சங்கீதம் 110 : 1 (RCTA)
ஆண்டவர் என் ஆண்டவரிடம் சொன்னது: "நான் உம் பகைவரை உமக்குக் கால் மணையாக்கும் வரை நீர் என் வலப்பக்கத்தில் அமரும்."
சங்கீதம் 110 : 2 (RCTA)
வலிமை மிக்க உமது செங்கோலை ஆண்டவர் சீயோனிலிருந்து ஓங்கச் செய்வார் உம் எதிரிகளிடையே அதிகாரம் செலுத்தும்.
சங்கீதம் 110 : 3 (RCTA)
புனிதம் சிறப்புற்றோங்க, நீர் உதித்த நாளிலே ஆட்சியுரிமையும் உம்மோடு உதித்தது: விடிவெள்ளி தோன்று முன் பனியைப் போல் உம்மை ஈன்றெடுத்தேன்.
சங்கீதம் 110 : 4 (RCTA)
மெல்கிசெதேக் முறைப்படி நீர் என்றென்றும் குருவே" என்று ஆண்டவர் ஆணையிட்டுச் சொன்னார்: சொன்ன சொல்லை மாற்றமாட்டார்.
சங்கீதம் 110 : 5 (RCTA)
ஆண்டவர் உம் வலப்பக்கத்தில் உள்ளார்: தம் கோபம் மூண்டெழும் நாளில் அரசர்களை நொறுக்குவார்.
சங்கீதம் 110 : 6 (RCTA)
நாடுகளுக்கு அவர் தீர்ப்பளிப்பார்; எதிரிகளைக் கொன்று குவிப்பார்; உலகெங்கும் தலைவர்களை அவர் நொறுக்குவார்.
சங்கீதம் 110 : 7 (RCTA)
வழியில் உள்ள நீரோடையில் அவர் பருகுவார்: ஆகவே தலை நிமிர்ந்து நடப்பார்.

1 2 3 4 5 6 7

BG:

Opacity:

Color:


Size:


Font: