சங்கீதம் 135 : 1 (RCTA)
அல்லேலூயா! ஆண்டவர் தம் திருப்பெயரைப் போற்றுங்கள்: ஆண்டவர் தம் ஊழியர்களே, அதனைப் போற்றுங்கள்!
சங்கீதம் 135 : 2 (RCTA)
ஆண்டவர் தம் இல்லத்தில் இருப்பவர்களே, நம் இறைவனின் இல்லத்து முற்றங்களில் உள்வர்களே, அவரைப் போற்றுங்கள்!
சங்கீதம் 135 : 3 (RCTA)
ஆண்டவரைப் போற்றுங்கள்; ஏனெனில் அவர் நல்லவர்: அவர் திருப்பெயருக்குப் புகழ் பாடுங்கள்; ஏனெனில், அது இனிமை மிக்கது.
சங்கீதம் 135 : 4 (RCTA)
ஆண்டவர் யாக்கோபைத் தமக்கெனத் தேர்ந்துகொண்டார்; இஸ்ராயேலைத் தம் சொந்த உடைமையாகத் தேர்ந்தெடுத்தார்.
சங்கீதம் 135 : 5 (RCTA)
ஆண்டவர் உயர்ந்தவர்; தேவர்கள் அனைவரையும் விட நம்மீது அதிகாரம் கொண்டவர்: இதை நான் நன்கறிவேன்.
சங்கீதம் 135 : 6 (RCTA)
விண்ணிலும் மண்ணிலும் கடலிலும் நீர்த்திரளின் ஆழத்திலும், தாம் விரும்பியதையெல்லாம் அவர் செய்கின்றார்.
சங்கீதம் 135 : 7 (RCTA)
பூமியின் கடையெல்லையினின்று முகில்களை வரவழைக்கின்றார்: மின்னல் மின்னி மழை பெய்யச் செய்கின்றார்; பதுங்கியிருந்த இடத்தினின்று காற்றை வரவழைக்கின்றார்.
சங்கீதம் 135 : 8 (RCTA)
எகிப்தில் தலைப்பேறான அனைத்தையும் வதைத்தார்: மனிதர்களையும் விலங்குகளையும் வதைத்தார்.
சங்கீதம் 135 : 9 (RCTA)
எகிப்தே, உன்னிடம் அவர் அருங்குறிகளையும் புதுமைகளையும் செய்தார். பாரவோனுக்கும் அவன் ஊழியருக்கும் எதிராக அவற்றைச் செய்தார்.
சங்கீதம் 135 : 10 (RCTA)
மக்கள் இனங்கள் பலவற்றை அவர் ஒடுக்கி விட்டார்: வலிமை மிக்க மன்னர்களைக் கொன்று குவித்தார்.
சங்கீதம் 135 : 11 (RCTA)
அமோறைய மன்னன் செகோனையும், பாசான் மன்னன் ஓக் என்பவனையும், கானான் நாட்டு மன்னர்களையும் அவர் வதைத்தொழித்தார்.
சங்கீதம் 135 : 12 (RCTA)
அவர்களுடைய நாடுகளை உரிமையாக்கி கொடுத்தார்: தம் மக்கள் இஸ்ராயேலுக்கு உடைமையாகக் கொடுத்தார்.
சங்கீதம் 135 : 13 (RCTA)
ஆண்டவரே, உமது பெயர் என்றென்றும் நிலைத்துள்ளது: ஆண்டவரே, தலைமுறை தலைமுறையாக மக்கள் உம்மை நினைவுகூர்வர்.
சங்கீதம் 135 : 14 (RCTA)
ஆண்டவர் தம் மக்களைக் காக்கிறார்: தம் ஊழியர்மீது இரக்கம் கொள்கிறார்.
சங்கீதம் 135 : 15 (RCTA)
புறவினத்தாரின் சிலைகள் வெள்ளியும் பொன்னுமே: மனிதர்களின் கைவேலையே.
சங்கீதம் 135 : 16 (RCTA)
அவற்றிற்கு வாய் உண்டு, பேசுவதில்லை: கண் உண்டு, பார்ப்பதில்லை.
சங்கீதம் 135 : 17 (RCTA)
செவி உண்டு, கேட்பதில்லை: வாயில் அவற்றிற்கு மூச்சில்லை.
சங்கீதம் 135 : 18 (RCTA)
அவற்றைச் செய்தவர்கள் அவற்றிற்கு ஒப்பாகின்றனர்: அவற்றின் மீது நம்பிக்கை வைப்பவர்கள், அவற்றிற்குச் சமமாகின்றனர்.
சங்கீதம் 135 : 19 (RCTA)
இஸ்ராயேல் இனத்தாரே, ஆண்டவரை வாழ்த்துங்கள்: ஆரோனின் இனத்தாரே, ஆண்டவரை வாழ்த்துங்கள்.
சங்கீதம் 135 : 20 (RCTA)
லேவியின் இனத்தாரே, ஆண்டவரை வாழ்த்துங்கள்: ஆண்டவருக்கு அஞ்சுவாரே, அவரை வாழ்த்துங்கள்.
சங்கீதம் 135 : 21 (RCTA)
யெருசலேமில் உறையும் ஆண்டவர் வாழ்த்தப்பெறுவாராக; சீயோனின்று அவர் வாழ்த்தப் பெறுவாராக.
❮
❯