சங்கீதம் 118 : 1 (RCTA)
அல்லேலூயா! ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்: ஏனெனில், அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது இரக்கம்.
சங்கீதம் 118 : 2 (RCTA)
என்றென்றும் உள்ளது அவரது இரக்கம்' என்று இஸ்ராயேல் இனத்தார் சாற்றுவார்களாக.
சங்கீதம் 118 : 3 (RCTA)
என்றென்றும் உள்ளது அவரது இரக்கம்' என்று ஆரோனின் குலத்தார் சாற்றுவார்களாக.
சங்கீதம் 118 : 4 (RCTA)
என்றென்றும் உள்ளது அவரது இரக்கம்' என ஆண்டவருக்கு அஞ்சுவோர் அனைவரும் சாற்றுவார்களாக.
சங்கீதம் 118 : 5 (RCTA)
துன்ப வேளையில் நான் ஆண்டவரைக் கூவியழைத்தேன்: ஆண்டவரும் என் மன்றாட்டைக் கேட்டு எனக்கு விடுதலை அளித்தார்.
சங்கீதம் 118 : 6 (RCTA)
ஆண்டவர் என் பக்கம் இருக்க நான் ஏன் அஞ்ச வேண்டும்? எவன் எனக்கு என்ன செய்ய முடியும்?
சங்கீதம் 118 : 7 (RCTA)
எனக்குத் துணை செய்யும் ஆண்டவர் என் பக்கம் உள்ளார்: சிதறுண்ட என் எதிரிகளை நான் ஏளனத்துடன் நோக்குவேன்.
சங்கீதம் 118 : 8 (RCTA)
மனிதன் மீது நம்பிக்கை வைப்பதை விட ஆண்டவரிடம் தஞ்சம் புகுவதே நலம்.
சங்கீதம் 118 : 9 (RCTA)
தலைவர்கள் மீது நம்பிக்கை வைப்பதை விட ஆண்டவரிடம் தஞ்சம் புகுவதே நலம்.
சங்கீதம் 118 : 10 (RCTA)
புறவினத்தார் எல்லாரும் என்னைச் சூழ்ந்து கொண்டனர்: ஆண்டவர் பெயரால் அவர்களை நொறுக்கி விட்டேன்.
சங்கீதம் 118 : 11 (RCTA)
எப்பக்கமும் என்னைச் சூழ்ந்து கொண்டனர்: ஆண்டவர் பெயரால் அவர்களை நொறுக்கி விட்டேன்.
சங்கீதம் 118 : 12 (RCTA)
தேனீக்களைப் போல் என்னை வளைத்துக் கொண்டனர்; நெருப்பில் அகப்பட்ட முட்களைப் போல் எரிந்தனர்: ஆண்டவர் பெயரால் அவர்களை நொறுக்கி விட்டேன்.
சங்கீதம் 118 : 13 (RCTA)
என்னைத் தள்ளினார்கள்; விழத்தாட்டத் தள்ளிப் பார்த்தார்கள்: ஆனால் ஆண்டவர் எனக்குத் துணை செய்தார்.
சங்கீதம் 118 : 14 (RCTA)
ஆண்டவர் என் வலிமையும் திடமுமாய் உள்ளார்: எனக்கு அவர் மீட்பரானார்.
சங்கீதம் 118 : 15 (RCTA)
நீதிமான்களின் கூடாரங்களில் இதோ மீட்புக்குறித்து மகிழ்ச்சிக் குரல் ஒலிக்கின்றது: ஆண்டவரது வலக்கரம் வலிமையாய்ச் செயலாற்றியது.
சங்கீதம் 118 : 16 (RCTA)
ஆண்டவரது வலக்கரம் என்னை நிலை நிறுத்தியது: ஆண்டவரது வலக்கரம் வலிமையாய்ச் செயலற்றியது.
சங்கீதம் 118 : 17 (RCTA)
இறந்தொழியன், உயிர் வாழ்வேன்: ஆண்டவருடைய அருஞ்செயல்களைப் பறைசாற்றுவேன்.
சங்கீதம் 118 : 18 (RCTA)
கண்டித்தார், ஆண்டவர் என்னைக் கண்டித்தார்: ஆனால் சாவுக்கு என்னைக் கையளிக்கவில்லை.
சங்கீதம் 118 : 19 (RCTA)
நீதிமான்கள் நுழையும் வாயில்களை திறந்து விடுங்கள்: உள் நுழைந்து நான் ஆண்டவருக்கு நன்றி செலுத்துவேன்.
சங்கீதம் 118 : 20 (RCTA)
ஆண்டவரது வாயில் இது; இது வழியாய் நீதிமான்களே நுழைவர்.
சங்கீதம் 118 : 21 (RCTA)
என் மன்றாட்டை நீர் கேட்டதால் நான் உமக்கு நன்றி செலுத்துவேன்: எனக்கு நீர் மீட்பரானதால் உமக்கு நன்றி செலுத்துவேன்.
சங்கீதம் 118 : 22 (RCTA)
வீடு கட்டுவோர் புறக்கணித்த கல்லே வீட்டுக்கு மூலைக்கல் ஆயிற்று.
சங்கீதம் 118 : 23 (RCTA)
ஆண்டவர் செயலிது: நம் கண்ணுக்கு வியப்பே!
சங்கீதம் 118 : 24 (RCTA)
ஆண்டவர் குறித்த நாள் இதுவே: இன்று அக்களிப்போம், அகமகிழ்வோம்.
சங்கீதம் 118 : 25 (RCTA)
ஆண்டவரே மீட்டருளும்: ஆண்டவரே வெற்றியைத் தாரும்.
சங்கீதம் 118 : 26 (RCTA)
ஆண்டவர் பெயரால் வருபவர் ஆசி பெற்றவர்; ஆண்டவரது இல்லத்தினின்று உங்களுக்கு ஆசி கூறுகிறோம்.
சங்கீதம் 118 : 27 (RCTA)
ஆண்டவராகிய இறைவனே, நம்மீது ஒளிவீசினார்: மரக் கிளைகளைக் கையிலேந்தி விழாப்பவனி நடத்துங்கள், பீடத்தின் மூலை வரைக்கும் செல்லுங்கள்.
சங்கீதம் 118 : 28 (RCTA)
என் இறைவன் நீரே, உமக்கு நான் நன்றி செலுத்துகிறேன்: என் இறைவா, உம்மைப் புகழ்ந்தேத்துகிறேன்.
சங்கீதம் 118 : 29 (RCTA)
ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்: ஏனெனில் அவர் நல்லவர், என்றென்றும் உள்ளது அவரது இரக்கம்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29