சங்கீதம் 145 : 1 (RCTA)
என் இறைவா, என் அரசே, நான் உம்மைப் புகழ்ந்து பாடுவேன்: என்றென்றும் உம் திருப்பெயரைப் வாழ்த்துவேன்.
சங்கீதம் 145 : 2 (RCTA)
நாள் தோறும் நான் உம்மை வாழ்த்துவேன்: என்றென்றைக்கும் உம் திருப்பெயரைப் புகழ்வேன்.
சங்கீதம் 145 : 3 (RCTA)
ஆண்டவர் மிக உயர்ந்தவர், மிகுந்த புகழ்ச்சிக்குரியவர்: அவரது மேன்மைக்கு அளவேயில்லை.
சங்கீதம் 145 : 4 (RCTA)
தலைமுறை தலைமுறையாக மனிதர் உம்முடைய செயல்களை எடுத்துரைப்பர்: தலைமுறை தலைமுறையாக உமது வல்லமையை வெளிப்படுத்துவார்கள்.
சங்கீதம் 145 : 5 (RCTA)
உம்முடைய மகத்துவத்தின் சொல்லரிய மாட்சிமையைப் பற்றிப் பேசுவர்: உம் வியத்தகு செயல்களை எடுத்துரைப்பர்.
சங்கீதம் 145 : 6 (RCTA)
அச்சமிகு உம் செயல் வலிமையை எடுத்துச் சொல்வர்: உமது மேன்மையைப் பறைசாற்றுவர்.
சங்கீதம் 145 : 7 (RCTA)
உமது நன்மைப் பெருக்கின் புகழை வெளிப்படுத்துவர்: உமது நீதியை நினைத்து அக்களிப்பர்.
சங்கீதம் 145 : 8 (RCTA)
அன்பும் அருளும் உள்ளவர் ஆண்டவர்: சினங் கொள்ளத் தாமதிப்பவர், அருள் உள்ளம் படைத்தவர்.
சங்கீதம் 145 : 9 (RCTA)
ஆண்டவர் அனைவருக்கும் நன்மை செய்பவர்: தம் படைப்புகள் அனைத்தின்மீதும் இரக்கம் காட்டுபவர்.
சங்கீதம் 145 : 10 (RCTA)
ஆண்டவரே, உம்முடைய படைப்புகள் யாவும் உம்மைப் புகழுக: உம்முடைய புனிதர்கள் உம்மை வாழ்த்துக.
சங்கீதம் 145 : 11 (RCTA)
உமது அரசின் மகிமையை அவர்கள் எடுத்துரைப்பார்களாக: உமது ஆற்றலைப் பறைசாற்றுவார்களாக.
சங்கீதம் 145 : 12 (RCTA)
இவ்வாறு மனுமக்கள் உம் வல்லமையை அறிந்துகொள்வர்: உமது மாண்புமிக்க அரசின் வல்லமையைத் தெரிந்து கொள்வர்.
சங்கீதம் 145 : 13 (RCTA)
உமது அரசு ஊழிஊழியாக உள்ள அரசு; உம்முடைய ஆட்சி தலைமுறை தலைமுறையாக நிலைத்துள்ளது: ஆண்டவர் தம் வார்த்தைகளிலெல்லாம் உண்மையுள்ளவராயிருக்கிறார்; தம் செயல்களிலும் புனிதமானவர்.
சங்கீதம் 145 : 14 (RCTA)
விழுந்து நொந்துபோன யாவரையும் ஆண்டவர் தாங்குகிறார்: தாழ்த்தப்பட்ட அனைவரையும் தூக்கி விடுகிறார்.
சங்கீதம் 145 : 15 (RCTA)
ஆண்டவரே, எல்லாருடைய கண்களும் உம்மையே நம்பிக்கையுடன் நோக்குகின்றன: எல்லாருக்கும் நீர் தக்க காலத்தில் உணவளிக்கிறீர்.
சங்கீதம் 145 : 16 (RCTA)
உமது கையைத் திறந்து விடுகிறீர்: உயிருள்ள எதையும் உம் இரக்கத்தினால் நிரப்புகிறீர்.
சங்கீதம் 145 : 17 (RCTA)
ஆண்டவர் தம் வழிகளிலெல்லாம் நீதியுள்ளவர்: தம் செயல்களிலெல்லாம் புனிதமானவர்.
சங்கீதம் 145 : 18 (RCTA)
தம்மைக் கூவியழைக்கும் யாவருக்கும் ஆண்டவர் அண்மையில் உள்ளார்: நேர்மையுடன் தம்மைக் கூவியழைக்கிற யாவருக்கும் ஆண்டவர் அண்மையில் உள்ளார்.
சங்கீதம் 145 : 19 (RCTA)
தமக்கு அஞ்சுகிறவர்களின் ஆசையை நிறைவேற்றுவார்: அவர்களுடைய மன்றாட்டைக் கேட்டு மீட்பளிப்பார்.
சங்கீதம் 145 : 20 (RCTA)
தம்மீது அன்பு செலுத்தும் யாவரையும் ஆண்டவர் காப்பாற்றுகிறார்: தீயோர் யாவரையும் அழித்து விடுவார்.
சங்கீதம் 145 : 21 (RCTA)
ஆண்டவருடைய புகழ்ச்சியை என் நா எடுத்தியம்புவதாக: மனிதர் யாவரும் என்றென்றும் அவருடைய திருப்பெயரை வாழ்த்துவார்களாக.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21