சங்கீதம் 129 : 1 (RCTA)
இளமையிலிருந்தே என்னை எதிர்த்துப் போராடினர் என்று, இஸ்ராயேல் திரும்பச் சொல்லட்டும்.
சங்கீதம் 129 : 2 (RCTA)
இளமையிலிருந்தே என்னை எதிர்த்துப் போராடினர்: ஆனால் என் மீது வெற்றிக் கொள்ளவில்லை.
சங்கீதம் 129 : 3 (RCTA)
உழவர் என் முதுகின் மீது உழுதார்கள்: நெடியானவாய் அமைந்தன அந்தப் படைச்சால்கள்,
சங்கீதம் 129 : 4 (RCTA)
ஆண்டவரோ நீதியுள்ளவர்: தீயோர் சுமத்திய நுகத்தைத் தகர்த்தெறிந்தார்.
சங்கீதம் 129 : 5 (RCTA)
சீயோனைப் பகைப்பவர்கள் எல்லாரும் சிதறுண்டு பின்னடைவார்களாக!
சங்கீதம் 129 : 6 (RCTA)
கூரை வேயும் புல் போல் அவர்கள் ஆவார்களாக: பிடுங்குவதற்கு முன்பே உலர்ந்து விடுகிறதன்றோ!
சங்கீதம் 129 : 7 (RCTA)
அவற்றை அறுவடை செய்வதால் கை நிரம்புமா? அவ்வரிகளைக் கட்டுவதால் மடி நிரம்புமா?
சங்கீதம் 129 : 8 (RCTA)
அவ்வழியே செல்பவர்கள் அவர்களைப் பார்த்து 'ஆண்டவரின் ஆசி உங்கள் மீது தங்குவதாக' என்றோ, 'ஆண்டவருடைய பெயரால் நாங்கள் உங்களுக்கு ஆசி கூறுகிறோம் ' என்றோ கூற மாட்டார்கள்.

1 2 3 4 5 6 7 8