நீதிமொழிகள் 25 : 1 (RCTA)
யூதாவின் அரசனான எசெக்கியாசின் மன்னன் சேகரித்து வைத்த இவைகளுங்கூடச் சாலமோனின் பழமொழிகளேயாம்:
நீதிமொழிகள் 25 : 2 (RCTA)
வார்த்தையை மறைப்பது கடவுளின் மகிமையாம். வார்த்தையைக் கண்டறிதல் அரசனின் மகிமையாம்.
நீதிமொழிகள் 25 : 3 (RCTA)
மேலே வானமும் கீழே பூமியும், அரசனின் இதயமும் ஆராய்ந்து அறியக்கூடாதனவாம்.
நீதிமொழிகள் 25 : 4 (RCTA)
வெள்ளியினின்று மாசை நீக்கி விடு; அதிலிருந்து தூய்மையான பாத்திரம் வெளிப்படும்.
நீதிமொழிகள் 25 : 5 (RCTA)
அரசனுடைய முகத்தினின்று அநீதத்தை அகற்றினால் நீதியால் அவன் அரியனை நிலைப்படும்.
நீதிமொழிகள் 25 : 6 (RCTA)
அரசன் முன்பாகப் பெருமை பாராட்டாதே. பெரியோர்களுக்கு உரிய இடத்திலும் நில்லாதே.
நீதிமொழிகள் 25 : 7 (RCTA)
ஏனென்றால், அரசன் முன்பாகத் தாழ்த்தப்படுவதைவிட, இங்கு ஏறிவா என்று உனக்குச் சொல்லப்படுவது அதிக நலமாம்.
நீதிமொழிகள் 25 : 8 (RCTA)
உன் கண்கள் கண்டதை வழக்கில் உடனே வெளியாக்காதே. வெளிப்படுத்தி, நீ உன் நண்பனைப் அவமானப்படுத்தியிருந்தால் பின் அதனைப் பரிகரிக்க உன்னாலே கூடாதுபோகும்.
நீதிமொழிகள் 25 : 9 (RCTA)
உன் காரியத்தை உன் நண்பனோடு சேர்ந்து செய். பிறருடைய இரகசியத்தை வெளிபடுத்தாதே.
நீதிமொழிகள் 25 : 10 (RCTA)
ஏனென்றால், அவன் அதனைக் கேட்டுக் கொண்ட பிறகு ஒருவேளை உன்னை அவமானப்படுத்திக் கடிந்துகொள்வதை விடமாட்டான். இரக்கமும் அன்பும் மீட்கின்றன; நீ அவமதிக்கப்படாதபடி அவற்றை உனக்குக் காப்பாற்றிவை.
நீதிமொழிகள் 25 : 11 (RCTA)
வார்த்தையைத் தக்க காலத்தில் பேசுகிறவன் வெள்ளிக் கட்டில்களில் (உள்ள) தங்க மாதுளம் பழங்கள் (போலாம்).
நீதிமொழிகள் 25 : 12 (RCTA)
கீழ்ப்படியும் செவியுள்ளவனைக் கடிந்து கொள்கிற ஞானி பொற்குண்டலமும், இலங்குகின்ற முத்தும் போலாவான்.
நீதிமொழிகள் 25 : 13 (RCTA)
அறுவடை நாளில் பனிக்கட்டியின் குளிர்ச்சி எப்படியோ அப்படியாம். பிரமாணிக்கமுள்ள பிரதிநிதி தன்னை அனுப்பினவனுக்கு. அவன் தன் தலைவனின் மனத்தை மகிழ்விக்கிறான்; அவனை இளைப்பாறச் செய்கிறான்.
நீதிமொழிகள் 25 : 14 (RCTA)
தன் வாக்குறுதிகளை நிறைவேற்றாத பெருமிதமுள்ள மனிதனின் மழையைப் பின்தொடரச் செய்யாத மேகமும் காற்றும் போலாவான்.
நீதிமொழிகள் 25 : 15 (RCTA)
பொறுமையால் நடுவன் சாந்தமாவான். நயமுள்ள நாவே கடுமையைத் தகர்க்கும்.
நீதிமொழிகள் 25 : 16 (RCTA)
தேனைக் கண்டால் உனக்குப் போதுமானதை மட்டுமே சாப்பிடு. ஏனென்றால், அதிகமாய்ச் சாப்பிட்டால் ஒருவேளை தெவிட்டுதல் அடைந்து அதைக் கக்குவாய்.
நீதிமொழிகள் 25 : 17 (RCTA)
ஒருவேளை அயலான் சலிப்புற்று உன்னைப் பகைக்காதபடி நீ அவனுடைய வீட்டினின்று உன் காலை விலக்கு.
நீதிமொழிகள் 25 : 18 (RCTA)
தன் அயலானுக்கு விரோதமாய்ப் பொய்ச் சாட்சி சொல்பவன் எத்தன்மையனென்றால், எறிபடையும் வாளும் கூர்மையான அம்பும் போலாம்.
நீதிமொழிகள் 25 : 19 (RCTA)
துயர நாளில் அயோக்கியனை நம்புவது புழுத்த பல்லையும் களைத்த காலையும் நம்புவது போலும், குளிர் காலத்தில் மேற்போர்வை இல்லாமலிருப்பது போலுமாம்.
நீதிமொழிகள் 25 : 20 (RCTA)
தீய மனத்தோர்க்குப் பாட்டுப் பாடுகிறவன் வெடியுப்பில் (வார்த்த) காடியாம். ஆடையை அந்தும், மரத்தைப் புழுவும் அரிப்பதுபோல மனிதனின் துயரம் இதயத்தை நோகச் செய்யும்.
நீதிமொழிகள் 25 : 21 (RCTA)
உன் பகைவன் பசியாயிருந்தால் அவனுக்கு உணவு கொடு. அவன் தாகமுற்றிருந்தால் அவனுக்குத் தண்ணீரும் கொடு.
நீதிமொழிகள் 25 : 22 (RCTA)
அவ்வாறே செய்வதானால் நீ அவன் தலைமேல் நெருப்புத் தணலைக் குவிப்பாய். ஆண்டவரும் உனக்குக் கைம்மாறளிப்பார்.
நீதிமொழிகள் 25 : 23 (RCTA)
வாடைக் காற்று மழையையும், துக்கமுகம் புறணி பேசும் நாவையும் சிதறடித்துவிடும்.
நீதிமொழிகள் 25 : 24 (RCTA)
நடுவீட்டில் வாயாடிப் பெண்ணுடன் இருப்பதைக்காட்டிலும் மொட்டை மாடியின் ஒரு மூலையிலிருப்பது மிகவும் நல்லது.
நீதிமொழிகள் 25 : 25 (RCTA)
தூர நாட்டினின்று (வருகிற) நல்ல செய்தி தாகங்கொண்ட ஆன்மாவுக்குத் தண்ணீர் போலாகும்.
நீதிமொழிகள் 25 : 26 (RCTA)
அக்கிரமியின்முன் விழும் நீதிமான், காலாலே கலக்கப்பட்ட சுணையும் கெட்டுப் போன நீரூற்றும் (போலாவான்).
நீதிமொழிகள் 25 : 27 (RCTA)
தேனை மிகுதியாய்ச் சாப்பிடுகிறவனுக்கு எப்படி அது நல்லதன்றோ, அப்படியே (தெய்வ) மகத்துவத்தை ஆராய்பவன் அவருடைய மகிமையால் நசுக்கப்படுவான்.
நீதிமொழிகள் 25 : 28 (RCTA)
சுற்று மதிலின்றித் திறந்து கிடக்கும் நரகம் எவ்வாறோ, அவ்வாறாம் பேசுகையில் தன்னை அடக்க மாட்டாத மனிதன்.
❮
❯