சங்கீதம் 128 : 1 (RCTA)
ஆண்டவருக்கு அஞ்சும் நீ பேறு பெற்றறோன்: அவர் காட்டிய வழியில் நடப்பவன் நீ பேறு பெற்றோன்.
சங்கீதம் 128 : 2 (RCTA)
ஏனெனில், உன் கையால் உழைத்து உன் உணவைக் கொள்வாய்: பேறு பெற்றவனாவாய், எல்லாம் உனக்கு நலமாகும்.
சங்கீதம் 128 : 3 (RCTA)
கனி தரும் கொடி முந்திரி போல் உன் மனைவி உன் வீட்டின் உட்புறத்தில இருப்பாள்: ஒலிவச் செடிகள் போல உன் மக்கள் பந்தியில் உன்னைச் சூழ்ந்திருப்பர்.
சங்கீதம் 128 : 4 (RCTA)
ஆண்டவருக்கு அஞ்சும் மனிதனுக்குக் கிடைக்கும் ஆசி இதுவே..
சங்கீதம் 128 : 5 (RCTA)
சீயோனிலிருந்து ஆண்டவர் உனக்கு ஆசி பொழிவாராக: உன் வாழ்நாளெல்லாம் யெருசலேமின் செழுமையை நீ காணும்படி உனக்கு ஆசி கூறுவராக.
சங்கீதம் 128 : 6 (RCTA)
உன் மக்களின் மக்களை நீ காண்பாயாக: இஸ்ராயேல் மக்களுக்குச் சமாதானம் உண்டாவதாக!
❮
❯