சங்கீதம் 131 : 1 (RCTA)
ஆண்டவரே, என் இதயம் இறுமாப்பு கொள்ளவில்லை என் பார்வை மேட்டிமையோடு விளங்கவில்லை; பெரிய காரியங்களையோ, என் ஆற்றலுக்கு மிஞ்சின காரியங்களையோ நான் தேடவில்லை.
சங்கீதம் 131 : 2 (RCTA)
மாறாக, தாயின் மடியில் குழந்தையிருப்பது போல என்னுள் என் ஆன்மா அமைதியுடன் இருக்கும்படி பார்த்துக் கொண்டேன்: குழந்தையைப் போல் என் உள்ளம் அமைதியாய் இருக்கிறது.
சங்கீதம் 131 : 3 (RCTA)
இஸ்ராயேலே, ஆண்டவர் மீது நம்பிக்கை வை: இன்றும் என்றும் அவரை நம்பு

1 2 3