சங்கீதம் 33 : 1 (RCTA)
நீதிமான்களே, ஆண்டவரில் அகமகிழுங்கள்: நேர்மனத்தோர் அவரைப் புகழ்வது தகுமே.
சங்கீதம் 33 : 2 (RCTA)
யாழினால் ஆண்டவரைப் புகழுங்கள்: பத்து நரம்பு வீணையால் அவரது புகழ் பாடுங்கள்.
சங்கீதம் 33 : 3 (RCTA)
ஆண்டவருக்குப் புதியதொரு பாடலைப் பாடுங்கள்: மகிழ்ச்சிக் குரலில் நன்றாகப் பாடுங்கள்.
சங்கீதம் 33 : 4 (RCTA)
ஏனெனில், ஆண்டவருடைய வார்த்தை நேர்மையானது: அவருடைய செயல்கள் எல்லாம் உண்மையானவை.
சங்கீதம் 33 : 5 (RCTA)
நீதியும் நேர்மையும் அவர் விரும்புகிறார்: அவருடைய அருளால் பூமி நிறைந்துள்ளது.
சங்கீதம் 33 : 6 (RCTA)
ஆண்டவருடைய வார்த்தையால் வானங்கள் உண்டாயின: அவரது சொல்லால் வான் அணிகள் எல்லாம் உருவாயின.
சங்கீதம் 33 : 7 (RCTA)
குடத்தில் தண்ணீர் எடுப்பது போல் அவர் கடல் நீரை ஒன்றுசேர்க்கிறார்: பாத்திரங்களில் தண்ணீரை வைப்பது போல் ஆழ்கடலை அடைத்து வைத்திருக்கிறார்.
சங்கீதம் 33 : 8 (RCTA)
பூவுலகெல்லாம் ஆண்டவருக்கு அஞ்சுவதாக: அதில் வாழ்வோரெல்லாரும் அவருக்கு அஞ்சுவார்களாக.
சங்கீதம் 33 : 9 (RCTA)
ஏனெனில், அவர் ஒரு வார்த்தை சொல்லவே, எல்லாம் உண்டாயின: அவர் கட்டளையிடவே அவை உருவாயின.
சங்கீதம் 33 : 10 (RCTA)
மக்கள் இனங்களின் திட்டங்களை ஆண்டவர் சிதறடிக்கிறார்: மக்களின் எண்ணங்களைப் பயனற்றவை ஆக்குகிறார்.
சங்கீதம் 33 : 11 (RCTA)
ஆண்டவருடைய திட்டங்கள் என்றென்றும் நிலைத்திருக்கும்: அவருடைய எண்ணங்கள் தலைமுறை தலைமுறையாய் நீடித்திருக்கும்.
சங்கீதம் 33 : 12 (RCTA)
ஆண்டவரைத் தம் கடவுளாகக் கொள்ளும் மக்கள் இனம் பேறு பெற்றது: தமது உரிமைப் பொருளாக அவர் தேர்ந்தெடுத்த மக்கள் பேறு பெற்றவர்கள்.
சங்கீதம் 33 : 13 (RCTA)
வானுலகிலிருந்து ஆண்டவர் பார்க்கிறார்: ஆதாமின் மக்கள் எல்லாரையும் பார்க்கிறார்.
சங்கீதம் 33 : 14 (RCTA)
பூவில் வாழ்வோர் அனைவரையும், அவர் தம் உறைவிடத்தினின்று நோக்குகிறார்.
சங்கீதம் 33 : 15 (RCTA)
அனைவருடைய நெஞ்சங்களையும் உருவாக்கின அவர், அவர்கள் செய்வதையெல்லாம் கவனிக்கிறார்.
சங்கீதம் 33 : 16 (RCTA)
அரசன் வெற்றி பெறுவது பெரிய சேனையினால் அன்று: போர் வீரன் தன்னைக் காத்துக் கொள்வது மிகுந்த வன்மையினால் அன்று.
சங்கீதம் 33 : 17 (RCTA)
குதிரைகளால் வெற்றி பெறுவது நிச்சயமன்று: அவற்றின் வலிமை பாதுகாப்பு தரும் என்பது உறுதியன்று.
சங்கீதம் 33 : 18 (RCTA)
இதோ தமக்கு அஞ்சுபவர்களை ஆண்டவர் பார்க்கிறார்: தமது அருளை நம்புவோரை அவர் கண் நோக்குகிறார்.
சங்கீதம் 33 : 19 (RCTA)
அவர்களைச் சாவினின்று விடுவிக்கவும், பஞ்ச காலத்தில் அவர்களுக்கு உணவு கொடுக்கவுமே அவர் பார்க்கிறார்.
சங்கீதம் 33 : 20 (RCTA)
நம் ஆன்மா ஆண்டவருக்காகக் காத்திருக்கின்றது: அவரே நமக்கு உதவியும் கேடயமுமாயிருக்கிறார்.
சங்கீதம் 33 : 21 (RCTA)
அவரில் நம் உள்ளம் மகிழ்கின்றது: அவருடைய திருப்பெயரில் நம்பிக்கை வைக்கிறோம்.
சங்கீதம் 33 : 22 (RCTA)
ஆண்டவரே, உம் இரக்கம் எம்மீது இருப்பதாக: நாங்கள் உம்மை நம்பியிருக்கும் அளவுக்கு உம் இரக்கமும் இருப்பதாக.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22