நீதிமொழிகள் 23 : 1 (RCTA)
அரசனுடன் உணவருந்த நீ அமர்ந்திருக்கும்பொழுது உனக்கு முன்னே வைக்கப்பட்ட பொருட்களை நுணுக்கமாய்க் கவனி.
நீதிமொழிகள் 23 : 2 (RCTA)
உன் நாட்டத்தை உன்னால் கட்டுப்படுத்த முடியுமாயின் உன் நாவை அடக்கு.
நீதிமொழிகள் 23 : 3 (RCTA)
எவன் உணவுகளில் வஞ்சகத்தின் அப்பம் இருக்கிறதோ அவனோடு நீ எதையும் உண்ண விரும்பாதே.
நீதிமொழிகள் 23 : 4 (RCTA)
நீ செல்வந்தனாகும் நோக்கத்தோடு உழைக்காதே. ஆனால், உன் கவலைக்கு ஓர் எல்லை இடு.
நீதிமொழிகள் 23 : 5 (RCTA)
நீ அடைய முடியாத செல்வங்களின் மீது உன் கண்களை ஏறெடுக்காதே. ஏனென்றால், அவை கழுகுகளைப்போல் தங்களுக்குச் சிறகுகளை உண்டாக்கிக்கொண்டு வானில் பறந்துவிடும்.
நீதிமொழிகள் 23 : 6 (RCTA)
பொறாமையுள்ள மனிதனோடு உண்ணவும் வேண்டாம்; அவனுடைய உணவுகளை விரும்பவும் வேண்டாம்.
நீதிமொழிகள் 23 : 7 (RCTA)
ஏனென்றால், அவன் குறி சொல்பவனையும் சோதிடனையும்போல் தான் அறியாததை நிதானிக்கிறான்: உண், குடி என்பான் உன்னோடு. ஆனால், அவனது மனமோ உன்னோடு இருப்பதில்லை.
நீதிமொழிகள் 23 : 8 (RCTA)
நீ உண்ட உணவுகளையும் கக்குவாய்; அவனது உபசார வார்த்தைகளுக்கும் பயன் இராது.
நீதிமொழிகள் 23 : 9 (RCTA)
மதியீனரின் செவிகளில் பேசாதே. ஏனென்றால், அவர்கள் உன் சொற்றிறத்தின் போதனையைப் புறக்கணிப்பார்கள்.
நீதிமொழிகள் 23 : 10 (RCTA)
ஏழையின் வயற் கற்களைத் தொடாதே. அனாதைகளின் வயலிலும் நுழையாதே.
நீதிமொழிகள் 23 : 11 (RCTA)
ஏனென்றால், அவர்களுடைய சுற்றத்தான் வல்லவனாய் இருக்கிறான். அவன் அவர்களுடைய வழக்கை உனக்கு விரோதமாய்த் தீர்ப்பான்.
நீதிமொழிகள் 23 : 12 (RCTA)
உன் செவிகள் அறிவுச் சொற்களிலும், உன் இதயம் போதகத்திலும் பழகிக் கொள்ளக்கடவன.
நீதிமொழிகள் 23 : 13 (RCTA)
சிறுவனைக் கண்டிக்க மறக்காதே. அவனை நீ பிரம்பால் அடித்தால் அவன் சாகமாட்டான்.
நீதிமொழிகள் 23 : 14 (RCTA)
நீ அவனைப் பிரம்பால் அடிப்பாய்; அவன் ஆன்மாவை நரகத்தினின்று மீட்கவும் செய்வாய்.
நீதிமொழிகள் 23 : 15 (RCTA)
என் மகனே, உன் மனம் ஞானமுள்ளதாயிருந்தால் என் இதயம் உன்னுடன் மகிழும்.
நீதிமொழிகள் 23 : 16 (RCTA)
உன் உதடுகள் நேர்மையானவற்றைப் பேசினால் என் மனம் அக்களிக்கும்.
நீதிமொழிகள் 23 : 17 (RCTA)
உன் இதயம் பாவிகளை கண்டுபாவித்தலாகாது. ஆனால், நாள் முழுவதும் பயத்தில் நிலைகொள்.
நீதிமொழிகள் 23 : 18 (RCTA)
ஏனென்றால், கடைசி நாளில் நம்பிக்கையுடனிருப்பாய்; உன் நம்பிக்கையும் வீண்போகாது.
நீதிமொழிகள் 23 : 19 (RCTA)
கேள், என் மகனே, ஞானமுள்ளவனாய் இரு. உன் மனத்தையும் (நல்) வழியில் நடத்து.
நீதிமொழிகள் 23 : 20 (RCTA)
குடியருடைய விருந்துகளிலும் இறைச்சி உண்கின்றவர்களுடைய பெரும் விருந்துகளிலும் நீ இராதே.
நீதிமொழிகள் 23 : 21 (RCTA)
ஏனென்றால், குடிவெறியில் காலம் கழிக்கிறவர்களும் உண்டிப் பிரியர்களும் சோம்பலின் மயக்கத்தால் பீடிக்கப்பட்டவர்கள். அவர்கள் கந்தைகளை உடுத்திக்கொள்வார்கள்.
நீதிமொழிகள் 23 : 22 (RCTA)
உன்னைப் பெற்ற உன் தந்தைக்குச் செவி கொடு. உன் தாயும் முதுமை அடைந்திருக்கையில் நீ (அவளைப்) புறக்கணியாதே.
நீதிமொழிகள் 23 : 23 (RCTA)
உண்மையை விலைக்கு வாங்கு. ஞானத்தையும் போதகத்தையும் அறிவையும் விற்க வேண்டாம்.
நீதிமொழிகள் 23 : 24 (RCTA)
நீதிமானின் தந்தை மிகுதியாக அக மகிழ்கிறான். ஞானியைப் பெற்றவன் அவனைப் பற்றி மகிழ்கிறான்.
நீதிமொழிகள் 23 : 25 (RCTA)
உன் தந்தையும் உன் தாயும் மகிழ்வார்களாக. உன்னைப் பெற்றவள் அக்களிப்பாளாக.
நீதிமொழிகள் 23 : 26 (RCTA)
உன் இதயத்தை, என் மகனே, எனக்குக் கொடு. உன் கண்களும் என் வழியைக் காக்கக்கடவன.
நீதிமொழிகள் 23 : 27 (RCTA)
ஏனென்றால், வேசி படுகுழியாம்; அன்னிய பெண் நெருக்கமான கிணறாம்.
நீதிமொழிகள் 23 : 28 (RCTA)
அவள் திருடனைப்போல் வழியில் ஒளிந்திருந்து, யார் யார் எச்சரிக்கையற்றவர்கள் என்று கண்டாளோ அவர்களை அழித்தொழிப்பாள்.
நீதிமொழிகள் 23 : 29 (RCTA)
எவனுக்குக் கேடு ? எவன் தந்தைக்குக் கேடு ? எவனுக்குச் சண்டை ? எவனுக்குப் படுகுழிகள் ? காரணமில்லாத காயம் எவனுக்கு ? கண் வீக்கம் எவனுக்கு ?
நீதிமொழிகள் 23 : 30 (RCTA)
இவையனைத்தும் மதுபானத்தில் காலம் போக்கி, பாத்திரங்களை முழுதும் குடிக்கும் அலுவலாய் இருப்பவனுக்கே அல்லவா ?
நீதிமொழிகள் 23 : 31 (RCTA)
மதுபானம் தெளிவாய் இருக்கிறதையும், பளிங்குப் பாத்திரத்தில் வார்த்து அதில் துலங்குகிறதையும் உற்று நோக்காதே.
நீதிமொழிகள் 23 : 32 (RCTA)
ஏனென்றால், கடைசியில் அது நாகப்பாம்பைப்போல் கடித்தும், பசிலிஸ்க் பாம்பைப்போல் நஞ்சைப் பரப்பியும் விடும்.
நீதிமொழிகள் 23 : 33 (RCTA)
உன் கண்கள் அன்னிய பெண்களை நோக்கும்; உன் இதயம் அக்கிரமானவைகளைப் பேசும்.
நீதிமொழிகள் 23 : 34 (RCTA)
நீ நடுக்கடலில் உறங்குகிறவனைப்போலும், தூக்கத்தால் மெய்மறந்து சுக்கான் இழந்த மாலுதியைப்போலும் இருப்பாய்.
நீதிமொழிகள் 23 : 35 (RCTA)
அன்றியும், என்னை அடித்தார்கள்; ஆயினும் எனக்கு நோகவில்லை. என்னை இழுத்தார்கள்; நான் உணரவில்லை. நான் எழுந்திருப்பதும், மதுபானங்களை மீண்டும் கண்டு குடிப்பதும் எப்போது என்பாய்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35

BG:

Opacity:

Color:


Size:


Font: