நீதிமொழிகள் 9 : 1 (RCTA)
ஞானம் தனக்கு ஒரு வீட்டைக் கட்டி, ஏழு தூண்களையும் அறுத்து நிறுத்தினது;
நீதிமொழிகள் 9 : 2 (RCTA)
தன் பலி மிருகங்களையும் கொன்று, பழச் சாற்றையும் கலந்து வார்த்து விருந்து செய்தது.
நீதிமொழிகள் 9 : 3 (RCTA)
அது தன் ஊழியக்காரிகளைக் கோட்டைக்கும், நகரத்தின் மதில்களுக்கும் அனுப்பி,
நீதிமொழிகள் 9 : 4 (RCTA)
சிறுவனாய் இருப்பவன் எவனும் என்னிடம் வருவானாக என்று சொன்னது. விவேக மில்லாதவர்களுக்கு உரைத்ததாவது: வாருங்கள்; என் அப்பத்தை உண்டு,
நீதிமொழிகள் 9 : 5 (RCTA)
உங்களுக்காக நான் கலந்து வைத்திருக்கும் பழச்சாற்றையும் குடியுங்கள்.
நீதிமொழிகள் 9 : 6 (RCTA)
சிறுபிள்ளைத் தனத்தை விட்டுவிட்டு வாழுங்கள். விவேகத்தின் வழிகளில் நடந்து செல்லுங்கள்.
நீதிமொழிகள் 9 : 7 (RCTA)
கேலி செய்பவனைக் கண்டிக்கிறவன் தனக்குத்தானே தீமை செய்கிறான். கொடியவனைக் கண்டிக்கிறவன் தனக்கே தீங்கு விளைவிக்கிறான்.
நீதிமொழிகள் 9 : 8 (RCTA)
கேலி செய்பவனைக் கண்டியாதே; கண்டித்தால் உன்னைப் பகைப்பான். ஞானியைக் கடிந்து கொண்டாலோ அவன் உனக்கு அன்பு செய்வான்.
நீதிமொழிகள் 9 : 9 (RCTA)
ஞானிக்கு வாய்ப்பு அளி; அவனுக்கு ஞானம் சேரும். நீதிமானைப் படிப்பி; அவனும் (படிப்பைப்) பெற்றுக்கொள்ள விரைவான்.
நீதிமொழிகள் 9 : 10 (RCTA)
தெய்வ பயமே ஞானத்தின் தொடக்கம். விவேகமே தூயவர்களின் அறிவாம்.
நீதிமொழிகள் 9 : 11 (RCTA)
ஏனென்றால், என்னால் உன் வாழ்நாட்கள் அதிகரிக்கும்; நீடிய ஆயுளும் கிடைக்கும்.
நீதிமொழிகள் 9 : 12 (RCTA)
நீ ஞானியாயிருந்தால் அது உனக்கே இலாபம். நீ கேலி செய்பவனாயிருந்தாலோ நீயே தீமையைச் சுமப்பாய்.
நீதிமொழிகள் 9 : 13 (RCTA)
மதி கெட்டவளும் சண்டைக்காரியும் பசப்பால் நிறைந்தவளும் வேறொன்றும் அறியாதவளுமான ஒரு பெண்,
நீதிமொழிகள் 9 : 14 (RCTA)
நகரத்தின் ஓர் உயர்ந்த இடத்திலிருந்து இறங்கி, தன் வீட்டு வாயிலில் ஓர் ஆசனத்திலே அமர்ந்தாள்.
நீதிமொழிகள் 9 : 15 (RCTA)
வழி கடந்து செல்கின்றவர்களையும், தங்கள் பாதையில் செல்கின்றவர்களையும் அழைத்து,
நீதிமொழிகள் 9 : 16 (RCTA)
இளைஞனாய் இருப்பவன் என்னிடம் திரும்புவானாக என்றாள்;
நீதிமொழிகள் 9 : 17 (RCTA)
அறிவில்லாதவனையும் பார்த்து, திருடின பழச்சாறு அதிக இனிமையானதும், திருடின அப்பம் அதிகச் சுவையுள்ளதுமாம் என்றாள்.
நீதிமொழிகள் 9 : 18 (RCTA)
ஆனால், அங்கே அரக்கர்கள் இருக்கிறார்களென்றும், அவளுடைய விருந்தினர் நரக பாதாளங்களில் விழப்போகிறார்களென்றும் (அறிவில்லாதவர்) அறிகிறதில்லை.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18