சங்கீதம் 19 : 1 (RCTA)
வானங்கள் கடவுளின் மாட்சிமையைச் சாற்றும்: வான மண்டலம் அவரது கைத்திறனை எடுத்துரைக்கும்.
சங்கீதம் 19 : 2 (RCTA)
பகல்தோறும் பகல் அதைத் தெரிவிக்கிறது: இரவு தோறும் இரவு அதை அறிவிக்கிறது.
சங்கீதம் 19 : 3 (RCTA)
அவற்றிற்குச் சொல்லுமில்லை பேச்சுமில்லை: அவற்றின் குரல் செவியில் படுவதுமில்லை.
சங்கீதம் 19 : 4 (RCTA)
எனினும், அவற்றின் குரல் உலகெலாம் கேட்கிறது: அவை விடுக்கும் செய்தி உலகின் எல்லை வரை எட்டுகிறது;
சங்கீதம் 19 : 5 (RCTA)
அங்கே கடவுள் கதிரவனுக்கு ஒரு கூடாரம் அமைத்துள்ளார்; மணவறையினின்று புறப்படும் மணமகன் போல அவன் எழுகின்றான்: பந்தய வீரனைப்போல அக்களிப்போடு குறித்த வழியில் விரைகின்றான்.
சங்கீதம் 19 : 6 (RCTA)
வானத்தின் ஒரு முனையில் எழுந்து மறுமுனை மட்டும் அவன் செல்லுகிறான்: அவனது அனல் படாதது ஒன்றுமில்லை.
சங்கீதம் 19 : 7 (RCTA)
ஆண்டவரது திருச்சட்டம் சால்புடையது; ஆன்மாவுக்குப் புத்துயிர் ஊட்டுவது: ஆண்டவருடைய கட்டளை உறுதியானது, எளியோருக்கு அறிவூட்டுவது.
சங்கீதம் 19 : 8 (RCTA)
ஆண்டவருடைய கட்டளைகள் நேரியவை; உள்ளத்திற்கு மகிழ்ச்சி ஊட்டுபவை: ஆண்டவரது கற்பனை தூய்மையானது; கண்களுக்கு ஒளியூட்டுவது.
சங்கீதம் 19 : 9 (RCTA)
ஆண்டவர்மீதுள்ள அச்சம் புனிதமானது; என்றென்றும் நிலைத்திருப்பது: ஆண்டவருடைய தீர்ப்புகள் உண்மையானவை; அவை எல்லாம் நீதியானவை.
சங்கீதம் 19 : 10 (RCTA)
பொன்னினும் மணியினும் பெரிதும் விரும்பத் தக்கவை: தேனினும் தேனடையினும் இனிமையானவை.
சங்கீதம் 19 : 11 (RCTA)
உம் ஊழியனும் அவற்றால் பயிற்சி பெறுகிறான்: அவற்றைக் கடைப்பிடிப்பதில் மிக விழிப்பாயிருக்கிறான்.
சங்கீதம் 19 : 12 (RCTA)
குற்றங்குறைகளை யார் கண்டுணர்வர்? எனவே, மறைவாயுள்ள என் குற்றங்களை நீக்கி என்னைப் புனிதப்படுத்தும்.
சங்கீதம் 19 : 13 (RCTA)
தற்பெருமையினின்று உம் ஊழியனைக் காத்தருளும்; அது என்னை அடிமைப்படுத்தாதிருப்பதாக: அப்போது நான் குற்றமற்றவனாகி, பெரும் பாவங்களினின்று விடுபட்டுத் தூயவனாவேன்.
சங்கீதம் 19 : 14 (RCTA)
எனக்கு அடைக்கலமும் என் மீட்பருமான ஆண்டவரே, உம் முன்னிலையில் என் வாய் மொழியும், என் இதயச் சிந்தனையும் உமக்கு உகந்தனவாகட்டும்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14

BG:

Opacity:

Color:


Size:


Font: