சங்கீதம் 12 : 1 (RCTA)
ஆண்டவரே, காத்தருளும்; ஏனெனில், உலகில் நல்லவர்களே இல்லாமல் போனார்கள்: மக்களிடையே சொல்லுறுதி என்பது இல்லை.
சங்கீதம் 12 : 2 (RCTA)
ஒவ்வொருவனும் தன் அயலானிடம் பொய் பேசுகிறான்: வஞ்சக நாவால் இரண்டகம் பேசுகிறான்.
சங்கீதம் 12 : 3 (RCTA)
வஞ்சக நாவையெல்லாம் ஆண்டவர் வேரோடு பிடுங்கி விடுவாராக: வீம்பு பேசுகிற நாவை அறுத்து விடுவாராக.
சங்கீதம் 12 : 4 (RCTA)
எங்கள் நாவன்மை எங்கள் வலிமை; எங்கள் பேச்சுத் திறனே எங்கள் பக்கத் துணை: எங்களுக்குப் பெரியவன் யார்?' என்று சொல்லுகிறவர்களை ஒழித்து விடுவாராக.
சங்கீதம் 12 : 5 (RCTA)
எளியோர் படும் துன்பத்தின் பொருட்டும், ஏழைகள் விடும் பெருமூச்சின் பொருட்டும் இதோ நான் எழுகிறேன்: பாதுகாப்பு வேண்டுபவனுக்கு அதை அளிப்பேன்' என்கிறார் ஆண்டவர்.
சங்கீதம் 12 : 6 (RCTA)
ஆண்டவர் தம் சொற்கள் நேர்மையானவை: மண்ணிலிருந்து பிரித்து ஏழு முறை புடமிடப்பட்ட நல்ல வெள்ளி போன்றவை.
சங்கீதம் 12 : 7 (RCTA)
ஆண்டவரே, நீர் எங்களைக் காத்தருளும்: இந்தத் தலைமுறை மக்களினின்று என்றும் எங்களைக் காப்பாற்றும்.
சங்கீதம் 12 : 8 (RCTA)
தீயோர் எங்கும் சூழ்ந்துள்ளனர்: அற்ப மனிதர் தலை நிமிர்ந்து நடக்கின்றனர் .

1 2 3 4 5 6 7 8