சங்கீதம் 148 : 1 (RCTA)
அல்லேலூயா! வானத்தினின்று ஆண்டவரைப் புகழுங்கள்: உன்னதத்தில் நின்று அவரைப் போற்றுங்கள்.
சங்கீதம் 148 : 2 (RCTA)
ஆண்டவர் தம் தூதர்களே, அவரைப் புகழுங்கள்: அவருடைய படைகளே, நீங்களெல்லாரும் அவரைப் போற்றுங்கள்.
சங்கீதம் 148 : 3 (RCTA)
கதிரோனே, நிலாவே, அவரைப் புகழுங்கள்: ஒளிவிடும் விண்மீன்களே, எல்லாம் அவரைப் போற்றுங்கள்.
சங்கீதம் 148 : 4 (RCTA)
உன்னத வானங்களே அவரைப் புகழுங்கள்: வானங்களுக்கு மேலுள்ள நீர்த்திரளே அவரைப் போற்றுங்கள்.
சங்கீதம் 148 : 5 (RCTA)
படைப்பு எல்லாம் ஆண்டவருடைய பெயரைப் புகழட்டும்: ஏனெனில், அவர் கட்டளையிட எல்லாம் உண்டாயின.
சங்கீதம் 148 : 6 (RCTA)
அவை என்றென்றும் எக்காலத்தும் நிலைத்திருக்கச் செய்தவர் அவரே: அவர் கொடுத்த கட்டளையை அவை மீறுவதில்லை.
சங்கீதம் 148 : 7 (RCTA)
புவியில் நின்று ஆண்டவரைப் புகழுங்கள்: கடல் மீன்களும் ஆழத்தில் உள்ளவையும் அவரைப் புகழட்டும்.
சங்கீதம் 148 : 8 (RCTA)
நெருப்பும் கல்மழையும் வெண்பனியும் மூடுபனியும், அவர் சொற்படி கேட்கும் புயல் காற்றும்,
சங்கீதம் 148 : 9 (RCTA)
மலைகளும் எல்லாக் குன்றுகளும், பழந்தரும் மரங்களும் கேதுரு மரங்களனைத்தும்,
சங்கீதம் 148 : 10 (RCTA)
நாட்டு விலங்குகளும் எல்லாக் கால்நடைகளும், ஊர்வன, பறப்பனவும்,
சங்கீதம் 148 : 11 (RCTA)
உலகத்து அரசர்களும் மக்களனைவரும், தலைவர்கள் உலகத்தின் நீதிபதிகள் அனைவருமே,
சங்கீதம் 148 : 12 (RCTA)
இளைஞர்கள், இளங்குமரிகள், முதியோர் சிறுவருடன் கூடி ஆண்டவரைப் புகழுங்கள்.
சங்கீதம் 148 : 13 (RCTA)
படைப்பு எல்லாம் ஆண்டவரைப் புகழட்டும்: ஏனெனில் அவருடைய பெயர் மட்டும் உன்னதமானது; அவருடைய மகத்துவம் வானம் பூமியனைத்தையும் கடந்தது.
சங்கீதம் 148 : 14 (RCTA)
தம் மக்களை மேன்மைப்படுத்தி வலிமையடையச் செய்தார்: அவர் செய்தது அவர் அடியார்க்குப் பெருமை அளித்தது. அவருடைய புனிதர்கனைவரும் போற்றப்படுக; அவரை அண்மித்துள்ள இஸ்ராயேல் மக்களுக்குப் பெருமை அளித்தது. அல்லேலூயா!

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14