சங்கீதம் 101 : 1 (RCTA)
உமது அருளையும், நீதியையும் புகழ்ந்து பாடுவேன்; ஆண்டவரே, உமக்குக் கீதம் இசைப்பேன்.
சங்கீதம் 101 : 2 (RCTA)
நல்லார் ஒழுகிய நெறியில் நான் நடப்பேன்: என்னிடம் எப்போது வருவீர்? என் நடத்தையில் இதய நேர்மை விளங்கும்: என் இல்லத்திலே நான் மாசற்றவனாய் இருப்பேன்.
சங்கீதம் 101 : 3 (RCTA)
அநீதியானதெதையும் என் மனத்தில் கொள்ள மாட்டேன்; நெறி பிறழ்ந்தவர்களை நான் வெறுக்கிறேன்: அவர்கள் என்னோடு சேர மாட்டார்கள்.
சங்கீதம் 101 : 4 (RCTA)
முறை கெட்ட நெஞ்சம் எனக்கு வெகு தொலைவிலிருக்கும்: தீமையானதை நான் ஏற்கவே மாட்டேன்.
சங்கீதம் 101 : 5 (RCTA)
தன் அயலானுக்கு மறைவில் தீங்கிழைப்பவன் எவனோ. அவனை ஒழிப்பேன்: கர்வ மிக்க பார்வையும், இதயச் செருக்கும் உள்ளவன் எவனோ அவனை நான் பொறுக்க மாட்டேன்.
சங்கீதம் 101 : 6 (RCTA)
பூமியில் வாழும் விசுவாசிகள் மீது என் பார்வை தங்குகிறது: அவர்கள் என்னோடு வாழ்வார்கள்; நல்லார் ஒழுகிய நெறியில் நடப்பவன் எவனோ, அவன் எனக்குப் பணி புரிவான்.
சங்கீதம் 101 : 7 (RCTA)
வஞ்சக நடத்தையுள்ளவன் என் வீட்டில் குடியிரான்: பொய் செல்பவன் என் கண் முன்னே நிலை குலைந்து போவான்.
சங்கீதம் 101 : 8 (RCTA)
நாட்டில் வாழும் பாவிகள் அனைவரையும் ஒவ்வொரு நாளுமே அழித்துவிடுவேன்: தீமை இழைப்போர் அனைவரையும் ஆண்டவருடைய நகரினின்று ஒழித்து விடுவேன்.
❮
❯