சங்கீதம் 24 : 1 (RCTA)
மண்ணுலகும் அதில் நிறைந்த யாவும் ஆண்டவருடையன: பூவுலகும் அதில் வாழும் குடிகள் யாவரும் அவர் தம் உடைமையே.
சங்கீதம் 24 : 2 (RCTA)
ஏனென்றால், கடல்களின் மீது பூவுலகை நிலை நிறுத்தியவர் அவரே: ஆறுகளின் மீது அதை நிலை நாட்டியவர் அவரே.
சங்கீதம் 24 : 3 (RCTA)
ஆண்டவரது மலை மீது ஏறிச் செல்லத் தகுந்தவன் யார்? அவரது திருத்தலத்தில் நிற்கக் கூடியவர் யார்?
சங்கீதம் 24 : 4 (RCTA)
மாசற்ற செயலினன், தூய உள்ளத்தினன், பயனற்றதில் மனத்தை செலுத்தாதவன்: தன் அயலானுக்கு எதிராக வஞ்சகமாய் ஆணையிடாதவன் .
சங்கீதம் 24 : 5 (RCTA)
இவனே ஆண்டவரிடம் ஆசி பெறுவான்: இவனே தன்னைக் காக்கும் ஆண்டவரிடம் மீட்பு அடைவான்.
சங்கீதம் 24 : 6 (RCTA)
இறைவனைத் தேடும் மக்களினம் இதுவே: யாக்கோபின் கடவுளது திருமுகம் நாடுவோர் இவர்களே.
சங்கீதம் 24 : 7 (RCTA)
வாயில்களே, உங்கள் நிலைகளை உயர்த்துங்கள்; பழங்காலக் கதவுகளே, உயர்ந்து நில்லுங்கள்: மாட்சிமிகு மன்னர் உள்ளே நுழையட்டும்!
சங்கீதம் 24 : 8 (RCTA)
மாட்சி மிகு மன்னர் இவர் யாரோ?' 'வீரமும் வலிமையும் கொண்ட ஆண்டவரே இவர்: போரில் வல்லவரான ஆண்டவரே இவர்!'
சங்கீதம் 24 : 9 (RCTA)
வாயில்களே, உங்கள் நிலைகளை உயர்த்துங்கள்; பழங்காலக் கதவுகளே, உயர்ந்து நில்லுங்கள்: மாட்சிமிகு மன்னர் உள்ளே நுழையட்டும்!
சங்கீதம் 24 : 10 (RCTA)
மாட்சிமிகு மன்னர் இவர் யாரோ?' சோனைகளின் ஆண்டவரே இவர்: மாட்சிமிகு மன்னர் இவரே!'

1 2 3 4 5 6 7 8 9 10

BG:

Opacity:

Color:


Size:


Font: