சங்கீதம் 21 : 1 (RCTA)
ஆண்வரே உமது வல்லமையை நினைத்து அரசர் மகிழ்வுறுகிறார்: நீர் தரும் உதவியை நினைத்து எவ்வளவோ அக்களிப்புக் கொள்கின்றார்.
சங்கீதம் 21 : 2 (RCTA)
அவரது உள்ளத்தின் விருப்பம் நிறைவேறச் செய்தீர்: வாய் திறந்து அவர் உம்மிடம் கேட்டதை நீர் புறக்கணிக்கவில்லை.
சங்கீதம் 21 : 3 (RCTA)
அவரை எதிர்கொண்டுபோய் நலமிக்க ஆசியை நிரம்ப அளித்தீர்: அவர் தலையில் தூயதங்கத்தாலான முடியைச் சூட்டினீர்.
சங்கீதம் 21 : 4 (RCTA)
வாழ்வளிக்கும்படி அவர் உம்மிடம் கேட்டார்: நீரும் நீடிய வாழ்வை அவருக்கு அளித்தீர்.
சங்கீதம் 21 : 5 (RCTA)
உம் துணையால் அவருக்கு கிடைத்தது பெரு மாண்பு: மகத்துவமும் மேன்னையும் அவருக்கு ஆடையாக உடுத்தினீர்.
சங்கீதம் 21 : 6 (RCTA)
என்றென்றும் அவர் ஆசி மிக்கவராகச் செய்தீர்: உம் திருமுன் மகிழ்ச்சி மிக்கவராய் விளங்கச் செய்தீர்.
சங்கீதம் 21 : 7 (RCTA)
ஏனெனில், ஆண்டவரில் தான் அரசர் நம்பிக்கை கொண்டிருக்கிறார்: உன்னதரின் அருளை முன்னிட்டு அவர் அசைவுறுவதில்லை.
சங்கீதம் 21 : 8 (RCTA)
உம் எதிரிகள் அனைவரையும் உமது கரம் மேற்கொள்வதாக: உம்மைப் பகைப்பவர்களை உமது வலக்கரம் தேடிப்பிடிப்பதாக.
சங்கீதம் 21 : 9 (RCTA)
நீர் வெளிப்படும்போது, தீச்சூளையில் போடுவது போல அவர்களைத் தொலைத்துவிடும்: ஆண்டவர் அவர்களைத் தம் சினத்தால் தொலைத்து விடுவாராக; நெருப்பு அவர்களை விழுங்கி விடுவதாக.
சங்கீதம் 21 : 10 (RCTA)
அவர்கள் சந்ததியை நாட்டினின்று ஒழித்து விடும்: மனிதரிடையே அவர்கள் மக்கள் இல்லாதொழிவார்களாக
சங்கீதம் 21 : 11 (RCTA)
உமக்குத் தீங்கிழைக்க அவர்கள் திட்டமிட்டாலும், வஞ்சகமாய்ச் சதி செய்தாலும் ஒரு நாளும் வெற்றி காணமாட்டார்கள்.
சங்கீதம் 21 : 12 (RCTA)
ஏனெனில், அவர்களை நீர் விரட்டியடிப்பீர்: அம்புகளை அவர்கள் முகத்தில் எய்வீர்.
சங்கீதம் 21 : 13 (RCTA)
ஆண்டவரே, உம் வல்லமையைக் காட்டி எழுந்தருளும்: உம் வலிமையை நாங்கள் பாடிக் கொண்டாடுவோம்.
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13