சங்கீதம் 136 : 1 (RCTA)
ஆண்டவர் நல்லவர் அவரைப் போற்றுங்கள்: ஏனெனில் அவரது அருளன்பு என்றென்றும் நிலைத்துள்ளது.
சங்கீதம் 136 : 2 (RCTA)
தேவர்களுக்கெல்லாம் தேவனைப் போற்றுங்கள்: ஏனெனில் அவர் இரக்கம் என்றென்றும் நிலைத்துள்ளது.
சங்கீதம் 136 : 3 (RCTA)
ஆண்டவர்க்கெல்லாம் ஆண்டவரைப் போற்றுங்கள்: ஏனெனில் அவர் இரக்கம் என்றென்றும் நிலைத்துள்ளது.
சங்கீதம் 136 : 4 (RCTA)
அரும்பெரும் செயல்கள் புரிந்தவர் அவர் ஒருவரே; அவரைப் போற்றுங்கள்: ஏனெனில் அவர் இரக்கம் என்றென்றும் நிலைத்துள்ளது.
சங்கீதம் 136 : 5 (RCTA)
ஞானமுடன் வானங்களை அமைத்தவர் அவரே: அவரைப் போற்றுங்கள்: ஏனெனில் அவர் இரக்கம் என்றென்றும் நிலைத்துள்ளது.
சங்கீதம் 136 : 6 (RCTA)
நீர்த்திரள்மீது நிலத்தை அமைத்தவர் அவரே; அவரைப் புகழுங்கள்: ஏனெனில் அவர் இரக்கம் என்றென்றும் நிலைத்துள்ளது.
சங்கீதம் 136 : 7 (RCTA)
பேரொளி விளக்குகளை ஏற்படுத்தியவர் அவரே; அவரைப் புகழுங்கள்: ஏனெனில் அவர் இரக்கம் என்றென்றும் நிலைத்துள்ளது.
சங்கீதம் 136 : 8 (RCTA)
பகலை ஆள்வதற்குப் பகலவனைப் படைத்தவர் அவரே; அவரைப் போற்றுங்கள்: ஏனெனில் அவர் இரக்கம் என்றென்றும் நிலைத்துள்ளது.
சங்கீதம் 136 : 9 (RCTA)
இரவை ஆள்வதற்கு நிலவையும் விண்மீன்களையும் ஏற்படுத்தியவர் அவரே; அவரைப் போற்றுங்கள்: ஏனெனில் அவர் இரக்கம் என்றென்றும் நிலைத்துள்ளது.
சங்கீதம் 136 : 10 (RCTA)
எகிப்தியரின் தலைப்பேறுகளை வீழ்த்தியவர் அவரே; அவரைப் போற்றுங்கள்: ஏனெனில் அவர் இரக்கம் என்றென்றும் நிலைத்துள்ளது.
சங்கீதம் 136 : 11 (RCTA)
எகிப்தியரிடையிலிருந்து இஸ்ராயேலரை வெளியேற்றியவர் அவரே; அவரைப் போற்றுங்கள்: ஏனெனில் அவர் இரக்கம் என்றென்றும் நிலைத்துள்ளது.
சங்கீதம் 136 : 12 (RCTA)
வலிமையுள்ள கரத்தையும், தம் தோளின் பலத்தையும் காட்டியவர் அவரே; அவரைப் போற்றுங்கள்: ஏனெனில் அவர் இரக்கம் என்றென்றும் நிலைத்துள்ளது.
சங்கீதம் 136 : 13 (RCTA)
செங்கடலை இரண்டாகப் பிரித்தவர் அவரே; அவரைப் போற்றுங்கள்: ஏனெனில் அவர் இரக்கம் என்றென்றும் நிலைத்துள்ளது.
சங்கீதம் 136 : 14 (RCTA)
அக்கடல் நடுவே இஸ்ராயேலை வழிநடத்தியவர் அவரே; அவரைப் போற்றுங்கள்: ஏனெனில் அவர் இரக்கம் என்றென்றும் நிலைத்துள்ளது.
சங்கீதம் 136 : 15 (RCTA)
பாரவோனையும் அவன் படைகளையும் செங்கடலில் அமிழ்த்தியவர் அவரே; அவரைப் போற்றுங்கள்: ஏனெனில் அவர் இரக்கம் என்றென்றும் நிலைத்துள்ளது.
சங்கீதம் 136 : 16 (RCTA)
பாலைவனத்தின் வழியே தம் மக்களை அழைத்துச் சென்றவர் அவரே; அவரைப் போற்றுங்கள்: ஏனெனில் அவர் இரக்கம் என்றென்றும் நிலைத்துள்ளது.
சங்கீதம் 136 : 17 (RCTA)
பெரிய அரசர்களை வதைத்து வீழ்த்தியவர் அவரே; அவரைப் போற்றுங்கள்: ஏனெனில் அவர் இரக்கம் என்றென்றும் நிலைத்துள்ளது.
சங்கீதம் 136 : 18 (RCTA)
வல்லமை மிக்க அரசர்களைக் கொன்று குவித்தவர் அவரே; அவரைப் போற்றுங்கள்: ஏனெனில் அவர் இரக்கம் என்றென்றும் நிலைத்துள்ளது.
சங்கீதம் 136 : 19 (RCTA)
அமோறைய மன்னன் செகோனைக் கொன்றவர் அவரே; அவரைப் போற்றுங்கள்: ஏனெனில் அவர் இரக்கம் என்றென்றும் நிலைத்துள்ளது.
சங்கீதம் 136 : 20 (RCTA)
பாசான் நாட்டு மன்னன் ஓக் என்பானை வதைத்தவர் அவரே; அவரைப் போற்றுங்கள்: ஏனெனில் அவர் இரக்கம் என்றென்றும் நிலைத்துள்ளது.
சங்கீதம் 136 : 21 (RCTA)
அவர்கள் நாட்டை தம் மக்களுக்கு உரிமையாக்கியவர் அவரே; அவரைப் போற்றுங்கள்: ஏனெனில் அவர் இரக்கம் என்றென்றும் நிலைத்துள்ளது.
சங்கீதம் 136 : 22 (RCTA)
தம் ஊழியரான இஸ்ராயேலுக்கு உரிமையாக்கியவர் அவரே; அவரைப் போற்றுங்கள்: ஏனெனில் அவர் இரக்கம் என்றென்றும் நிலைத்துள்ளது.
சங்கீதம் 136 : 23 (RCTA)
தாழ்வுற்ற நிலையில் நம்மை நினைவுகூர்ந்தவர் அவரே; அவரைப் போற்றுங்கள்: ஏனெனில் அவர் இரக்கம் என்றென்றும் நிலைத்துள்ளது.
சங்கீதம் 136 : 24 (RCTA)
நம் எதிரிகளிடமிருந்து நம்மை விடுவித்தவர் அவரே; அவரைப் போற்றுங்கள்: ஏனெனில் அவர் இரக்கம் என்றென்றும் நிலைத்துள்ளது.
சங்கீதம் 136 : 25 (RCTA)
உயிரினம் அனைத்திற்கும் உணவூட்டுபவர் அவரே; அவரைப் போற்றுங்கள்: ஏனெனில் அவர் இரக்கம் என்றென்றும் நிலைத்துள்ளது.
சங்கீதம் 136 : 26 (RCTA)
விண்ணக இறைவனைப் புகழுங்கள்: ஏனெனில் அவர் இரக்கம் என்றென்றும் நிலைத்துள்ளது.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26