சங்கீதம் 147 : 1 (RCTA)
அல்லேலூயா! ஆண்டவரைப் போற்றுங்கள்; ஏனெனில் அவர் நல்லவர். நம் இறைவனுக்குப் புகழ் பாடுங்கள்: ஏனெனில் அவர் இனிமையுள்ளவர்; அவரைப் புகழ்வது தகுமே.
சங்கீதம் 147 : 2 (RCTA)
ஆண்டவர் யெருசலேமை அமைக்கிறார்: சிதறுண்ட இஸ்ராயேலை ஒன்று சேர்க்கிறார்.
சங்கீதம் 147 : 3 (RCTA)
உள்ளம் உடைந்தவர்களைக் குணமாக்குகிறார்: அவர்களுடைய காயங்களைக் கட்டுகிறார்.
சங்கீதம் 147 : 4 (RCTA)
விண்மீன்களின் எண்ணிக்கையை வரையறுக்கிறார்: ஒவ்வொன்றையும் பெயரிட்டு அழைக்கிறார்.
சங்கீதம் 147 : 5 (RCTA)
நம் ஆண்டவர் மிக உயர்ந்தவர், வல்லமை மிக்கவர்: அவருடைய ஞானத்துக்கு அளவேயில்லை.
சங்கீதம் 147 : 6 (RCTA)
தாழ்ந்தவர்களை ஆண்டவர் தூக்கிவிடுகிறார்: கெட்டவர்களைத் தரைமட்டும் தாழ்த்தி விடுகிறார்.
சங்கீதம் 147 : 7 (RCTA)
நன்றியுணர்வோடு ஆண்டவருக்குப் பாடுங்கள்: யாழ்கொண்டு நம் இறைவனுக்கு இசை எழுப்புங்கள்.
சங்கீதம் 147 : 8 (RCTA)
வானத்தில் மேகங்கள் கவியச் செய்பவர் அவரே: பூமி மீது மழையைப் பொழிபவர் அவரே. மலைகளில் புல் பூண்டுகள் முளைக்கச் செய்பவர் அவரே: மனிதனுக்குப் பயன்படச் செடி கொடி வளரச் செய்பவர் அவரே.
சங்கீதம் 147 : 9 (RCTA)
கால்நடைகளுக்கு உணவு அளிப்பவர் அவரே: தம்மை நோக்கிக் கூவும் காக்கை குஞ்சுகளுக்குத் தீனி தருபவர் அவரே.
சங்கீதம் 147 : 10 (RCTA)
குதிரைகளின் பலத்தைப் பொருட்படுத்துபவர் அல்லர் அவர்: மனிதனின் கால் பலத்தைத் தேடுபவர் அல்லர்.
சங்கீதம் 147 : 11 (RCTA)
அவருக்கு அஞ்சுவோரே அவருக்கு உகந்தவர்: அவரது நன்மைத் தனத்தை நம்புவோரே அவருக்கு உகந்தவர்.
சங்கீதம் 147 : 12 (RCTA)
யெருசலேமே, உன் ஆண்டவரைப் போற்றுவாய்: சீயோனே, உன் இறைவனைப் புகழ்வாய்.
சங்கீதம் 147 : 13 (RCTA)
ஏனெனில், அவர் உன் கதவுகளின் தாழ்ப்பாள்களைப் பலப்படுத்தினார்: உன்னகத்துள்ள உன் மக்களுக்கு ஆசியளித்தார்.
சங்கீதம் 147 : 14 (RCTA)
அமைதி நிலவ உன் எல்லைகளைக் காத்தார்: கோதுமை வளத்தால் உனக்கு நிறைவு அளிக்கிறார்.
சங்கீதம் 147 : 15 (RCTA)
உலகுக்குத் தம் ஆணையை விடுக்கிறார்: விரைந்து செல்கிறது அவருடைய வார்த்தை.
சங்கீதம் 147 : 16 (RCTA)
வெண் கம்பளி போல் பனி பொழியச் செய்கிறார்: உறை பனியைச் சாம்பல் போல் இறைக்கிறார்.
சங்கீதம் 147 : 17 (RCTA)
அப்பத்துண்டெனக் கல்மழை பொழிகிறார்: அவர் உண்டாக்கும் குளிரால் தண்ணீர் உறைந்து போகும்.
சங்கீதம் 147 : 18 (RCTA)
அவர் ஒரு வார்த்தை சொல்ல, உறைந்தது உருகிவிடும்: தம் காற்றை ஏவி விட, உருகிய நீர் ஓடத் தொடங்கும்.
சங்கீதம் 147 : 19 (RCTA)
யாக்கோபின் இனத்தார்க்குத் தம் வார்த்தையை வெளிப்படுத்தினார்: இஸ்ராயேல் மக்களுக்குக் கட்டளைகளையும் நியமங்களையும் அறிவித்தார்.
சங்கீதம் 147 : 20 (RCTA)
வேறெந்த இனத்தார்க்கும் இங்ஙனம் செய்ததில்லை: தம் கட்டளைகளை அவர்களுக்கு வெளியிட்டதில்லை. அல்லேலூயா!
❮
❯