நீதிமொழிகள் 7 : 1 (RCTA)
என் மகனே, என் வார்த்தைகளைக் கைக்கொண்டு ஒழுகு.
நீதிமொழிகள் 7 : 2 (RCTA)
என் கட்டளைகளையும் உன் மனத்திலே (செல்வம்போல்) கட்டிக் காத்துவை. உன் கட்டளைகளை உன் கண் விழியைப் போல் காத்துக்கொள். என் சட்டத்தை அனுசரித்து வந்தால் வாழ்வு பெறுவாய்.
நீதிமொழிகள் 7 : 3 (RCTA)
அதை உன் விரல்களிலும் கட்டு; பலகைகளில் (எழுதி வைத்தாற்போல்) அதை உன் இதயத்திலும் எழுதி வை.
நீதிமொழிகள் 7 : 4 (RCTA)
ஞானத்தை நோக்கி: நீ என் சகோதரி என்று சொல்.
நீதிமொழிகள் 7 : 5 (RCTA)
விவேகத்தை உன் தோழியென்று அழை. அவை நயமாயும் இனிமையாயும் பேசுகிற அன்னிய பெண்ணினின்று உன்னைக் காக்கும்.
நீதிமொழிகள் 7 : 6 (RCTA)
ஏனென்றால், என் வீட்டுப் பலகணி வழியாய் நான் வெளியே பார்த்தேன்.
நீதிமொழிகள் 7 : 7 (RCTA)
சில வாலிபர்களையும் அவர்களிடையே ஒரு மதிகெட்ட இளைஞனையும் கண்டேன்.
நீதிமொழிகள் 7 : 8 (RCTA)
அவன் மூலையோரமாய்த் தெருவில் சென்று ஒருத்தியுடைய வீட்டு வழியாய் நடக்கிறான்.
நீதிமொழிகள் 7 : 9 (RCTA)
பொழது சாய்ந்து, மாலை மயங்கி, இரவு வந்து காரிருள் கவிகிற நேரமாயிற்று.
நீதிமொழிகள் 7 : 10 (RCTA)
இதோ, தாசியின் கோலம் பூண்டு ஆன்மாக்களைக் கவர ஆயத்தமான ஒரு பெண் அவனுக்கு எதிர்ப்படுகிறாள். (அவள்) வாயாடியும், எங்கும் போகிறவளும், அடக்கமும் பொறுமையும் அற்றவளும்,
நீதிமொழிகள் 7 : 11 (RCTA)
கால் வைத்துத் தன் வீட்டில் தங்கமாட்டாதவளுமாம்.
நீதிமொழிகள் 7 : 12 (RCTA)
அவள் மாறி மாறி வீட்டுக்கு வெளியேயும் தெருவிலும் மூலையோரங்களிலும் பதிவிருப்பவள்.
நீதிமொழிகள் 7 : 13 (RCTA)
அவள் அவ்விளஞனைக் கட்டிப் பிடித்து, முத்தமிட்டு, நாணமற்ற முகத்தோடு கொஞ்சிச் சொல்வதாவது:
நீதிமொழிகள் 7 : 14 (RCTA)
என் எண்ணம் நிறைவேறும்படி நான் பலியை நேர்ந்து, இன்றுதானே என் நேர்ச்சைகளைச் செலுத்தினேன்.
நீதிமொழிகள் 7 : 15 (RCTA)
ஆகையால் உன்னைக் காண ஆசைப்பட்டே நான் புறப்பட்டு உனக்கு எதிர் கொண்டு வந்தபோது, இதோ உன்னைக் கண்டு பிடித்தேன்.
நீதிமொழிகள் 7 : 16 (RCTA)
என் கட்டிலைக் கயிறு கொண்டு பின்னியுள்ளேன். எகிப்தினின்று கொண்டு வரப்பட்ட சித்திர இரத்தினக் கம்பளத்தால் அதை மூடியுள்ளேன்.
நீதிமொழிகள் 7 : 17 (RCTA)
என் படுக்கையை வெள்ளைப்போளம், கரியபோளம், இலவங்கம் முதலியவற்றின் தைலத்தாலும் தெளித்துள்ளேன்.
நீதிமொழிகள் 7 : 18 (RCTA)
வா, பொழுது புலருமட்டும் கொங்கைகளின் இன்பம் நுகர்ந்து, ஆசைதீர அள்ளி அணைத்துக் களித்திருப்போம்.
நீதிமொழிகள் 7 : 19 (RCTA)
ஏனென்றால், என் கணவன் வீட்டில் இல்லை; நெடு நாளையப் பயணம் சென்றுள்ளான்.
நீதிமொழிகள் 7 : 20 (RCTA)
அவன் பணப்பையைத் தன்னுடன் கொண்டுபோயிருக்கிறான். அவன் பௌர்ணமியன்றுதான் வீட்டுக்குத் திரும்பி வருவான்.
நீதிமொழிகள் 7 : 21 (RCTA)
(இவ்வாறு) அவள் மாயப் பேச்சுகளால் அவனைச் சிக்கவைத்து, தன் உதடுகளின் கொஞ்சல்களால் அவனை இழுத்துக்கொண்டாள்.
நீதிமொழிகள் 7 : 22 (RCTA)
பலிக்காகக் கூட்டிக்கொண்டு போகப்படும் எருதுபோலும், மோக வெறியால் குதித்து நிற்கும் செம்மறிக்கிடாயைப் போலும், மதியீனனான அவன், தான் சங்கிலி இடப்பட இழுத்துக்கொண்டு போகப்படுகிறான் என்று அறியாமல், உடனே அவளைப் பின்செல்கிறான்.
நீதிமொழிகள் 7 : 23 (RCTA)
தன் உயிர் சேதமாகப் போகிறதென்று அறியாத பறவை வலைக்குள் வேகமாகப் பறந்தோடுவதுபோல் அவனும் போகிறான். ஈட்டி அவனுடைய ஈரலைக் குத்தி ஊடுருவுமட்டும் (காரியத்தைக் கண்டுபிடித்து அறியமாட்டான்).
நீதிமொழிகள் 7 : 24 (RCTA)
ஆகையினால், என் மகனே, என்னைக் கேள்.
நீதிமொழிகள் 7 : 25 (RCTA)
என் வாயின் வார்த்தைகளைக் கவனி. உன் மனம் அவளுடைய வழிகளில் இழுக்கப்படாதிருப்பதாக; அவளுடைய அடிச்சுவடுகளால் வஞ்சிக்கப்படாதிருப்பதாக.
நீதிமொழிகள் 7 : 26 (RCTA)
ஏனென்றால், அவள் பலரைக் காயப்படுத்தி விழத்தாட்டியுள்ளாள். மிக வல்லர்களுங்கூட அவளால் கொல்லப்பட்டார்கள்.
நீதிமொழிகள் 7 : 27 (RCTA)
அவளுடைய வீடு சாவின் அந்தரங்கம்வரைக்கும் ஊடுருவிச் செல்கின்ற நரக வாயிலேயாம்.
❮
❯