சங்கீதம் 13 : 1 (RCTA)
ஆண்டவரே, எதுவரை என்னை மறந்திருப்பீர்? இறுதி வரை மறந்திடுவீரோ? எது வரை உமது திருமுகத்தை என்னிடமிருந்து மறைத்துக் கொண்டிருப்பீர்?
சங்கீதம் 13 : 2 (RCTA)
என் வருத்தங்களை எவ்வளவு காலம் எனக்குள்ளேயே தாங்கிக்கொண்டிருப்பேன்? நாள் தோறும் எழுகின்ற மனக்கவலையே எத்தனை நாள் பொறுத்துக்கொண்டிருப்பேன்? எவ்வளவு காலம் என் எதிரி என் மீது வெற்றிகொள்வான்?
சங்கீதம் 13 : 3 (RCTA)
என் ஆண்டவராகிய இறைவா, என்னைக் கண்ணோக்கி என் மன்றாட்டைக் கேட்டருளும்.
சங்கீதம் 13 : 4 (RCTA)
மரண உறக்கத்தில் நான் ஆழ்ந்துவிடாமல் என் கண்களுக்கு உமது ஒளியை வீசும்: 'அவனை மேற்கொண்டேன்' என்று என் எதிரி சொல்ல விடாதேயும்; நான் வீழ்ச்சியுற்றதைக் கண்டு என் எதிரிகளை அக்களிக்க விடாதீர்.
சங்கீதம் 13 : 5 (RCTA)
உமது இரக்கத்தையே நான் நம்பியிருக்கிறேன் அன்றோ! உம்மிடமிருந்து வரும் உதவியை நினைத்து என் நெஞ்சம் அக்களிப்பதாக:
சங்கீதம் 13 : 6 (RCTA)
எனக்கு நன்மையே செய்யும் ஆண்டவருக்கு நான் இன்னிசை பாடுவேனாக.
❮
❯