சங்கீதம் 120 : 1 (RCTA)
இன்னலுற்ற வேளையில் நான் ஆண்டவரைக் கூவி அழைத்தேன்: அவரும் என் குரலுக்குச் செவிசாய்த்தார்.
சங்கீதம் 120 : 2 (RCTA)
தீ நாக்கினின்று ஆண்டவரே, என் ஆன்மாவை விடுவியும்: வஞ்சக நாவினின்று என்னைக் காத்தருளும்.
சங்கீதம் 120 : 3 (RCTA)
வஞ்சகம் பேசும் நாவே உனக்கு என்ன தான் கிடைக்கும்? என்ன பலன் தான் உனக்குக் கிடைக்கும்?
சங்கீதம் 120 : 4 (RCTA)
வல்லவனின் கூரிய அம்புகள் தான் கிடைக்கும்: தணல் வீசும் கரிகள் தான் பலன்.
சங்கீதம் 120 : 5 (RCTA)
ஐயோ, மோசக் நாட்டில் இன்னும் நான் உள்ளேனே! கேதார் இனத்தவர் கூடாரங்களில் நான் கூடியிருக்கிறேனே!
சங்கீதம் 120 : 6 (RCTA)
வெகு காலம் நான் வாழ்ந்து விட்டேன்: சமாதானத்தை வெறுத்தவர்களோடு நான் நீடிய காலமாய் வாழ்ந்து விட்டேன்.
சங்கீதம் 120 : 7 (RCTA)
சமாதானம் என்று நான் பேசிய போது, அவர்கள் போருக்கு என்னை வற்புறுத்தினர்.

1 2 3 4 5 6 7