சங்கீதம் 108 : 1 (RCTA)
உறுதி கொண்டுள்ளது என் உள்ளம் இறைவா, உறுதி கொண்டுள்ளது என் உள்ளம்: இன்னிசை பாடுவேன் புகழ்ப்பா இசைப்பேன்.
சங்கீதம் 108 : 2 (RCTA)
என் நெஞ்சே விழித்தெழு; வீணையே, யாழே, விழித்தெழுங்கள்: பொழுது விடியச் செய்வேன்.
சங்கீதம் 108 : 3 (RCTA)
ஆண்டவரே, உம்மைப் புகழ்வேன்: மக்களினத்தாரிடையே உமக்குப் புகழ் பாடுவேன்.
சங்கீதம் 108 : 4 (RCTA)
ஏனெனில், வானமட்டும் உயர்ந்துள்ளது உமது இரக்கம்: மேகங்கள் மட்டும் உயர்ந்துள்ளது உம் சொல்வன்மை.
சங்கீதம் 108 : 5 (RCTA)
இறைவனே, நீர் வானங்களுக்கு மேலாக உன்னதராய் விளங்கியருளும்: உமது மாட்சிமை புவியனைத்தும் விளங்குவதாக.
சங்கீதம் 108 : 6 (RCTA)
உம்முடைய அன்பர்கள் விடுதலை பெறுமாறு உமது வலக்கரத்தால் எனக்குத் துணைசெய்யும்: எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
சங்கீதம் 108 : 7 (RCTA)
தம் திருத்தலத்தில் இறைவன் கூறியது: "அக்களிப்பிடையே சிக்கேமைக் கூறுபடுத்துவேன்; சூக்கோத் பள்ளத்தாக்கை அளவெடுத்துப் பிரிப்பேன்.
சங்கீதம் 108 : 8 (RCTA)
கிலேயாத் நாடும் என்னுடையதே; மனாசே நாடும் என்னுடையதே: எப்பிராயிம் எனக்குத் தலைச்சீரா, யூதா என்னுடைய செங்கோல்.
சங்கீதம் 108 : 9 (RCTA)
மோவாபு எனக்குப் பாதங் கழுவும் பாத்திரம்; ஏதோமின் மீது என் மிதியடியை எறிவேன்: பிலிஸ்தியாவின் மீது வெற்றி கொள்வேன்".
சங்கீதம் 108 : 10 (RCTA)
அரண்கொண்ட நகரத்துள் என்னை அழைத்துச் செல்பவர் யார்? ஏதோமுக்கு என்னைக் கூட்டிச் செல்பவர் யார்?
சங்கீதம் 108 : 11 (RCTA)
எங்களைக் கைவிட்ட இறைவனே, நீர்தாமன்றோ? எங்கள் படைகளோடு வராமலிருக்கும் இறைவா, நீர்தாமன்றோ?
சங்கீதம் 108 : 12 (RCTA)
என் எதிரியை மேற்கொள்ள எனக்கு உதவியளித்தருளும்: மனிதர் தரும் உதவி வீண்.
சங்கீதம் 108 : 13 (RCTA)
கடவுள் துணையால் வீரத்துடன் போராடுவோம்: ஏனெனில் நம் எதிரியை அவரே நசுக்கி விடுவார்.
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13