நீதிமொழிகள் 6 : 1 (RCTA)
என் மகனே, நீ உன் நண்பனுக்குப் பிணையாளி யாகிவிட்டால் அன்னியனிடம் உன் கையைச் சிக்க வைத்து விட்டாய்.
நீதிமொழிகள் 6 : 2 (RCTA)
உன் வாயின் வார்த்தைகளாலேயே வலையில் உட்பட்டும், உன் சொந்தச் சொற்களாலேயே பிடிபட்டும் போனாய்.
நீதிமொழிகள் 6 : 3 (RCTA)
ஆகையால், நான் சொல்வதைக் கேட்டு, என் மகனே, உன்னை நீயே விடுவித்துக்கொள். உன் அயலானின் கையில் விழுந்து விட்டாய். ஆகையால், தப்பியோடத் துரிதப்படு.
நீதிமொழிகள் 6 : 4 (RCTA)
உன் நண்பனைத் தூண்டி விடு. உன் கண்களுக்கு உறக்கத்தைத் தராதே. உன் கண்களும் தூங்குவன அல்ல.
நீதிமொழிகள் 6 : 5 (RCTA)
வேடன் கையினின்று பறவையைப் போலவும், அவன் கையினின்று மான்குட்டியைப் போலவும் தப்பித்துக் கொள்ளப்பார்.
நீதிமொழிகள் 6 : 6 (RCTA)
ஓ சோம்பேறியே, எறும்பினிடம் போய், அதன் வழிகளைக் கவனித்துப் பார்த்து ஞானத்தைக் கற்றுக்கொள்.
நீதிமொழிகள் 6 : 7 (RCTA)
அதற்குக் தலைவனும் ஆசானும் அரசனும் இல்லாதிருந்தும்,
நீதிமொழிகள் 6 : 8 (RCTA)
அது கோடைக்காலத்தில் தன் உணவை விரும்பி, பிற்காலத்திற்கு வேண்டியதை அறுப்புக் காலத்தில்தானே சேகரிக்கின்றது.
நீதிமொழிகள் 6 : 9 (RCTA)
சோம்பேறியே, எதுவரை தூங்குவாய் ? உன் தூக்கதினின்று எப்போது எழுந்திருப்பாய் ? கொஞ்சம் தூங்குவேன்;
நீதிமொழிகள் 6 : 10 (RCTA)
சற்றுநேரம் உறங்குவேன்; தூங்கும் பொருட்டுக் கொஞ்சம் கைகளை மடக்குவேன் என்கிறாய்.
நீதிமொழிகள் 6 : 11 (RCTA)
அதற்குள்ளே எளிமை பிரயாணியைப் போலவும், வறுமை ஆயுதம் தாங்கியவனைப் போலவும் உனக்கு வந்து விடும். நீ சுறுசுறுப்புள்ளவனாய் இருந்தால் உன் விளைச்சல் நீரூற்றைப் போல் சுரக்க, வறுமை உன்னை விட்டு அகன்றோடிப் போகும்.
நீதிமொழிகள் 6 : 12 (RCTA)
உண்மையை (மறுதலித்த) துரோகி ஒன்றுக்கும் உதவாத மனிதன். அவன் வாயினின்று பொல்லாத வாக்கு புறப்படும்.
நீதிமொழிகள் 6 : 13 (RCTA)
அவன் கண்களால் சைகை காட்டி, காலால் தரையைத் தேய்த்து, கைச் சைக்கினையாய்ப் பேசுகிறான்.
நீதிமொழிகள் 6 : 14 (RCTA)
அவன் தன் தீய இதயத்தில் தீமையையே சிந்தித்து, என்றும் அவன் சச்சரவுகளையே விதைக்கிறான்.
நீதிமொழிகள் 6 : 15 (RCTA)
திடீரென அவனுக்குக் கேடே வந்து சேரும்; திடீரென நசுக்கவும் படுவான். அதற்குமேல் அவனுக்கு மருந்தும் இராது.
நீதிமொழிகள் 6 : 16 (RCTA)
ஆண்டவருக்கு வெறுப்பைத்தரும் காரியங்கள் ஆறு. ஏழாவது காரியம்கூட அவருடைய மதிப்புக்கு வெறுப்புள்ளதாய் இருக்கும்.
நீதிமொழிகள் 6 : 17 (RCTA)
(அவைகள் என்னவென்றால்): பெருமை கொண்ட கண்களும், பொய் பகரும் நாவும், மாசற்ற குருதியைச் சிந்தும் கைகளும்,
நீதிமொழிகள் 6 : 18 (RCTA)
மிகக் கொடிய சிந்தனைகளைக் கருதுகின்ற இதயமும், தீமையில் ஓட விரையும் கால்களும், பொய்களைச் சொல்லுகின்ற கள்ளச் சாட்சியும்,
நீதிமொழிகள் 6 : 19 (RCTA)
தன் சகோதரருக்குள் பிளவுகளை விதைக்கின்றவனுமேயாம்.
நீதிமொழிகள் 6 : 20 (RCTA)
என் மகனே, உன் தந்தையின் கட்டளையை அனுசரி; உன் தாயின் சட்டத்தையும் கைநெகிழாதே.
நீதிமொழிகள் 6 : 21 (RCTA)
இடைவிடாமல் அவற்றை உன் இதயத்தில் பதித்து உன் கழுத்தைச் சுற்றி வைத்துக் கொள்.
நீதிமொழிகள் 6 : 22 (RCTA)
நீ உலாவும்போது அவை உன்னுடன் நடப்பனவாக; உறங்கும்போது உன்னைக் காப்பனவாக; விழித்தெழும்போது அவற்றுடன் பேசுவாயாக.
நீதிமொழிகள் 6 : 23 (RCTA)
ஏனென்றால், கட்டளை விளக்காகவும், சட்டம் ஒளியாகவும், அறிவுரையின் கண்டனம் வாழ்க்கைக்குப் பாதையுமாம்.
நீதிமொழிகள் 6 : 24 (RCTA)
அவற்றைக் கைக்கொண்டால், தீய பெண்ணினின்றும் அன்னிய பெண்ணின் இச்சக நாவினின்றும் காப்பாற்றப்படுவாய்.
நீதிமொழிகள் 6 : 25 (RCTA)
உன் இதயம் அவளுடைய அழகை இச்சியாமல் இருக்கும். அவளுடைய சைக்கினைகளிலும் நீ சிக்கிக்கொள்ள மாட்டாய்.
நீதிமொழிகள் 6 : 26 (RCTA)
ஏனென்றால், வேசியின் விலை அற்பமேயெனினும், அப்படிப்பட்ட பெண் ஆடவரின் அருமையான ஆன்மாவையே கவர்கின்றாள்.
நீதிமொழிகள் 6 : 27 (RCTA)
தன் ஆடைகள் வேகாமல் மனிதன் தன் நெஞ்சத்து நெருப்பை ஒழிக்கக் கூடுமோ ?
நீதிமொழிகள் 6 : 28 (RCTA)
அல்லது தன் உள்ளங்கால் வேகாமல் அனலை மிதிக்கக் கூடுமோ ?
நீதிமொழிகள் 6 : 29 (RCTA)
அப்படியே தன் அயலானின் பெண்ணிடம் போய் அவளைத் தீண்டி விட்டவன் எவனோ, அவன் சுத்தமாய் இரான்.
நீதிமொழிகள் 6 : 30 (RCTA)
ஒருவன் திருடி விட்டாலும் குற்றம் பெரிதன்று. ஏனென்றால், பசியால் வருந்தியதால் உயிரைக் காப்பாற்ற அவன் (திருடுகிறான்).
நீதிமொழிகள் 6 : 31 (RCTA)
அவன் பிடிப்பட்டாலோ ஏழு மடங்கு கொடுத்து உத்தரிப்பான்; மேலும் தன் வீட்டின் பொருள் முழுவதுங்கூடக் கையளிப்பான்.
நீதிமொழிகள் 6 : 32 (RCTA)
விபச்சாரக்காரனோ மதியீனத்தால் தன் ஆன்மாவையே இழக்கிறான்.
நீதிமொழிகள் 6 : 33 (RCTA)
அவனே தனக்கு வெட்கத்தையும் ஈனத்தையும் தேடிக்கொள்கிறான். அவனுடைய அவமானம் ஒருபோதும் அழியாது.
நீதிமொழிகள் 6 : 34 (RCTA)
ஏனென்றால், அந்த (விபச்சாரியினுடைய) கணவனின் பொறாமையும் எரிச்சலும் பழி நாளில் விபசாரனை மன்னிக்கமாட்டா.
நீதிமொழிகள் 6 : 35 (RCTA)
அவன் எவனுடைய வேண்டுகோளுக்கும் இணங்கான்; பரிகாரமாக ஏராளமான கொடைகளையும் ஏற்றுக் கொள்ளான்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35

BG:

Opacity:

Color:


Size:


Font: