சங்கீதம் 116 : 1 (RCTA)
(115:1) அல்லேலூயா! ஆண்டவர் மீது அன்பு வைத்தேன்; ஏனெனில், என் மன்றாட்டின் குரலை அவர் கேட்டருளினார்.
சங்கீதம் 116 : 2 (RCTA)
(115:2) ஏனெனில், அவரை நான் மன்றாடிய நாளில் எனக்குச் செவிசாய்த்தருளினார்.
சங்கீதம் 116 : 3 (RCTA)
(115:3) மரணத்தின் தளைகள் என்னை வளைத்துக் கொண்டன; பாதாளங்களின் கண்ணிகள் என்னைப் பற்றிக்கொண்டன. கவலைக்கும் துன்பத்துக்கும் நான் ஆளானேன்.
சங்கீதம் 116 : 4 (RCTA)
(115:4) நானோ ஆண்டவருடைய பெயரைக் கூவி அழைத்தேன்: 'ஓ ஆண்டவரே, என் உயிரைக் காத்தருளும்' என்று வேண்டினேன்.
சங்கீதம் 116 : 5 (RCTA)
(115:5) ஆண்டவர் கருணையும் நீதியுமுள்ளவர்: நம் இறைவன் இரக்கமுள்ளவர்.
சங்கீதம் 116 : 6 (RCTA)
(115:6) எளியோரை ஆண்டவர் காக்கின்றார்: துயர் மிக்கவனான எனக்கு மீட்பளித்தார்.
சங்கீதம் 116 : 7 (RCTA)
(115:7) நெஞ்சே நீ மீளவும் அமைதிகொள்: ஏனெனில் ஆண்டவர் உனக்கு நன்மை செய்தார்.
சங்கீதம் 116 : 8 (RCTA)
(115:8) ஏனெனில், என் ஆன்மாவை மரணத்தினின்று விடுவித்தார்: நான் கண்ணீர் சிந்தாதபடியும் என் கால்கள் இடறி விழாதபடியும் காப்பாற்றினார்.
சங்கீதம் 116 : 9 (RCTA)
(115:9) நான் ஆண்டவர் திருமுன் நடந்திடுவேன்: வாழ்வோர் நாட்டில் வாழ்ந்திடுவேன்.
சங்கீதம் 116 : 10 (RCTA)
(1) மிக மிகத் துன்புறுகிறேன்!' என்று சொன்னபோதுங் கூட நான் ஆண்டவரை நம்பினேன்.
சங்கீதம் 116 : 11 (RCTA)
(2) எந்த மனிதனும் நம்பிக்கைக்குரியவனல்லன்' என்று அச்சத்தால் மேலிட்டுச் சொன்னேன்.
சங்கீதம் 116 : 12 (RCTA)
(3) ஆண்டவர் எனக்குச் செய்த எல்லா நன்மைகளுக்காகவும் நான் என்ன கைம்மாறு செய்வேன்?
சங்கீதம் 116 : 13 (RCTA)
(4) மீட்புக்காக நன்றி கூறிக் கிண்ணத்தைக் கையில் எடுத்து, ஆண்டவருடைய திருப்பெயரைச் சொல்லிக் கூப்பிடுவேன்.
சங்கீதம் 116 : 14 (RCTA)
(5) ஆண்டவருடைய மக்கள் அனைவரிடையேயும், அவருக்கு என் பொருத்தனைகளைச் செலுத்துவேன்.
சங்கீதம் 116 : 15 (RCTA)
(6) ஆண்டவர் தம் அடியாரின் மரணம், அவருடைய பார்வையில் மிக மதிப்புக்குரியது.
சங்கீதம் 116 : 16 (RCTA)
(7) ஆண்டவரே, நான் உம் ஊழியன்; உம் அடியேன்; உம் அடியாளின் மகன்: என் கட்டுகளை நீர் அவிழ்த்து விட்டீர்.
சங்கீதம் 116 : 17 (RCTA)
(8) புகழ்ச்சிப் பலியை உமக்குச் செலுத்துவேன்; ஆண்டவருடைய திருப்பெயரைக் கூவி அழைப்பேன்.
சங்கீதம் 116 : 18 (RCTA)
(9) ஆண்டவருடைய மக்கள் அனைவரிடையேயும் அவருக்கு என் பொருந்தனைகளைச் செலுத்துவேன்.
சங்கீதம் 116 : 19 (RCTA)
(10) ஆண்டவருடைய ஆலயத்தின் முற்றங்களிலும், யெருசலேமே, உன் நடுவிலும் ஆண்டவருக்கு என் பொருந்தனைகளைச் செலுத்துவேன்.
❮
❯