சங்கீதம் 123 : 1 (RCTA)
வானுலகில் உறைபவரே, உம்மை நோக்கி என் கண்களை உயர்த்துகின்றேன்.
சங்கீதம் 123 : 2 (RCTA)
பணியாட்களின் பார்வை தம் தலைவர்களின் கையைப் பார்த்து நிற்பது போலவும், பணிப்பெண்ணின் கண்கள் தன் தலைவியின் கையைப் பார்த்து நிற்பது போலவும் நம் கண்கள் நம் ஆண்டவராகிய கடவுளையே பார்க்கின்றன: நம் மீது இரக்கம் காட்டும் வரை அவரைப் பார்த்தப்படியே இருக்கும்.
சங்கீதம் 123 : 3 (RCTA)
எம்மீது இரக்கம் வையும்: ஆண்டவரே, எம் மீது இரக்கம் வையும்: ஏனெனில், அளவுக்கு மேல் நாங்கள் சிறுமையுற்றோம்.
சங்கீதம் 123 : 4 (RCTA)
சுகமாய் வாழ்வு உள்ளவர் செய்யும் ஏளனத்தாலும், செருக்குற்றோர் காட்டும் இகழ்ச்சியாலும் எங்கள் உள்ளம் சலித்துப் போயிற்று.

1 2 3 4