சங்கீதம் 133 : 1 (RCTA)
சகோதரர் ஒருமித்து வாழ்வது எத்துணை நல்லது! எத்துணை இனியது!
சங்கீதம் 133 : 2 (RCTA)
தலையினின்று தாடியில் வழிந்து விழும் விலைமிக்க எண்ணெய் போல், ஆரோனின் தாடியிலும் அவரது ஆடையின் விளிம்பிலும் வழிந்தோடும் எண்ணெய் போல் அது இனிமை மிக்கது!
சங்கீதம் 133 : 3 (RCTA)
கெர்மோன் மலை மீது பெய்யும் பனி போல, சீயோன் மலையில் விழும் பனி போல இனிமை மிக்கது! ஏனெனில், அங்கே தான் ஆண்டவர் தம் ஆசி வழங்குகிறார்: என்றென்றுமுள்ள வாழ்வை அளிக்கின்றார்.

1 2 3