சங்கீதம் 11 : 1 (RCTA)
நான் ஆண்டவரிடம் அடைக்கலம் தேடுகிறேன்: "பறவை போல் மலைக்குப் பறந்து செல்.
சங்கீதம் 11 : 2 (RCTA)
இதோ பாவிகள் வில்லை வளைக்கிறார்கள்; நாணில் அம்பு தொடுக்கிறார்கள்: நேர் மனத்தோர் மீது இருளில் அம்பு எய்யப் பார்க்கிறார்கள்;
சங்கீதம் 11 : 3 (RCTA)
அடிப்படையே தகர்க்கப்படும் போது, நீதிமான் என்ன செய்யமுடியும்?" என்று நீங்கள் என்னிடம் சொல்வானேன்.
சங்கீதம் 11 : 4 (RCTA)
ஆண்டவர் தம் இருக்கை புனித ஆலயம்: ஆண்டவருடைய அரியனை வானகம்! அவருடைய கண்கள் உற்று நோக்குகின்றன: மனுமக்களை அவை பரிசோதித்துப் பார்க்கின்றன.
சங்கீதம் 11 : 5 (RCTA)
நீதிமானையும் தீயோனையும் ஆண்டவர் ஊடுருவிப்பார்க்கிறார்: தீமையை விரும்புகின்றவனை அவர் வெறுக்கிறார்.
சங்கீதம் 11 : 6 (RCTA)
பாவிகள் மீது அவர் நெருப்பு மழையும் கந்தகமும் பொழிவார்: அனல் காற்றே அவர்கள் கதி.
சங்கீதம் 11 : 7 (RCTA)
ஏனெனில் ஆண்டவர் நீதியுள்ளவர், நீதியை நேசிப்பவர்: நேர்மையுள்ளவர்கள் அவர் முகத்தைக் காண்பார்கள்.

1 2 3 4 5 6 7