சங்கீதம் 150 : 1 (RCTA)
அல்லேலூயா! ஆண்டவர் தம் திருத்தலத்தில் அவரைப் புகழ்ந்தேத்துங்கள்: மாண்பு மிக்க வான் தலத்தில் அவரைப் புகழ்ந்தேத்துங்கள்.
சங்கீதம் 150 : 2 (RCTA)
அவருடைய மாண்பு மிக்க செயல்களை நினைத்து அவரைப் புகழ்ந்தேத்துங்கள்: அவரது உன்னத மாட்சியை நினைத்து அவரைப் புகழ்ந்தேத்துங்கள்.
சங்கீதம் 150 : 3 (RCTA)
எக்காளத் தொனி முழங்க அவரைப் புகழ்ந்தேத்துங்கள்: வீணையுடன் யாழ் இசைத்து அவரைப் புகழ்ந்தேத்துங்கள்.
சங்கீதம் 150 : 4 (RCTA)
முரசொலித்து, நடனம் செய்து அவரைப் புகழ்ந்தேத்துங்கள்: நரம்பிசைத்து, குழல் ஊதி அவரைப் புகழ்ந்தேத்துங்கள்.
சங்கீதம் 150 : 5 (RCTA)
நாதமிகு தாளத்துடன் அவரைப் புகழ்ந்தேத்துங்கள்: கைத்தாள ஒலி முழுங்க அவரைப் புகழ்ந்தேத்துங்கள்.
சங்கீதம் 150 : 6 (RCTA)
உயிருள்ளதெல்லாமே அவரைப் புகழ்ந்தேத்துவதாக. அல்லேலூயா!

1 2 3 4 5 6