நீதிமொழிகள் 30 : 1 (RCTA)
கக்குகின்றவனின் புதல்வனான சேகரிப்போனின் வார்த்தைகளாவன: கடவுள் தன்னுடன் இருக்க, தன்னோடு தங்கியிருக்கின்ற கடவுளால் திடப்படுத்தப்பட்ட மனிதன் உரைத்த காட்சி சொன்னதாவது:
நீதிமொழிகள் 30 : 2 (RCTA)
நான் மனிதரில் மிகவும் மதிகேடனாய் இருக்கிறேன். மனிதருடைய ஞானம் என்னோடு இல்லை.
நீதிமொழிகள் 30 : 3 (RCTA)
நான் ஞானத்தைக் கற்கவுமில்லை, நீதிமான்களின் அறிவுக் கலையை அறியவுமில்லை.
நீதிமொழிகள் 30 : 4 (RCTA)
வான மண்டலத்தில் ஏறி இறங்கினவன் எவன் ? தன் கைகளில் காற்றை அடக்கினவன் எவன் ? ஆடையில் (கூட்டுவதுபோல்) நீர்த்திரளைக் கூட்டினவன் எவன் ? பூமியின் சகல எல்லைகளையும் எழுப்பி உறுதிப்படுத்தினவன் எவன் ? அவன் பெயர் என்ன ? அவன் மக்களின் பெயரும் என்ன, தெரியுமா ?
நீதிமொழிகள் 30 : 5 (RCTA)
கடவுளின் வார்த்தை நெருப்பினால் (பரிசுத்தப்) பட்டது. அதை நம்பி இருக்கின்றவர்களுக்கு (அது) கேடயமாம்.
நீதிமொழிகள் 30 : 6 (RCTA)
நீ கண்டிக்கப்பட்டுப் பொய்யனாய்ப் போகாதபடி அவருடைய வார்த்தைகளோடு யாதொன்றையும் சேர்க்காதே.
நீதிமொழிகள் 30 : 7 (RCTA)
இரண்டு (காரியங்களை) நான் உம்மிடம் கேட்கிறேன்; நான் இறக்குமுன் (அவற்றை) நீர் எனக்கு மறுத்துவிடாதீர்.
நீதிமொழிகள் 30 : 8 (RCTA)
வீணானதையும் பொய்யான சொற்களையும் என்னைவிட்டு அகன்றிருக்கச் செய்யும்; வறுமையையேனும் செல்வத்தையேனும் எனக்குக் கட்டளையிடாமல் என் வாழ்க்கைக்குத் தேவையானதை மட்டும் எனக்குக் கொடும்.
நீதிமொழிகள் 30 : 9 (RCTA)
(ஏனென்றால்), நான் ஒரு ஒருவேளை நிறைவினால் தூண்டப்பட்டு: ஆண்டவர் யார் என்று மறுத்துச் சொல்வேன்; அல்லது, வறுமையின் கொடுமையினால் திருடி, என் கடவுள் பெயரால் பொய்யாணை யிடுவேன்.
நீதிமொழிகள் 30 : 10 (RCTA)
ஓர் அடிமையைப்பற்றி அவன் தலைவனிடம் குற்றம் சாட்டாதே. ஒருவேளை அவன் உன்னைத் தூற்றுவான்.
நீதிமொழிகள் 30 : 11 (RCTA)
(தூற்றினால்) நீ அழிவாயன்றோ ? தன் தந்தையைத் தூற்றி, தாயை வாழ்த்தாத ஒரு சந்ததி உண்டு.
நீதிமொழிகள் 30 : 12 (RCTA)
தன் கறைகளினின்று கழுவப்படாமலே தனக்குச் சுத்தமானதாகத் தோன்றுகின்ற ஒரு சந்ததி உண்டு.
நீதிமொழிகள் 30 : 13 (RCTA)
தன் கண்களை நிமிர்த்தி வைத்து, தன் இமைகளை உயர எழுப்புகின்ற ஒரு சந்ததி உண்டு.
நீதிமொழிகள் 30 : 14 (RCTA)
பூமியினின்று எளியவர்களையும் மனிதரினின்று ஏழைகளையும் விழுங்கும் பொருட்டு, தன் பற்களுக்குப் பதிலாய்க் கத்திகளை உடையதும் தன் கடைவாய்ப் பற்களால் அரைக்கிறதுமான ஒரு சந்ததி உண்டு.
நீதிமொழிகள் 30 : 15 (RCTA)
அட்டைக்கு இரண்டு புதல்விகள் உண்டு. இவை, கொண்டு வா, கொண்டு வா என்கின்றன. நிறைவு அடையாதன மூன்று உண்டாம்; போதும் என்று சொல்ல அறியாத நான்காவதொன்றும் உண்டு.
நீதிமொழிகள் 30 : 16 (RCTA)
அவை எவையென்றால்: பாதாளமும், யோனிவாயும், தண்ணீரால் நிறைவு அடையாத பூமியுமாம்; நெருப்போ, போதும் என்று ஒருகாலும் சொல்வதில்லை.
நீதிமொழிகள் 30 : 17 (RCTA)
தன் தந்தையையும் இகழ்ந்து தன் தாயின் பிரசவ வேதனைகளையும் புறக்கணிக்கிறவனின் கண்ணை நீரோட்டத்திலுள்ள காக்கைகள் பிடுங்கவும், கழுகின் குஞ்சுகள் அவனைத் தின்னவுங் கடவன.
நீதிமொழிகள் 30 : 18 (RCTA)
எனக்குக் கடினமானவை மூன்று உண்டு; நான்காவதையோ சிறிதேனும் அறியேன்.
நீதிமொழிகள் 30 : 19 (RCTA)
வானவெளியில் கழுகின் வழியையும், பாறையின்மேல் பாம்பின் வழியையும், நடுக்கடலில் மரக்கலத்தின் வழியையும் (அறிவது கடினம்); இளமையில் மனிதன் வழியையும் (அறியேன்).
நீதிமொழிகள் 30 : 20 (RCTA)
தின்றபின் தன் வாயைத் துடைத்துக் கொண்டு: நான் தீவினை செய்யவில்லை என்கிற விபசாரப் பெண்ணின் வழியும் அதற்குச் சமானம்.
நீதிமொழிகள் 30 : 21 (RCTA)
பூமி மூன்றினால் குலைக்கப் படுகின்றது; நான்காவதையோ அது தாங்க மாட்டாது.
நீதிமொழிகள் 30 : 22 (RCTA)
அரசாள்கின்ற அடிமையாலும், அப்பத்தால் நிறைவு கொண்டிருக்கின்ற மதிகேடனாலும்,
நீதிமொழிகள் 30 : 23 (RCTA)
திருமணத்தின் மூலம் அங்கீகரிக்கப்பட்ட பகைக்குரிய பெண்ணாலும் (பூமி குலைக்கப்படுகிறது); தன் தலைவியின் உரிமைக்காரியாகின்ற அடிமையையோ (அது) தாளமாட்டாது.
நீதிமொழிகள் 30 : 24 (RCTA)
பூமியில் அற்பமானவை நான்கு உண்டு. ஆனால் அவையே ஞானிகளிலும் அதிக ஞானமுள்ளவை.
நீதிமொழிகள் 30 : 25 (RCTA)
(அவை: ) அறுவடைக் காலத்தில் தமக்கு உணவைச் சேகரிக்கின்ற அற்பப் பொருளாகிய எறும்புகளும்,
நீதிமொழிகள் 30 : 26 (RCTA)
பாறையின்மேல் தன் படுக்கையை அமைக்கின்ற பலமற்ற பிராணியாகிய முயற் குட்டியும்,
நீதிமொழிகள் 30 : 27 (RCTA)
அரசனில்லாமலே அனைத்தும் கூட்டம் கூட்டமாய்ப் புறப்படுகின்ற வெட்டுக்கிளியும்,
நீதிமொழிகள் 30 : 28 (RCTA)
கையால் பிடிக்கக் கூடுமானதும், அரசனுடைய வீடுகளிலுமே வாழ்ந்திருப்பதுமான பல்லியுமாம்.
நீதிமொழிகள் 30 : 29 (RCTA)
நன்றாய் நடக்கிற மூன்றும், பாக்கியமாய் நடக்கிற நான்காவதொன்றும் உண்டு.
நீதிமொழிகள் 30 : 30 (RCTA)
யாருடைய எதிர்ப்புக்கும் அஞ்சாத மிருகங்களில் மிக வலிமையுள்ள சிங்கமும்,
நீதிமொழிகள் 30 : 31 (RCTA)
இடைக் கட்டப்பட்ட சேவலும், செம்மறிக்கிடாயும், எவரும் எதிர்க்கக்கூடாத அரசனுமாம்.
நீதிமொழிகள் 30 : 32 (RCTA)
மேன்மையாய் உயர்த்தப்பட்டபின் மதியீனனாய்க் காணப்பட்டவன் உண்டு. ஏனென்றால், அவன் அறிவுடையவனாய் இருந்திருப்பானாயின் தன் வாயில் கை வைத்திருப்பான்.
நீதிமொழிகள் 30 : 33 (RCTA)
பால் கறக்கும்படி மடியைப் பலமாய் அமுக்குகிறவன் வெண்ணெயைப் பிழிகிறான்; வலுவந்தமாய் மூக்கைச் சிந்துகிறவன் இரத்தத்தை வருவிக்கிறான்; கோபத்தை மூட்டுகிறவனோ பிளவுகளை விளைவிக்கிறான்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33