சங்கீதம் 127 : 1 (RCTA)
ஆண்டவரே, வீட்டைக் கட்டினாலொழிய, அதைக் கட்டுபவர்களின் உழைப்பெல்லாம் வீணே: ஆண்டவரே நகரைக் காத்தாலொழிய, அதைக் காப்பவன் விழிப்பெல்லாம் வீணே.
சங்கீதம் 127 : 2 (RCTA)
வருந்தியுழைத்து உணவு கொள்பவர்களே, நீஙகள் விடியற்காலையில் எழுந்திருப்பதும் வீண், வெகு நேரம் தூங்காமல் விழித்திருப்பதும் வீணே: ஏனெனில், அவர் தம் அன்பர்களுக்கு உறக்கத்திலும் நன்மை செய்கிறார்.
சங்கீதம் 127 : 3 (RCTA)
மக்கட்பேறு ஆண்டவருடைய நன்கொடை: வயிற்றின் கனி ஒரு வெகுமதியே.
சங்கீதம் 127 : 4 (RCTA)
இளமையில் பிறக்கும் மக்கள் வீரனின் கையில் உள்ள அம்பு போல்.
சங்கீதம் 127 : 5 (RCTA)
அத்தகைய அம்புகளால் அம்பறாத் தூணியை நிரப்புபவன் பேறுபெற்றவன்: நகர வாயிலில் எதிரிகளோடு வாதாடும் போது அவர்கள் தோல்வி காணமாட்டார்கள்.
❮
❯