சங்கீதம் 112 : 1 (RCTA)
அல்லேலூயா! ஆண்டவருக்கு அஞ்சி நடப்பவன் பேறுபெற்றோன்: அவருடைய கட்டளைகளை நினைத்து அவன் இன்பம் கொள்வான்.
சங்கீதம் 112 : 2 (RCTA)
அவனுடைய சந்ததி பூவுலகில் வலிமை மிக்கதாய் இருக்கும்; நேர்மையுள்ளோரின் சந்ததி ஆசி பெறும்.
சங்கீதம் 112 : 3 (RCTA)
செழுமையும் செல்வமும் அவன் இல்லத்தில உலவும். அவனுடைய ஈகை என்றென்றும் நிலைக்கும்.
சங்கீதம் 112 : 4 (RCTA)
இருளில் ஒளியென அவன் நேர்மையுள்ளவரிடையே விளங்குவான்: கருணை, இரக்கம், நீதி உள்ளவனாய் இருப்பான்.
சங்கீதம் 112 : 5 (RCTA)
மனமிரங்கி கடன் கொடுக்கும் மனிதன் நல்லதைச் செய்கிறான்: தன் அலுவல்களை நீதியுடன் செய்பவனும் அப்படியே.
சங்கீதம் 112 : 6 (RCTA)
எந்நாளும் அவன் அசைவுறான்: என்றென்றும் அவன் மக்கள் நினைவில் வாழ்வான்.
சங்கீதம் 112 : 7 (RCTA)
தீமையான செய்தி எதுவும் அவனை வருத்தத்துக்குள்ளாக்காது: அவன் இதயம் ஆண்டவரில் நம்பிக்கை வைத்து எதையும் தாங்கக் கூடியது.
சங்கீதம் 112 : 8 (RCTA)
அவன் நெஞ்சம் நிலையாய் இருக்கும்; அவனுக்கு அச்சம் மேலிடாது: தன் எதிரிகிள் சிதறுண்டு போவதை அவன் பார்ப்பான்.
சங்கீதம் 112 : 9 (RCTA)
ஏழைகளுக்குப் பகிர்ந்தளிப்பான்; அவனது ஈகை என்றும் நிலைத்திருக்கும்: அவனது வலிமை மகிமை பெற்று விளங்கும்.
சங்கீதம் 112 : 10 (RCTA)
பாவியோ அதைப் பார்த்துச் சினம் கொள்வான்; பல்லைக் கடித்துக் கொண்டு தளர்வுறுவான்: பாவிகள் ஆசையெல்லாம் அழியும்.

1 2 3 4 5 6 7 8 9 10