சங்கீதம் 126 : 1 (RCTA)
ஆண்டவர் சீயோனின் அடிமைகளை மீட்டு வந்த போது, நாங்கள் கனவு கண்டவர்கள் போல் இருந்தோம்.
சங்கீதம் 126 : 2 (RCTA)
அப்போது நம் உதடுகளில் சிரிப்பு ஒலித்தது, நாவில் மகிழ்ச்சிக் கீதமும் எழும்பியது: 'ஆண்டவர் அவர்களுக்கு மகத்தான காரியங்களைச் செய்தார்!' என்று அப்போது மக்களினத்தார் பேசிக் கொண்டனர்.
சங்கீதம் 126 : 3 (RCTA)
ஆம், ஆண்டவர் நமக்கு மகத்தான காரியங்களைச் செய்தார்: அதனால் பெரு மகிழ்ச்சி கொண்டோம்.
சங்கீதம் 126 : 4 (RCTA)
ஆண்டவரே, பாலைநிலத்தில் வெள்ளத்தைத் திருப்பிவிடுவது போல, எங்கள் நிலைமையை மாற்றிவிடும்.
சங்கீதம் 126 : 5 (RCTA)
கண்ணீரோடு விதை விதைப்பவர்கள், பெருமகிழ்ச்சியோடு அறுவடை செய்வார்கள்.
சங்கீதம் 126 : 6 (RCTA)
விதை தெளிக்கச் செல்லும் போது, அழுகையோடு செல்கிறார்கள்: அறுத்த அரிகளைச் சுமந்து வரும் போது பெருமகிழ்ச்சியோடு வருவார்கள்.

1 2 3 4 5 6