நீதிமொழிகள் 31 : 1 (RCTA)
லாமுவேல் என்ற அரசனின் வார்த்தைகள். அவன் தாய் அவனுக்குக் கற்பித்த காட்சியாவது:
நீதிமொழிகள் 31 : 2 (RCTA)
என் அன்பனே, என்ன ? என் வயிற்றின் நேசனே, என்ன ? என் ஆசைகளின் இனியனே, என்ன ?
நீதிமொழிகள் 31 : 3 (RCTA)
உன் பொருளைப் பெண்களுக்கும், அரசரை அழிக்கும்படியாக உன் செல்வத்தையும் தராதே.
நீதிமொழிகள் 31 : 4 (RCTA)
அரசருக்கு வேண்டாம், ஓ லாமுவேல்! அரசருக்குக் கொடிமுந்திரிப்பழச் சாற்றைக் கொடுக்கவேண்டாம். ஏனென்றால், குடிமயக்கம் ஆள்கின்ற இடத்தில் இரகசியமே கிடையாது.
நீதிமொழிகள் 31 : 5 (RCTA)
அவர்கள் மதுபானம் அருந்தினால் ஒருவேளை நீதித்தீர்ப்புகளையும் மறந்து, ஏழையின் மக்களுடைய வழக்கையும் மாற்றுவார்கள்.
நீதிமொழிகள் 31 : 6 (RCTA)
சஞ்சலமுள்ளவர்களுக்கு மதுபானத்தையும், துயர மனமுடையோருக்குக் கொடிமுந்திரிப் பழச் சாற்றையும் கொடுங்கள்.
நீதிமொழிகள் 31 : 7 (RCTA)
அவர்கள் குடித்துத் தங்கள் கேட்டினை மறந்தும், தங்கள் துன்பத்தை இனி நினையாமலும் இருப்பார்களாக.
நீதிமொழிகள் 31 : 8 (RCTA)
ஊமைக்காகவும், உன்னிடம் வருகிற கைவிடப்பட்டவர்களுக்காகவும் உன் வாயைத்திற.
நீதிமொழிகள் 31 : 9 (RCTA)
உன் வாயைத்திறந்து நீதியானதைக் கற்பி; இல்லாதவனையும் ஏழையையும் நியாயந்தீர்.
நீதிமொழிகள் 31 : 10 (RCTA)
வல்லமையுள்ள பெண்ணைக் கண்டுபிடிப்பவன் யார் ? அவள் தூரமாய்க் கடைகோடிகளினின்று அடையப்பெற்ற செல்வமாம்.
நீதிமொழிகள் 31 : 11 (RCTA)
அவள் கணவனின் இதயம் அவள்பால் நம்பிக்கை கொள்கின்றது. கொள்ளைப் பொருட்களும் அவனுக்குக் குறைவுபடா.
நீதிமொழிகள் 31 : 12 (RCTA)
அவள் அவனுக்குத் தன் வாழ்நாட்கள் அனைத்தும் தீமையை அல்ல, நன்மையையே அளிப்பாள்.
நீதிமொழிகள் 31 : 13 (RCTA)
அவள் ஆட்டு மயிரையும் சணல் நூலையும் தேர்ந்தெடுத்துத் தன் கைத் திறமையால் வேலை செய்தாள்.
நீதிமொழிகள் 31 : 14 (RCTA)
தூரத்தினின்று அப்பத்தைக் கொண்டு வருகிற கப்பல் போலானாள்.
நீதிமொழிகள் 31 : 15 (RCTA)
இரவிலே எழுந்து தன் ஊழியருக்கு அருமையான பொருளையும், தன் ஊழியக்காரிகளுக்கு உணவு வகைகளையும் தந்தாள்.
நீதிமொழிகள் 31 : 16 (RCTA)
வயல் நிலத்தையும் ஆராய்ந்து பார்த்து அதை வாங்கினாள். தன் கைகளின் பலத்தால் கொடிமுந்திரித் தோட்டத்தையும் நட்டாள்.
நீதிமொழிகள் 31 : 17 (RCTA)
திடத்தால் தன் இடைகளை வரிந்துகட்டித் தன் புயத்தையும் பலப்படுத்தினாள்.
நீதிமொழிகள் 31 : 18 (RCTA)
அவள் சுவை பார்த்துத் தன் வியாபாரம் நலமானதென்று கண்டாள். அவளுடைய விளக்கு இரவில் அணைக்கப்படாது.
நீதிமொழிகள் 31 : 19 (RCTA)
வன்மையான காரியங்களுக்குத் தன் கைகளை உபயோகித்தாள். அவளுடைய விரல்கள் சிம்புக் கதிரைப் பிடித்தன.
நீதிமொழிகள் 31 : 20 (RCTA)
வகையில்லாதவனுக்குத் தன் கைகளைத் திறந்தாள். தன் உள்ளங்கைகளை ஏழைக்கு நீட்டினாள்.
நீதிமொழிகள் 31 : 21 (RCTA)
பனியின் குளிர் நிமித்தம் தன் வீட்டாரைப்பற்றி அஞ்சமாட்டாள். ஏனென்றால், அவளுடைய ஊழியர் அனைவருமே இரட்டை (ஆடை)யால் உடுத்தப் பட்டிருக்கிறார்கள்.
நீதிமொழிகள் 31 : 22 (RCTA)
கம்பளி ஆடையைத் தனக்குச் செய்திருக்கிறான். மெல்லிய சணலும் கருஞ் சிவப்பு ஆடையும் அவளுடைய போர்வையாம்.
நீதிமொழிகள் 31 : 23 (RCTA)
அவள் கணவன் பூமியின் ஆலோசனைச் சங்கத்தாருடன் உட்கார்ந்திருக்கையில் நியாய வாயிலில் மகிமை பெறுவான்.
நீதிமொழிகள் 31 : 24 (RCTA)
அவள் முக்காட்டுத் துணியும் செய்து விற்றாள். கனானேயனுக்கு இடைக் கச்சையையும் கொடுத்து விட்டாள்.
நீதிமொழிகள் 31 : 25 (RCTA)
வலிமையும் அழகும் அவளுக்கு உடை(யாம்). கடைசி நாளிலும் அவள் நகைப்பாள்.
நீதிமொழிகள் 31 : 26 (RCTA)
ஞானத்துக்குத் தன் வாயைத் திறந்தாள். அவளுடைய நாவில் சாந்தத்தின் நீதிமுறை உள்ளதாம்.
நீதிமொழிகள் 31 : 27 (RCTA)
அவள் தன் இல்லத்தின் வழிகளை உற்றுப்பார்த்தாள்; சோம்பலாய்த் தன் அப்பத்தை உண்ணாள்.
நீதிமொழிகள் 31 : 28 (RCTA)
அவளுடைய புதல்வர் எழுந்து அவளைப் பேறுடையாள் என்று முழங்கினார்கள். அவள் கணவனும் அவளைப் புகழ்ந்தான்.
நீதிமொழிகள் 31 : 29 (RCTA)
பல மகளிர் செல்வங்களைச் சேகரித்தார்கள்; நீயோ அனைவரையும் கடந்து மேலானவள் ஆனாய்.
நீதிமொழிகள் 31 : 30 (RCTA)
அழகு பொய்யும், எழில் வீணுமாம். ஆண்டவருக்குப் பயப்படுகிற பெண்ணே புகழப்படுவாள்.
நீதிமொழிகள் 31 : 31 (RCTA)
அவளுடைய கைகளினின்று பெறும் பலனை அவளுக்கே கொடுங்கள். அவளுடைய செயல்களே (நடுவரின்) சங்கங்களில் அவளைப் புகழக்கடவன.
❮
❯