சங்கீதம் 115 : 1 (RCTA)
(114:9) எங்களுக்கன்று ஆண்டவரே, மகிமை எங்களுக்கன்று; அது உம் பெயருக்கே உரியது: உம் இரக்கத்தையும் பிரமாணிக்கத்தையும் முன்னிட்டு மகிமை உமக்கே உரியது.
சங்கீதம் 115 : 2 (RCTA)
(114:10) அவர்களுடைய கடவுள் எங்கே?" எனப் புறவினத்தார் சொல்வது ஏன்?
சங்கீதம் 115 : 3 (RCTA)
(114:11) நம் இறைவனோ வானுலகில் உள்ளார்: தாம் விரும்பிய யாவும் செய்துள்ளார்.
சங்கீதம் 115 : 4 (RCTA)
(114:12) அவர்களுடைய சிலைகள் வெறும் வெள்ளியும் பொன்னுமே: வெறும் மனிதக் கைவேலையே.
சங்கீதம் 115 : 5 (RCTA)
(114:13) அவைகளுக்கு வாய் உண்டு, பேசுவதில்லை: கண்கள் உண்டு, பார்ப்பதில்லை.
சங்கீதம் 115 : 6 (RCTA)
(114:14) செவிகள் உண்டு, கேட்பதில்லை; நாசி உண்டு, முகர்வதில்லை.
சங்கீதம் 115 : 7 (RCTA)
(114:15) கைகள் உண்டு, தொடுவதில்லை: கால்கள் உண்டு, நடப்பதில்லை; தொண்டையிலிருந்து ஒலி எழும்புவதில்லை.
சங்கீதம் 115 : 8 (RCTA)
(114:16) அவற்றைச் செய்கிறவர்களும் அவைகளுக்கு ஒப்பானவர்களே: அவற்றை நம்புகிறவர்களும் அவற்றைப் போன்றவர்களே.
சங்கீதம் 115 : 9 (RCTA)
(114:17) இஸ்ராயேல் மக்களுக்கு ஆண்டவர் மீது நம்பிக்கை உண்டு: அவரே அவர்களுக்குத் துணையும் கேடயமுமாவார்.
சங்கீதம் 115 : 10 (RCTA)
(114:18) ஆரோனின் குலத்தார்க்கு ஆண்டவர் மீது நம்பிக்கை உண்டு: அவரே அவர்களுக்குத் துணையும் கேடயமுமாவார்.
சங்கீதம் 115 : 11 (RCTA)
(114:19) ஆண்டவரை அஞ்சுவோர்க்கு அவர் மேல் நம்பிக்கை உண்டு: அவரே அவர்களுக்குத் துணையும் கேடயமுமாவார்.
சங்கீதம் 115 : 12 (RCTA)
(114:20) ஆண்டவர் நம்மை நினைவு கூர்கிறார்: நமக்குத் தம் ஆசியை அளிப்பார். இஸ்ராயேல் மக்களுக்கு ஆசியை அளிப்பார். ஆரோனின் இனத்தார்க்கு ஆசியை அளிப்பார்.
சங்கீதம் 115 : 13 (RCTA)
(114:21) தமக்கு அஞ்சி நடப்போர்க்கு ஆசி அளிப்பார்: சிறியோர்க்கும் பெரியோர்க்கும் ஆசி அளிப்பார்.
சங்கீதம் 115 : 14 (RCTA)
(114:22) ஆண்டவர் உங்கள் இனத்தைப் பெருகச் செய்வார்; நீங்களும் உங்கள் மக்களும் வளரச் செய்வார்.
சங்கீதம் 115 : 15 (RCTA)
(114:23) ஆண்டவரின் ஆசி பெற்றவர்கள் நீங்கள்: வானமும் வையமும் படைத்தவரே உங்களுக்கு ஆசி அளித்துள்ளார்.
சங்கீதம் 115 : 16 (RCTA)
(114:24) விண்ணகமோ ஆண்டவருக்கு உரியது; மண்ணகத்தையோ அவர் மனுமக்களுக்கு அளித்துள்ளார்.
சங்கீதம் 115 : 17 (RCTA)
(114:25) இறந்தோர் ஆண்டவரைப் புகழ்வதில்லை: கீழுலகம் செல்வோரும் அவரைப் புகழ்வதில்லை.
சங்கீதம் 115 : 18 (RCTA)
(114:26) உயிர் வாழும் நாமே ஆண்டவரை வாழ்த்துகின்றோம்: இன்றும் என்றும் வாழ்த்துகிறோம்.
❮
❯