சங்கீதம் 137 : 1 (RCTA)
பாபிலோனின் ஆறுகளருகே அமர்ந்து சீயோனை நினைத்த போது, நாங்கள் கண்ணீர் சிந்தினோம்.
சங்கீதம் 137 : 2 (RCTA)
அந்த நாட்டு அலரிச் செடிகள் மீது, எங்கள் யாழ்களை மாட்டி வைத்தோம்.
சங்கீதம் 137 : 3 (RCTA)
எங்களைச் சிறையாக்கியவர்கள், நாங்கள் பாடும்படி கேட்டார்கள்; எங்களைத் துன்புறுத்தியவர்கள் மகிழ்ச்சிப்பா இசைக்கச் சொன்னார்கள்: 'சீயோனைப் பற்றிக் கீதங்கள் சிலவற்றைப் பாடிக்காட்டுங்கள்' என்றார்கள்.
சங்கீதம் 137 : 4 (RCTA)
ஆண்டவருடைய பாடலை அந்நிய நாட்டில் எங்ஙனம் பாடுவோம்?
சங்கீதம் 137 : 5 (RCTA)
யெருசலேமே நானுன்னை மறப்பதாயிருந்தால், என் வலக்கை சூம்பிப் போவதாக.
சங்கீதம் 137 : 6 (RCTA)
உன்னை நான் நினையாதிருந்தால் என் நாவு மேல்வாயோடு ஒட்டிக் கொள்வதாக: எனக்குள்ள மகிழ்ச்சிக்கெல்லாம் மேலானதாக நான் யெருசலேமைக் கருதாவிடில் எனக்கு இதெல்லாம் நிகழ்வதாக.
சங்கீதம் 137 : 7 (RCTA)
ஆண்டவரே, ஏதோமின் மக்களுக்கு எதிராக யெருசலேமின் நாளை நினைத்துக்கொள்ளும்: 'தகர்த்தெறியுங்கள், அடியோடு தகர்த்தெறியுங்கள்' என்று அவர்கள் சொன்னார்களே!
சங்கீதம் 137 : 8 (RCTA)
பாழாக்கும் பாபிலோன் புதல்வியே, நீ எங்களுக்குச் செய்த தீமையை உனக்கே செய்கிறவன் பேறு பெற்றவன்.
சங்கீதம் 137 : 9 (RCTA)
உன் குழந்தைகளைப் பிடித்துக் கல்லின் மேல் மோதி அடிக்கிறவன் பேறு பெற்றவன்.

1 2 3 4 5 6 7 8 9