நீதிமொழிகள் 26 : 1 (RCTA)
கோடைக்காலத்தில் பனியும் அறுவடைக் காலத்தில் மழையும் எப்படியோ, அப்படியே பேதைக்கு மகிமை தகாது.
நீதிமொழிகள் 26 : 2 (RCTA)
வேறிடம் போகப் பறக்கும் பறவையும், விருப்பப்படி பறக்கும் அடைக்கலானும் எப்படியோ, அப்படியே வீணாய்ச் சொல்லப்பட்ட சாபம் ஒருவன்மேலும் விழாது.
நீதிமொழிகள் 26 : 3 (RCTA)
குதிரைக்குச் சவுக்கும், கழுதைக்குக் கடிவாளமும், மதியீனரின் முதுக்குத் தடியும் (தக்கன).
நீதிமொழிகள் 26 : 4 (RCTA)
மதிகெட்டவனுக்குச் சமானமாய் நீயும் ஆகாதபடி அவனுடைய மதிகேட்டிற்கு ஏற்க அவனுக்கு மறுமொழி சொல்லாதே.
நீதிமொழிகள் 26 : 5 (RCTA)
பேதை தனக்குத்தானே ஞானியாய்த் தோன்றாதவண்ணம், அவனுடைய பேதமைக்கு ஏற்க அவனுக்கு மறுமொழி சொல்.
நீதிமொழிகள் 26 : 6 (RCTA)
மதியற்ற தூதன் வழியாய்த் தன் வார்த்தைகளைச் சொல்லி அனுப்புகிறவன், காலில்லா முடவனும் அக்கிரமத்தைக் குடிக்கிறவனுமாம்.
நீதிமொழிகள் 26 : 7 (RCTA)
முடவனுக்கு அழகான கால்கள் இருந்தாலும் எப்படி வீணோ, அப்படியே மதியீனரின் வாயில் உவமை.
நீதிமொழிகள் 26 : 8 (RCTA)
புதன் விண்கோள் நோக்கிக்கல் எறிகிறவனைப்போலாம் பேதையை மதிப்பவன்.
நீதிமொழிகள் 26 : 9 (RCTA)
குடிகாரனின் கையில் தைத்த முள் எப்படியோ, அப்படியே மதியீனரின் வாயில் உவமை.
நீதிமொழிகள் 26 : 10 (RCTA)
நியாயத்தீர்ப்பு வழக்குகளை முடிக்கின்றதுபோல் மதியீனனுக்கு மௌனத்தைக் காட்டுகிறவன் கோபவெறிகளை அமர்த்துகிறான்.
நீதிமொழிகள் 26 : 11 (RCTA)
மதியீனத்தை மீண்டும் செய்யும் அவிவேகி, தான் கக்கினதற்கு மீண்டும் வரும் நாய்க்கு ஒப்பாவான்.
நீதிமொழிகள் 26 : 12 (RCTA)
தனக்குத்தானே ஞானியாய்த் தோன்றும் மனிதனைக் கண்டிருக்கிறாயோ ? இவனைக்காட்டிலும் மதியீனனே அதிக நம்பிக்கைக்கு உரியவனாக இருப்பான்.
நீதிமொழிகள் 26 : 13 (RCTA)
வழியில் ஆண் சிங்கமும் பாதைகளில் பெண் சிங்கமும் இருக்கின்றன என்பான் சோம்பேறி.
நீதிமொழிகள் 26 : 14 (RCTA)
கதவு தன் முளையாணியில் சுழல்வது எப்படியோ, அப்படியாம் சோம்பேறியும் தன் கட்டிலிலே.
நீதிமொழிகள் 26 : 15 (RCTA)
சோம்பேறி கிண்ணத்தில் தன் கையை வைப்பான்; (ஆனால்) தன் வாய்வரையிலும் அதைத் தூக்கவும் தொல்லைப்படுவான்.
நீதிமொழிகள் 26 : 16 (RCTA)
நியாயங்களைப் பேசுகிற ஏழு ஆடவரைக்காட்டிலும் சோம்பேறி தனக்குத்தானே அதிக ஞானியாய்த் தோன்றுகிறான்.
நீதிமொழிகள் 26 : 17 (RCTA)
பொறுமையற்ற வழிப்போக்கன், தன்னைச் சாராத சண்டையில் கலக்கிறவன் (ஆகியோர்) நாயைக் காதால் பிடிக்கிறவனுக்கு ஒப்பாவர்.
நீதிமொழிகள் 26 : 18 (RCTA)
அம்புகளையும் ஈட்டியையும் பாய்ச்சுகிறவன் எப்படிச் சாவுக்குரிய குற்றவாளியாய் இருக்கிறானோ,
நீதிமொழிகள் 26 : 19 (RCTA)
அப்படியே தன் நண்பனுக்குக் கபடமாய்த் தீங்கு செய்கிற மனிதனும். அவன் அகப்பட்டுக்கொள்கையில்: விளையாட்டுக்குச் செய்தேன் என்கிறான்.
நீதிமொழிகள் 26 : 20 (RCTA)
விறகு குறைந்துபோனால் நெருப்பும் அவியும். கோள் சொல்லுகிறவனை அகற்றி விட்டால் சச்சரவுகளும் அமரும்.
நீதிமொழிகள் 26 : 21 (RCTA)
கரி தணலுக்கும் விறகு நெருப்புக்கும் எப்படியோ, அப்படியே கோபியான மனிதன் சண்டைகளை மூட்டுகிறான்.
நீதிமொழிகள் 26 : 22 (RCTA)
புறங்கூறுபவனுடைய வார்த்தைகள் நேர்மையானவைபோலத் தோன்றும். ஆனால் (உண்மையில்) இவை மனத்துள்ளே சென்று வாதிக்கும்.
நீதிமொழிகள் 26 : 23 (RCTA)
மண்பாண்டத்தை அசுத்த வெள்ளியால் அலங்கரிக்க விரும்புதல் எப்படியோ, அப்படியே மிகவும் கெட்ட இதயத்துடன்கூடிய அகந்தையுள்ள உதடுகளும்.
நீதிமொழிகள் 26 : 24 (RCTA)
இதயத்தில் வஞ்சனைகளைக் கருதியிருக்கையில் பகைவன் தன் வார்த்தையால் தானே அறியப்படுகிறான்.
நீதிமொழிகள் 26 : 25 (RCTA)
அவன் தன் குரலைத் தாழ்த்தினாலும் அவனை நீ நம்பாதே. ஏனென்றால், ஏழு தீய குணங்களும் அவன் இதயத்தில் இருக்கின்றன.
நீதிமொழிகள் 26 : 26 (RCTA)
வஞ்சகமாய்ப் பகையை மறைக்கிறவனுடைய அக்கிரமம் சபையில் வெளியாகிவிடும்.
நீதிமொழிகள் 26 : 27 (RCTA)
குழியைத் தோண்டுகிறவன் தானே அதில் விழுவான். கல்லைப் புரட்டுகிறவனிடமே அது திரும்பிவரும்.
நீதிமொழிகள் 26 : 28 (RCTA)
பொய்மையுள்ள நாவு உண்மையை நேசிப்பதில்லை. இச்சகம் பேசும் வாயோ கேடுகளை உண்டாக்குகிறது.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28