நீதிமொழிகள் 27 : 1 (RCTA)
நாளை என்ன பிறப்பிக்குமென்று அறியாமலிருப்பதால், மறுநாளைப்பற்றி நீ பெருமை பாராட்ட வேண்டாம்.
நீதிமொழிகள் 27 : 2 (RCTA)
உன் வாயல்ல, வேறோருவனே - உன் உதடுகளல்ல, அன்னியனே - உன்னைப் புகழ்வானாக.
நீதிமொழிகள் 27 : 3 (RCTA)
பாறை கனமாயும், மணல் பாரமாயும் இருக்கின்றன. ஆனால், மதியீனரின் கோபமோ இவ்விரண்டையும்விட அதிகக் கனமானது.
நீதிமொழிகள் 27 : 4 (RCTA)
சினமும், பொங்குகின்ற கோபவேறியும் இரக்கமற்றவை. கோப வெறியனுடைய கோபத்தின் கொடுமையைப் பொறுக்கக் கூடியவன் யார் ?
நீதிமொழிகள் 27 : 5 (RCTA)
உள்ளரங்க நேசத்தைவிட வெளியரங்கக் கண்டனமே அதிக நல்லது.
நீதிமொழிகள் 27 : 6 (RCTA)
பகைவனின் வஞ்சக முத்தங்களைக் காட்டிலும் நண்பன் தரும் காயங்களே அதிக நலமானவை.
நீதிமொழிகள் 27 : 7 (RCTA)
பசியாற உண்டவன் தேனையும் காலால் மிதிப்பான். பசியால் வருந்துகின்றவன் கசப்பானதையும் இனிப்பென்று அருந்துவான்.
நீதிமொழிகள் 27 : 8 (RCTA)
தன் கூட்டை விட்டகன்று பறக்கும் பறவை எவ்வாறோ, அவ்வாறே தன் இடத்தை விட்டொழித்த மனிதனும்.
நீதிமொழிகள் 27 : 9 (RCTA)
நறுமணத் தைலத்தாலும் வெவ்வேறு நறுமணப் பொருட்களாலும் இதயம் அக்களிக்கின்றது. ஆன்மாவோ நண்பனின் நல்லாலோசனைகளால் அக்களிக்கின்றது.
நீதிமொழிகள் 27 : 10 (RCTA)
உன் நண்பனையும் உன் தந்தையின் நண்பனையும் கைவிடாதே. உன் துயர நாளில் உன் சகோதரன் வீட்டில் நுழையாதே. தூரமாயிருக்கிற சகோதரனைவிட அருகிலுள்ள அயலானே தாவிளை.
நீதிமொழிகள் 27 : 11 (RCTA)
உன்னைக் கண்டிக்கிறவனுக்கு மறுமொழி சொல்லும்படியாக, என் மகனே, ஞானத்தைப் படித்து என் இதயத்தை மகிழ்வி.
நீதிமொழிகள் 27 : 12 (RCTA)
விவேகமுள்ளவன் தீமையைக் கண்டு மறைந்து கொண்டான். அதைக் கவனியாமையால் (மற்றவர்கள்) துன்பங்களை அனுபவித்தார்கள்.
நீதிமொழிகள் 27 : 13 (RCTA)
அன்னியனுக்குப் பிணையானவனுடைய ஆடையையும் நீ எடுத்துக்கொள். பிறருக்காக அவனிடம் பிணையையும் வாங்கு.
நீதிமொழிகள் 27 : 14 (RCTA)
விடியற்காலை உரத்த குரலில் தன் அயலானை ஆசீர்வதிக்கிறவன், இரவில் எழுந்து அவனைச் சபிக்கிறவனுக்குச் சரியொத்தவனாய் இருக்கிறான்.
நீதிமொழிகள் 27 : 15 (RCTA)
குளிர் நாளில் ஒழுகும் கூரையும், சண்டைக்காரியான மனைவியும் சமானமாம்.
நீதிமொழிகள் 27 : 16 (RCTA)
அவளை அடக்குகிறவன் காற்றைப் பிடிக்கிறவனுக்குச் சமானம். அவன் அதனைத் தன் வலக்கைத் தைலமென்றே அழைப்பான்.
நீதிமொழிகள் 27 : 17 (RCTA)
இரும்பு இரும்பால் தீட்டப்படுகின்றது. மனிதனோ தன் நண்பனால் தூண்டப்படுவான்.
நீதிமொழிகள் 27 : 18 (RCTA)
அத்தி மரத்தைப் பேணி வளர்ப்பவன் அதன் கனிகளை உண்பான். தன் ஆண்டவரின் பாதுகாவலில் இருப்பவன் எவனோ, அவன் மகிமைப்படுத்தப் பெறுவான்.
நீதிமொழிகள் 27 : 19 (RCTA)
நீரில் பார்க்கிறவர்களுடைய முகம் எவ்வாறு துலங்குகின்றதோ, அவ்வாறே மனிதர்களுடைய இதயங்கள் விவேகிகளுக்கு வெளியரங்கமாய் இருக்கின்றன.
நீதிமொழிகள் 27 : 20 (RCTA)
நரகமும் அழிவும் ஒருகாலும் நிறைவு பெறுவதில்லை. அவ்வாறே மனிதருடைய கண்களும் நிறைவு பெறாதனவாம்.
நீதிமொழிகள் 27 : 21 (RCTA)
உலைக்களத்தில் வெள்ளியும் உலையில் பொன்னும் பரிசோதிக்கப்படுவதுபோல, மனிதன் தன்னைப் புகழ்கின்றவனுடைய வாயால் பரிசோதிக்கப்படுகிறான். அக்கிரமியின் இதயம் தீமையைத் தேடுகின்றது. நேர்மையான இதயமோ அறிவைத் தேடுகின்றது.
நீதிமொழிகள் 27 : 22 (RCTA)
வாற்கோதுமையை உலக்கையால் இடிப்பது போல் மதியீனனை உரலில் (இட்டுக்) குத்தினாலும் அவனுடைய மதியீனம் அவனிடமிருந்து பிரிக்கப்படமாட்டாது.
நீதிமொழிகள் 27 : 23 (RCTA)
உன் ஆடுகளின் முகத்தையும் நன்றாய்க் கவனித்து அறி; உன் மந்தைகளையும் ஆராய்ந்து பார்.
நீதிமொழிகள் 27 : 24 (RCTA)
ஏனென்றால், நீ எப்போதும் நலமுடையவனாய் இராய். மேலும், தலைமுறை தலைமுறையாய் கிரீடம் கொடுக்கப்படவு மாட்டாது.
நீதிமொழிகள் 27 : 25 (RCTA)
புல் தரையில் புல் முளைத்திருக்கின்றது. பசுமை நிறை பூண்டுகள் காணப்படுகின்றன. மலைகளினின்று காய்ந்த புல்லும் சேகரிக்கப்பட்டிருக்கின்றது.
நீதிமொழிகள் 27 : 26 (RCTA)
செம்மறியாடுகள் உன் ஆடைக்கும், வெள்ளாடுகள் வயலின் விலைக்கும்,
நீதிமொழிகள் 27 : 27 (RCTA)
வெள்ளாடுகளின் பால் உன் உணவுகளுக்கும், உன் விட்டின் தேவைகளுக்கும், உன் ஊழியரின் உணவுக்கும் போதியனவாய் இருக்கட்டும்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27