சங்கீதம் 29 : 1 (RCTA)
வானோர்களே, ஆண்டவரை வாழ்த்துங்கள்: மாட்சியும் வல்லமையும் ஆண்டவருக்குரியதென வாழ்த்துங்கள்.
சங்கீதம் 29 : 2 (RCTA)
ஆண்டவரது பெயருக்கு உரிய மகிமையை அவருக்குச் செலுத்துங்கள்: அவருடைய திருமன்றத்தில் அவரை வழிபடுங்கள்.
சங்கீதம் 29 : 3 (RCTA)
நீர்த்திரள்களின் மீது ஆண்டவரின் குரல் ஒலிக்கின்றது, மகத்துவமிக்க ஆண்டவர் பேரிடி முழங்குகின்றார்: நீர்ப்பரப்பின் மீது ஆண்டவர் விளங்குகின்றார்.
சங்கீதம் 29 : 4 (RCTA)
ஆண்டவருடைய குரல் வலிமை வாய்ந்தது, அவருடைய குரல் மாட்சிமை மிக்கது,
சங்கீதம் 29 : 5 (RCTA)
ஆண்டவருடைய குரல் கேதுரு மரங்களை முறித்தெறிகிறது: லீபான் மலையின் கேதுரு மரங்களை ஆண்டவர் பெயர்த்தெறிகிறார்.
சங்கீதம் 29 : 6 (RCTA)
லீபான் மலையை அவர் கன்றுக்குட்டி போல் துள்ளச் செய்கிறார்: சாயியோன் மலையை இளம் காட்டெருது போல் துள்ளி விழச் செய்கிறார்.
சங்கீதம் 29 : 7 (RCTA)
ஆண்டவருடைய குரல் நெருப்புத் தழலை எழச்செய்கிறது.
சங்கீதம் 29 : 8 (RCTA)
ஆண்டவருடைய குரல் பாலைவனத்தை அதிரச் செய்கிறது: காதோஷ் பாலைவெளியை அதிரச் செய்கிறது.
சங்கீதம் 29 : 9 (RCTA)
ஆண்டவருடைய குரல் கருவாலி மரங்களை முறித்து விடுகிறது; காடுகளை அழித்து வெறுமை ஆக்குகிறது: அவரது ஆலயத்தில் எல்லாரும், 'போற்றி! போற்றி!' என்று ஆர்ப்பரிக்கின்றனர்.
சங்கீதம் 29 : 10 (RCTA)
வெள்ளப்பெருக்கின் மீது விளங்குகின்றார் ஆண்டவர்: என்றென்றும் அரசரென வீற்றிருப்பார் ஆண்டவர்.
சங்கீதம் 29 : 11 (RCTA)
ஆண்டவர் தம் மக்களுக்கு வலிமையைத் தந்தருள்வார்: அமைதியளித்து அவர்களுக்கு ஆசியளிப்பார்.
❮
❯