சங்கீதம் 16 : 1 (RCTA)
இறைவா, என்னைப் பாதுகாத்தருளும்: உம்மிடன் நான் அடைக்கலம் புகுந்தேன்.
சங்கீதம் 16 : 2 (RCTA)
நீரே என் ஆண்டவர்: உம்மையன்றி எனக்கு வேறு நன்மையில்லை" என்று ஆண்டவரிடம் சொன்னேன்.
சங்கீதம் 16 : 3 (RCTA)
அவருடைய பூமியில் உள்ள புனிதர்கள்பால், எனக்குள்ள மனப்பற்றுதலை எத்துணை வியப்புக்குரியதாக்கினார்!
சங்கீதம் 16 : 4 (RCTA)
வேறு தெய்வங்களை வழிபடுவோர் தங்கள் துன்பங்களைப் பெருக்கிக் கொள்கின்றனர்: அவற்றுக்குச் செய்யப்படும் இரத்தப் பலிகளில் நான் கலந்துகொள்ள மாட்டேன்; அவற்றின் பெயரை முதலாய் நாவால் உச்சரிக்கமாட்டேன்.
சங்கீதம் 16 : 5 (RCTA)
ஆண்டவர் தாமே என் உரிமைச் சொத்து, அவரே என் கிண்ணம்: எனக்குரியதை எனக்கென வைத்திருப்பவர் நீரே.
சங்கீதம் 16 : 6 (RCTA)
மகிழ்ச்சியூட்டும் இடத்தில் எனக்குப் பங்கு கிடைத்தது: என் உரிமைப்பேறு எனக்கு நேர்த்தியானதாயிற்று.
சங்கீதம் 16 : 7 (RCTA)
எனக்கு ஆலோசனை கொடுத்த ஆண்டவரை நான் வாழ்த்துவேன்: இரவில் கூட என் இதயம் எனக்கு அறிவுறை கூறுகிறது.
சங்கீதம் 16 : 8 (RCTA)
ஆண்டவரை நான் எந்நேரமும் என் கண்முன் கொண்டிருக்கிறேன்: அவர் என் வலப்பக்கத்தில் இருப்பதால் நான் அசைவுறேன்.
சங்கீதம் 16 : 9 (RCTA)
இதனால் என் இதயம் அகமகிழும்; என் உள்ளம் அக்களிக்கும்: என் உடலும் கவலையின்றி இளைப்பாறும்.
சங்கீதம் 16 : 10 (RCTA)
ஏனெனில், என் ஆன்மாவைப் பாதாளத்தில் விட்டுவிட மாட்டீர்: உம் புனிதர் அழிவு காணவிடமாட்டீர்.
சங்கீதம் 16 : 11 (RCTA)
வாழ்வுக்குச் செல்லும் வழியை நீர் எனக்குக் காண்பிப்பீர்: உம் திருமுன் எனக்கு நிறை மகிழ்ச்சியையும், உம் வலக்கையில் இடைவிடா இன்பத்தையும் நீர்¢ காட்டுவீர்.
❮
❯