சங்கீதம் 132 : 1 (RCTA)
ஆண்டவரே, தாவீதின் சார்பாக நினைவு கூர்ந்தருளும்: அவர் ஏற்ற துன்பமனைத்தையும் நினைத்துக் கொள்ளும்.
சங்கீதம் 132 : 2 (RCTA)
ஆண்டவருக்கு அவர் ஆணையிட்டதையும், யாக்கோபு வழிபட்ட வல்லமையுள்ள இறைவனுக்கு அவர் பொருந்தனை செய்ததையும் நினைத்துக் கொள்ளும்.
சங்கீதம் 132 : 3 (RCTA)
ஆண்டவருக்கு நான் ஓர் இடம் அமைக்கும் வரை,
சங்கீதம் 132 : 4 (RCTA)
யாக்கோபு வழிபட்ட வல்லமையுள்ள இறைவனுக்கு உறைவிடம் ஏற்படுத்தும் வரை
சங்கீதம் 132 : 5 (RCTA)
என் வீட்டில் நான் குடியிருக்கச் செல்வதில்லை: உறங்குவதற்குக் கட்டில் மீது ஏறுவதில்லை, கண்கள் அயர நான் விடுவதில்லை என்று அவர் கூறிய சபதத்தை நினைவு கூரும்.
சங்கீதம் 132 : 6 (RCTA)
இதோ வாக்குறுதிப் பேழை எபராத்தாவில் இருக்கிறதென்று கேள்விப்பட்டோம்: இயார் என்னும் வயல் வெளிகளில் அதனைக் கண்டு கொண்டோம்.
சங்கீதம் 132 : 7 (RCTA)
செல்வோம் அவருடைய உறைவிடத்திற்கே: பணிவோம் அவரது கால்மணை முன்னே!"
சங்கீதம் 132 : 8 (RCTA)
எழுந்தருளும் ஆண்டவரே, உமது இருப்பிடத்திற்கு எழுந்தருளும்: உமது மாட்சி விளங்கும் உமது பேழையும் எழுவதாக.
சங்கீதம் 132 : 9 (RCTA)
உம் குருக்கள் நீதியை உடையாய் அணிவார்களாக: உம் புனிதர்கள் பெருமகிழ்ச்சியுடன் களிகூர்வார்களாக.
சங்கீதம் 132 : 10 (RCTA)
உம் ஊழியன் தாவீதின் பொருட்டு, நீர் அபிஷுகம் செய்தவரிடமிருந்து உமது முகத்தைத் திருப்பிக் கொள்ளாதேயும்.
சங்கீதம் 132 : 11 (RCTA)
தாவீதிற்கு ஆண்டவர் ஆணையிட்டுக் கூறினார்; அவரது வாக்குறுதி தவறாது: 'உம் வழித் தோன்றல் ஒருவனை உம் அரியணை மீது ஏற்றுவேன்.
சங்கீதம் 132 : 12 (RCTA)
உம் மக்கள் என் உடன்படிக்கையைக் காத்து நான் தரும் கட்டளைகளைக் கடைப்பிடித்தால், அவர்களுடைய மக்களும் என்றென்றுமே உம் அரியணை மீது அமர்வர்' என்றார்.
சங்கீதம் 132 : 13 (RCTA)
ஏனெனில் ஆண்டவர் சீயோனைத் தேர்ந்தெடுத்தார்: தம்முடைய அரியணையாகக் கொள்ள விரும்பினார்.
சங்கீதம் 132 : 14 (RCTA)
என்றென்றும் என் இளைப்பாற்றியின் இடம் இதுவே: இங்கே நான் தங்குவேன்; ஏனெனில் இதை நான் விரும்பினேன்,
சங்கீதம் 132 : 15 (RCTA)
இதில் விளையும் உணவுப் பொருளுக்கு என் ஆசியை வழங்குவேன்: அங்குள்ள ஏழை மக்களுக்கு நிறைய உணவு அளிப்பேன்.
சங்கீதம் 132 : 16 (RCTA)
அங்குள்ள குருக்களை மீட்பென்னும் ஆடையால் உடுத்துவேன்: அங்குள்ள புனிதர்கள் பெரு மகிழ்ச்சியுடன் அக்களிப்பர்.
சங்கீதம் 132 : 17 (RCTA)
தாவீதுக்கு அங்கே வல்லமை மிகு சந்ததியை எழுப்புவேன்: நான் அபிஷுகம் செய்தவருக்கு ஒரு விளக்கை ஆயத்தம் செய்வேன்.
சங்கீதம் 132 : 18 (RCTA)
அவருடைய எதிரிகளுக்கு வெட்கமெனும் ஆடையை உடுத்துவேன்: அவர் தலையின் மீதோ நான் வைக்கும் மணிமகுடம் விளங்கும்.'
❮
❯