய எலும்புகளையெல்லாம் காப்பாற்றுவார்: அவற்றில் ஒன்று முதலாய் நொறுங்காது.
சங்கீதம் 34 : 21 (RCTA)
தீயோரைத் தீவினையே சாகடிக்கும்: நீதிமான்களைப் பகைப்பவர்களோ தண்டனைக்குள்ளாவர்கள்.
சங்கீதம் 34 : 22 (RCTA)
தம் ஊழியரின் ஆத்துமங்களை ஆண்டவர் மீட்கிறார்: அவரிடம் அடைக்கலம் புகுபவன் எவனும் தண்டனையடையான்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22