நீதிமொழிகள் 8 : 1 (RCTA)
ஞானம் கூக்குரலிடுகிறதில்லையோ ? விவேகம் தன் ஓசையை வெளிப்படுத்துகிறதில்லையோ ?
நீதிமொழிகள் 8 : 2 (RCTA)
அது வழியின்மேல் உயர்ந்த மலைகளிலும் நடுவழிகளிலும் நின்று கொண்டு,
நீதிமொழிகள் 8 : 3 (RCTA)
நகரின் கதவுகள் அண்மையிலும் வாயில்களிலும் நின்று பேசிச் சொல்வதாவது:
நீதிமொழிகள் 8 : 4 (RCTA)
ஓ மனிதரே, உங்களை நோக்கிக் கூப்பிடுகிறேன். என் குரலோசை மனித மக்களை நோக்கி ஒலிக்கிறது.
நீதிமொழிகள் 8 : 5 (RCTA)
சிறுவர்களே, சூட்சத்தை அடையுங்கள். ஞானமற்றோரே, சிந்தித்து உணர்வு பெறுங்கள்.
நீதிமொழிகள் 8 : 6 (RCTA)
நான் மேலான காரியங்களைக் குறித்துப் பேசப்போகிறபடியால், கேளுங்கள். நேர்மையானவர்களைப் போதிப்பதற்காக உன் உதடுகள் திறக்கப்படும்.
நீதிமொழிகள் 8 : 7 (RCTA)
என் வாய் உண்மையைக் கற்பிக்கும். என் உதடுகள் அக்கிரமத்தை வெறுக்கும்.
நீதிமொழிகள் 8 : 8 (RCTA)
என் உரைகள் யாவும் நீதியானவை. அவற்றில் தீங்கும் பொல்லாப்பு முள்ளது எதுவுமே கிடையாது.
நீதிமொழிகள் 8 : 9 (RCTA)
அவை அறிவுடையோர்க்கு நேர்மையானவையும், அறிவால் கண்டுபிடிப்பவர்களுக்கு நீதியானவையுமாய் இருக்கின்றன.
நீதிமொழிகள் 8 : 10 (RCTA)
பணத்தையன்று, என் போதகத்தையே பெற்றுக்கொள்ளுங்கள். பசும் பொன்னைவிட என் படிப்பினையையே அதிகமாய் விரும்பி ஏற்றுக்கொள்ளுங்கள்.
நீதிமொழிகள் 8 : 11 (RCTA)
ஞானம் மிக விலை யுயர்ந்தது, அனைத்திலும் அதிக உத்தமமானது. நாடத்தக்கது எதுவும் அதற்கு இணையாகக் கூடியதன்று.
நீதிமொழிகள் 8 : 12 (RCTA)
ஞானம் என்னும் நான் இறைவனின் திட்டத்தில் வாழ்கின்றேன்; கற்றறிந்த சிந்தனைகளின் இடையிலும் இருக்கின்றேன்.
நீதிமொழிகள் 8 : 13 (RCTA)
தெய்வ பயம் தீமையைப் பகைக்கின்றது. நானும் அகந்தையையும் வீம்பையும் தீயவழியையும், இரு பொருள்பட மொழியும் நாவையும் வெறுக்கிறேன்.
நீதிமொழிகள் 8 : 14 (RCTA)
ஆலோசனையும் நடுநீதியும் என்னுடையவை; விவேகமும் என்னுடையது; வலிமையும் என்னுடையதே.
நீதிமொழிகள் 8 : 15 (RCTA)
அரசர் ஆள்வதும், சட்டங்கள் செய்வோர் நியாயமானவைகளைக் கற்பிப்பதும் என்னாலேதான்.
நீதிமொழிகள் 8 : 16 (RCTA)
என்னாலேயே தலைவர்கள் கட்டளையிட்டும், வல்லவர்கள் நீதியை விதித்தும் வருகிறார்கள்.
நீதிமொழிகள் 8 : 17 (RCTA)
என்னை நேசிக்கிறவர்களை நானும் நேசிக்கிறேன். என்னை நோக்கிய வண்ணம் அதிகாலையில் விழிப்பவர்கள் என்னைக் கண்டுபிடிப்பார்கள்.
நீதிமொழிகள் 8 : 18 (RCTA)
சொத்தும் மகிமையும் மேலான செல்வமும் நீதியும் என்னோடு இருக்கின்றன.
நீதிமொழிகள் 8 : 19 (RCTA)
ஏனென்றால், என் கனி பொன்னையும் இரத்தினக் கல்லையும்விட அருமையானதும், என் தளிர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட வெள்ளியை விட அதிக நலமுமாய் இருக்கின்றன.
நீதிமொழிகள் 8 : 20 (RCTA)
நான் நீதியின் பாதைகளிலும் நியாய வழிகள் மத்தியிலும் உலாவுகின்றேன்.
நீதிமொழிகள் 8 : 21 (RCTA)
இவை அனைத்தும் என்னை நேசிக்கின்றவர்களைச் செல்வராக்கவும் அவர்களுடைய செல்வங்களை நிறைக்கும்படியாகவுமே.
நீதிமொழிகள் 8 : 22 (RCTA)
ஆண்டவர் தம் வழிகளின் தொடக்கத்திலேயே, ஆதியில் எதையும் படைக்குமுன்னரே, என்னை உரிமை கொண்டிருந்தார்.
நீதிமொழிகள் 8 : 23 (RCTA)
ஆதியில், பூமி உண்டாகு முன்னமே, நித்தியம் தொட்டு நான் ஏற்படுத்தப்பட்டிருக்கிறேன்.
நீதிமொழிகள் 8 : 24 (RCTA)
பாதாளங்கள் இன்னமும் இருக்கவில்லை; நானோ ஏற்கெனவே கருத்தரிக்கப்பட்டிருந்தேன். நீரூற்றுகள் இன்னும் புறப்படலில்லை;
நீதிமொழிகள் 8 : 25 (RCTA)
பாரச் சுமையுள்ள மலைகளும் இன்னும் உண்டாகவில்லை; நானோ குன்றுகளுக்கு முன்னமே பிறப்பிக்கப்பட்டிருந்தேன்.
நீதிமொழிகள் 8 : 26 (RCTA)
இன்னும் நிலத்தையும் ஆறுகளையும் உலகின் துருவங்களையும் (கடவுள்) படைக்கவில்லை.
நீதிமொழிகள் 8 : 27 (RCTA)
அவர் வான மண்டலங்களை நிறுவ நினைக்கையிலும் நான் கூடவிருந்தேன். அவர் நிச்சயமான சட்டத்தாலும் எல்லைகளாலும் பாதாளங்களைச் சுற்றி அடைக்கையிலும்,
நீதிமொழிகள் 8 : 28 (RCTA)
அவர் மேலே வானத்தை உறுதிப்படுத்தி நீர்த்திரள்களை முறையாக நிறுத்தி வைக்கையிலும், கடலுக்குக் கோடி கட்டித் தன் எல்லையைக் கடக்காதபடி நீருக்குச் சட்டம் அமைக்கையிலும்,
நீதிமொழிகள் 8 : 29 (RCTA)
கடலுக்குக் கோடி கட்டித் தன் எல்லையைக் கடக்காதபடி நீருக்குச் சட்டம் அமைக்கையிலும், பூமியின் அடித்தளங்களை நிறுத்திடுகையிலும்,
நீதிமொழிகள் 8 : 30 (RCTA)
அவரோடுதானே நான் எல்லாவற்றையும் சீர்ப்படுத்தி வைத்துக் கொண்டிருந்தேன். நாள்தோறும் மகிழ்ந்துகொண்டும், எக்காலத்தும் அவர்முன்பாக விளையாடிக் கொண்டும்,
நீதிமொழிகள் 8 : 31 (RCTA)
எல்லா உலகத்திலும் விளையாடிக் கொண்டும், இருந்தேன். என் மகிழ்ச்சியோ மனித மக்களுடன் இருத்தலேயாம்.
நீதிமொழிகள் 8 : 32 (RCTA)
ஆகையால், என் மக்களே, இப்பொழுது எனக்குச் செவி கொடுங்கள். என் வழிகளைக் காப்பவர் எவரோ அவரே பேறுபெற்றோர்.
நீதிமொழிகள் 8 : 33 (RCTA)
என் படிப்பினையைக் கேட்டு ஞானிகளாய் இருங்கள்; அதை இகழ்ந்து தள்ளி விடாதீர்கள்.
நீதிமொழிகள் 8 : 34 (RCTA)
நான் சொல்வதைக் கேட்டு, நாள்தோறும் என் வாயிலண்டை விழித்திருந்து, என் கதவு நிலைகளைக் கவனித்துக் கொண்டிருப்பவனே பேறுபேற்றவன்.
நீதிமொழிகள் 8 : 35 (RCTA)
என்னைக் கண்டுபிடிப்பவன் வாழ்வடைவான்; ஆண்டவரிடமிருந்து மீட்பையும் பெற்றுக்கொள்வான்.
நீதிமொழிகள் 8 : 36 (RCTA)
ஆனால் எனக்கு விரோதமாய்ப் பாவஞ் செய்பவன் தன் ஆன்மாவைக் காயப்படுத்துவான். என்னைப் பகைக்கின்ற அனைவரும் சாவை நேசிக்கின்றார்கள்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36