சங்கீதம் 25 : 1 (RCTA)
ஆண்டவரே, என் இறைவா, உம்மை நோக்கி உன் உள்ளம் தாவுகின்றது.
சங்கீதம் 25 : 2 (RCTA)
உம் மீது நம்பிக்கை வைக்கிறேன்; நான் ஏமாற்றம் அயை விடாதேயும்: என் எதிரிகள் என் நிலையைக் கண்டு அக்களிக்க விடாதேயும்.
சங்கீதம் 25 : 3 (RCTA)
ஏனெனில், உம்மை நம்பும் எவரும் வெட்கிப்போகார்: கண் மூடித்தனமாய் வாக்குறுதி தவறுவோரே வெட்கிப் போவார்.
சங்கீதம் 25 : 4 (RCTA)
ஆண்டவரே, உம் வழிகளை எனக்குக் காட்டியருளும்: உம் நெறிகளை எனக்குக் கற்பித்தருளும்.
சங்கீதம் 25 : 5 (RCTA)
உம் உண்மை என்னும் நெறியில் என்னை நடத்தி எனக்கு அறிவு புகட்டியருளும்: என் மீட்பாரம் இறைவன் நீரே, என்றும் உம்மீது நம்பிக்கை வைத்திருக்கிறேன்.
சங்கீதம் 25 : 6 (RCTA)
ஆண்டவரே, உம் இரக்கப் பெருக்கத்தை நினைவுகூரும்: ஆதி கால முதல் உள்ள உம் அருளன்பை மறவாதேயும்.
சங்கீதம் 25 : 7 (RCTA)
இளமையில் நான் செய்த பாவங்களையும் குற்றங்களையும் நினையாதேயும்: உம் அருள் அன்பிற்கேற்ப என்னை நினைவு கூரும், உமது அருள் நன்மையின் பொருட்டென்னை மறவாதேயும்.
சங்கீதம் 25 : 8 (RCTA)
அண்டவர் நல்லவர், நேர்மையுள்ளவர்: ஆகவே, பாவிகளுக்கு நல்வழி கற்பிப்பார்.
சங்கீதம் 25 : 9 (RCTA)
நீதி நெறியில் எளியோரை நடத்துவார்: எளியோர்க்குத் தம் வழியைக் கற்பிப்பார்.
சங்கீதம் 25 : 10 (RCTA)
ஆண்டவருடைய உடன்படிக்கையையும் கட்டளைகளையும் கடைப்பிடிப்போர்க்கு, அவருடைய வழிகள் எல்லாம் அருளும் உண்மையும் கொண்டவை.
சங்கீதம் 25 : 11 (RCTA)
ஆண்டவரே, உமது பெயரின் பொருட்டு என் பாவத்தை மன்னிப்பீர்: பெரிது நான் செய்த பாவம்.
சங்கீதம் 25 : 12 (RCTA)
ஆண்டவருக்கு அஞ்சி நடப்பவன் யார்? தான் தேர்ந்துகொள்ள வேண்டிய வழியை அவனுக்குக் கற்பிப்பார்.
சங்கீதம் 25 : 13 (RCTA)
நலன்கள் மிக்கவனாய் அவன் வாழ்வான்: அவனுடைய வழிவந்தோர் மாநிலத்தை உரிமையாக்கிக் கொள்வர்.
சங்கீதம் 25 : 14 (RCTA)
தமக்கு அஞ்சி நடப்போரிடம் ஆண்டவர் அன்புறவு கொண்டுள்ளார்: தமது உடன்படிக்கையை அவர்களுக்கு வெளிப்படுத்துகின்றார்.
சங்கீதம் 25 : 15 (RCTA)
என் கண்கள் எந்தாளும் ஆண்டவரை நோக்கித் திரும்பியுள்ளன: ஏனெனில் கண்ணியில் விழாமல் என் அடிகளை அவர் காத்துக்கொள்வார்.
சங்கீதம் 25 : 16 (RCTA)
ஆண்டவரே, என்னைக் கண்ணோக்கி எனக்கு அருள் கூரும்: ஏனெனில், நான் துணையற்றவனும் துயர் மிக்கவனும் ஆனேன்.
சங்கீதம் 25 : 17 (RCTA)
என் இதயத்தின் கலக்கத்தைத் தணித்தருளும்: என் கவலைகளினின்று என்னை விடுவித்தருளும்.
சங்கீதம் 25 : 18 (RCTA)
என் துன்ப துயரத்தைக் கண்ணோக்கும்: என் குற்றங்கள் அனைத்தையும் மன்னியும்.
சங்கீதம் 25 : 19 (RCTA)
என் எதிரிகளைப் பாரும்; அவர்கள் மிகப்பலர்: கடும் பகைகொண்டு என்னை வெறுக்கின்றனர்.
சங்கீதம் 25 : 20 (RCTA)
என் உயிரைக் காத்து என்னை விடுவியும்: உம்மிடம் அடைக்கலம் புகுந்த நான் தலைகுனிய விடாதேயும்.
சங்கீதம் 25 : 21 (RCTA)
மாசின்மையும் நேர்மையும் எனக்குப் பாதுகாப்பாக இருக்கட்டும்; ஏனெனில் ஆண்டவரே, உம்மை நான் நம்பியுள்ளேன்:
சங்கீதம் 25 : 22 (RCTA)
இறைவா, இஸ்ராயேலர் படும் துன்பங்கள் அனைத்தினின்றும் அவர்களை விடுவித்தருளும்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22

BG:

Opacity:

Color:


Size:


Font: