நீதிமொழிகள் 3 : 1 (RCTA)
என் மகனே, என் சட்டத்தை மறக்க வேண்டாம்; என் கட்டளைகளையும் உன் இதயத்தில் காப்பாயாக.
நீதிமொழிகள் 3 : 2 (RCTA)
ஏனென்றால், அவை உனக்கு நீடிய ஆயுளையும் பல்லாண்டு வாழ்வையும் சமாதானத்தையும் தரும்.
நீதிமொழிகள் 3 : 3 (RCTA)
இரக்கமும் உண்மையும் உன்னை விட்டு அகலாதிருக்கட்டும். அவற்றை உன் கழுத்துக்கு (ஆரமாய்ச்) சூடுவாய்; உன் இதயத்தில் அவற்றைப் பதிய வைப்பாய்.
நீதிமொழிகள் 3 : 4 (RCTA)
அப்போது நீ கடவுளுக்கும் மனிதனுக்கும் முன்பாக அருளையும் நல்லறிவையும் கண்டடைவாய்.
நீதிமொழிகள் 3 : 5 (RCTA)
நீ உன் விவேகத்திலேயே ஊன்றி நில்லாமல், உன் முழு இதயத்துடனே ஆண்டவர்மேல் நம்பிக்கை வை.
நீதிமொழிகள் 3 : 6 (RCTA)
உன் வழிகள் அனைவற்றிலும் அவரை நினைப்பாயாகில், அவர் உன்னை வழி நடத்துவார்.
நீதிமொழிகள் 3 : 7 (RCTA)
உனக்கு நீயே ஞானியாய் இராதே. கடவுளுக்குப் பயந்து தீமையினின்று விலகு.
நீதிமொழிகள் 3 : 8 (RCTA)
அப்பொழுது நீ உடல் நலனுடன் இருப்பாய். உன் எலும்புகளும் நன்னீரால் நிறைக்கப்படும்.
நீதிமொழிகள் 3 : 9 (RCTA)
உன் சொத்தைக் கொண்டு ஆண்டவரை வணங்கு. உன் எல்லா விளைவுகளின் முதற்பலன்களையும் அவருக்கு ஒப்புக்கொடு.
நீதிமொழிகள் 3 : 10 (RCTA)
அப்போது உன் களஞ்சியங்கள் தானியத்தால் நிறையும். உன் கொடி முந்தரிப் பழ ஆலைகளும் சாற்றால் நிரப்பப்படும்.
நீதிமொழிகள் 3 : 11 (RCTA)
ஆண்டவருடைய கண்டனத்தை, என் மகனே, நீ தள்ளிவிடாதே. அவரால் கண்டிக்கப்படுகையிலும் சோர்ந்து போகாதே.
நீதிமொழிகள் 3 : 12 (RCTA)
ஏனென்றால், ஆண்டவர் தாம் நேசிப்பவனைக் கண்டிக்கிறார். தந்தை தன் மகனைப்பற்றி மகிழ்வதுபோல் அவரும் மகிழ்கிறார்.
நீதிமொழிகள் 3 : 13 (RCTA)
ஞானத்தைக் கண்டுபிடித்து விவேகத்தால் நிறைந்திருக்கும் மனிதனே பேறு பெற்றவன்.
நீதிமொழிகள் 3 : 14 (RCTA)
அதன் நற்பயன் வெள்ளி வியாபாரத்தைக் காட்டிலும், அதன் கனிகள் முதல் தரமான தூய தங்கத்தைக் காட்டிலும் மேம்பட்டனவாம்.
நீதிமொழிகள் 3 : 15 (RCTA)
(ஞானம்) சொத்துகள் அனைத்திலும் அதிக விலையுள்ளது. விரும்பத் தக்கவையெல்லாம் அதற்கு இணைகூறத் தக்கனவல்ல.
நீதிமொழிகள் 3 : 16 (RCTA)
அதன் வலப்பக்கத்தில் நாட்களின் நீட்சியும், இடப்பக்கத்தில் செல்வமும் மகிமையும் உண்டு.
நீதிமொழிகள் 3 : 17 (RCTA)
அதன் வழிகள் அழகானவையும், அதன் அடிச்சுவடுகளெல்லாம் சமாதானமானவையுமாம்.
நீதிமொழிகள் 3 : 18 (RCTA)
தன்னைக் கைக்கொள்பவர்களுக்கு அது வாழ்வு தரும் மரமாம். அதைப் பிடித்துக்கொண்டிருப்பவனும் பேறு பெற்றவன்.
நீதிமொழிகள் 3 : 19 (RCTA)
ஆண்டவர் ஞானத்தால் உலகிற்கு அடித்தளமிட்டு, விவேகத்தால் வானங்களை நிறுவினார்.
நீதிமொழிகள் 3 : 20 (RCTA)
(ஏனென்றால்) கடலினின்று நீர்த்தாரைகள் கிளம்புவதும், நீராவிகள் மேகங்களாகிப் பனியைப் பொழிவதும் அவருடைய ஞானத்தாலேயே.
நீதிமொழிகள் 3 : 21 (RCTA)
என் மகனே, இவை உன் கண்களினின்று மறையாதிருக்க நீ கட்டளையையும் ஆலோசனையையும் கைக்கொண்டு நிறைவேற்று.
நீதிமொழிகள் 3 : 22 (RCTA)
அவை உன் ஆன்மாவுக்கு உயிராகவும், உன் கழுத்திற்கு அணியாகவும் இருக்கும்.
நீதிமொழிகள் 3 : 23 (RCTA)
அப்போது நீ நம்பிக்கையுடன் உன் வழியில் நடப்பாய்; உன் காலும் இடறமாட்டாது.
நீதிமொழிகள் 3 : 24 (RCTA)
நீ உறங்கும்போது பயப்பட மாட்டாய்; இளைப்பாறுவாய். உன் உறக்கம் இன்பமாய் இருக்குமேயன்றி,
நீதிமொழிகள் 3 : 25 (RCTA)
திடீர்ப் பயங்கரத்தாலும் உன்மேல் தாக்கும் தீயோருடைய வலிமையாலும் நீ பயப்பட மாட்டாய்.
நீதிமொழிகள் 3 : 26 (RCTA)
ஏனென்றால் ஆண்டவர் உன் பக்கத்தில் இருப்பார். அவரே நீ சிக்கிக் கொள்ளாதபடி உன்னைக் காப்பார்.
நீதிமொழிகள் 3 : 27 (RCTA)
நன்மை புரிய முயல்கிறவனை நீ விலக்காதே. உன்னால் இயலுமானால், நீயும் நன்மை செய்.
நீதிமொழிகள் 3 : 28 (RCTA)
நீ அந்நேரமே தருமம் செய்யக் கூடியவனாய் இருக்கையில், போய்த் திரும்பி வா; உனக்கு நாளை தருவேன் என்று உன் நண்பனுக்குச் சொல்லாதே.
நீதிமொழிகள் 3 : 29 (RCTA)
உன்பால் தன் நம்பிக்கையை வைத்திருக்கும் நண்பனுக்குத் தீமை புரியக் கருதாதே.
நீதிமொழிகள் 3 : 30 (RCTA)
ஒருவன் உனக்கு யாதொரு தீங்கும் புதியாதிருக்கையில், அம் மனிதனுக்கு விரோதமாய் வீணே வழக்காடாதே.
நீதிமொழிகள் 3 : 31 (RCTA)
அநீதனைக் கண்டுபாவியாதே. அவன் வழிகளையும் பின்பற்றாதே.
நீதிமொழிகள் 3 : 32 (RCTA)
ஏனென்றால், சூதுள்ளவன் எவனோ அவன் ஆண்டவருக்கு அருவருப்பாய் இருக்கிறான். நேர்மையாளரோடுதான் அவர் உரையாடுவார்.
நீதிமொழிகள் 3 : 33 (RCTA)
அக்கிரமியின் வீட்டிற்கு அவர் வறுமையை அனுப்புவார். நீதிமான்களின் உறைவிடங்களை ஆசீர்வதிப்பார்.
நீதிமொழிகள் 3 : 34 (RCTA)
கபடமுள்ளோரைப் புறக்கணித்து, சாந்தமுடையோர்க்குத் (தம்முடைய) அருளைத் தந்தருள்வார்.
நீதிமொழிகள் 3 : 35 (RCTA)
ஞானிகள் மகிமை பெறுவார்கள். அறிவிலிகளின் உயர்வோ இழிவேயாம்.
❮
❯