சங்கீதம் 114 : 1 (RCTA)
அல்லேலூயா! இஸ்ராயேல் மக்கள் எகிப்தை விட்டு வெளியேறிய போது, கொடிய மக்களிடையினின்று யாக்கோபின் இனத்தார் வெளியேறிய போது,
சங்கீதம் 114 : 2 (RCTA)
யூதா குலம் அவருக்குத் திருத்தலமாயிற்று: இஸ்ராயேல் அவரது ஆட்சிக்கு உட்பட்டது.
சங்கீதம் 114 : 3 (RCTA)
கடல் அவரைக் கண்டது; கண்டு பின்வாங்கியது: யோர்தான் திசை திரும்பி ஓடியது.
சங்கீதம் 114 : 4 (RCTA)
மலைகள் செம்மறிகள் எனத் துள்ளின; குன்றுகள் ஆட்டுக் குட்டிகள் போலக் குதித்தன.
சங்கீதம் 114 : 5 (RCTA)
கடலே, உனக்கென்ன நடந்தது? ஏன் பின்வாங்கினாய்? யோர்தானே, உன்கென்ன ஆயிற்று? ஏன் திசை திரும்பிச் சென்றாய்?
சங்கீதம் 114 : 6 (RCTA)
மலைகளே, நீங்கள் ஏன் செம்மறிகள் போலத் துள்ளினீர்கள்? குன்றுகளே, நீங்கள் ஏன் ஆட்டுக் குட்டிகளெனக் குதித்தீர்கள்?
சங்கீதம் 114 : 7 (RCTA)
மாநிலமே, ஆண்டவர் திருமுன் நடுநடுங்கு: யாக்கோபின் இறைவனின் திருமுன் நடுக்கமுறு!
சங்கீதம் 114 : 8 (RCTA)
கற்பாறையை நீர்க் குளமாக்க வல்லவர் அவர்: பாறையை நீரூற்றாக ஆக்க வல்லவர் அவர்.

1 2 3 4 5 6 7 8