நீதிமொழிகள் 22 : 1 (RCTA)
நற்புகழ் அளவற்ற திரவியத்தைக் காட்டிலும் நல்லதாம். நன்கு மதிக்கப்பெறுவது வெள்ளியையும் பொன்னையும்விட மேலானதாம்.
நீதிமொழிகள் 22 : 2 (RCTA)
செல்வந்தனும் வறியவனும் எதிர்ப்பட்ட வராயினும் ஆண்டவரே அவ்விருவரையும் படைத்தார்.
நீதிமொழிகள் 22 : 3 (RCTA)
நுண்ணறிவு உள்ளவன் தீமையைக் கண்டு ஒளிந்துகொள்கிறான். கபடில்லாதவன் கடந்து செல்லவே அழிவுக்கு உள்ளாகுகிறான்.
நீதிமொழிகள் 22 : 4 (RCTA)
அடக்க ஒடுக்கத்தினால் வரும் உயர்பேறு தெய்வபயம், செல்வம், மகிமை, வாழ்வு ஆகியவையாம்.
நீதிமொழிகள் 22 : 5 (RCTA)
அக்கிரமியின் வழியில் படையணிகளும் வாழுமாம். தன் ஆன்மாவைக் காக்கிறவனோ அவற்றினின்று அகன்று போகிறான்.
நீதிமொழிகள் 22 : 6 (RCTA)
இளைஞன் தன் வாலிப நாட்களில் சென்ற நெறியைத் தன் முதுமையிலும் விடான் என்பது பழமொழி.
நீதிமொழிகள் 22 : 7 (RCTA)
செல்வந்தன் வறியவர்களுக்கு அரசனாய் இருக்கிறான். கடன் வாங்குகிறவனோ கடன் கொடுக்கிறவனுக்கு அடிமையாகிறான்.
நீதிமொழிகள் 22 : 8 (RCTA)
அக்கிரமத்தை விதைக்கிறவன் தீமையை அறுப்பான்; தன் கோபக் கொடுமையால் நசுக்கப்படுவான்.
நீதிமொழிகள் 22 : 9 (RCTA)
இரக்கத்துக்குச் சார்பாய் இருக்கிறவன் ஆசி பெறுவான். ஏனென்றால், அவன் தன் அப்பங்களினின்றும் ஏழைக்குத் தந்தான். வெகுமதிகளைத் தருகிறவன் வெற்றியும் மகிமையும் அடைவான். ஏனென்றால், வாங்குகிறவர்களுடைய ஆன்மாவை அவன் தன் வயப்படுத்துகிறான்.
நீதிமொழிகள் 22 : 10 (RCTA)
கேலி செய்பவனைத் துரத்து. அவன் ஓடிப்போனபின் சண்டையும் ஒழியும்; வழக்குகளும் நிந்தைகளும் ஒழிந்துபோம்.
நீதிமொழிகள் 22 : 11 (RCTA)
இதயத் தூய்மையை நேசிக்கிறவன் தன் உதடுகளின் நயத்தால் அரசனையும் நண்பனாக்கிக் கொள்கிறான்.
நீதிமொழிகள் 22 : 12 (RCTA)
ஆண்டவருடைய கண்கள் அறிவுக்கலையைக் காக்கின்றன. அக்கிரமியின் வார்த்தைகள் தள்ளிவிடப்படுகின்றன.
நீதிமொழிகள் 22 : 13 (RCTA)
சிங்கம் வெளியே இருக்கின்றது; நான் (வெளி வந்தால்) தெருக்களின் நடுவில் கொல்லப்படுவேன் என்கிறான் சோம்பேறி.
நீதிமொழிகள் 22 : 14 (RCTA)
அன்னிய பெண்ணின் வாய் ஆழமான குழியாம். ஆண்டவர் எவன்மேல் கோபமாய் இருக்கிறாரோ அவன் அதில் விழுவான்.
நீதிமொழிகள் 22 : 15 (RCTA)
சிறுவனின் இதயத்தில் மடமை கட்டப்பட்டிருக்கிறது. போதகக் கோலோ அதனை ஓட்டி விடும்.
நீதிமொழிகள் 22 : 16 (RCTA)
தன் செல்வத்தைப் பெருக்கும்படி ஏழையை வஞ்சிப்பவன், தன்னிலும் அதிகச் செல்வனுக்குத் தன் சொத்துகளைக் கொடுத்து விட்டுப் பிச்சையும் எடுப்பான்.
நீதிமொழிகள் 22 : 17 (RCTA)
செவி கொடுத்து ஞானிகளுடைய வார்த்தைகளைக் கேள். என் போதகத்துக்கும் உன் இதயத்தைத் திருப்பு.
நீதிமொழிகள் 22 : 18 (RCTA)
அதை உன் இதயத்தில் காக்கும்போது உனக்கு அது அழகுள்ளதாய் இருப்பதுமின்றி, உன் உதடுகளிலும் பொழியும்.
நீதிமொழிகள் 22 : 19 (RCTA)
உன் நம்பிக்கை ஆண்டவர்பால் இருக்கும் படியாகவே, நான் இன்று அதை உனக்குக் காண்பித்தேன்.
நீதிமொழிகள் 22 : 20 (RCTA)
ஆலோசித்துத் தெளிவாய் அதை மூன்று விதமாய் உனக்கு விரித்துரைத்தேன்.
நீதிமொழிகள் 22 : 21 (RCTA)
உன்னை அனுப்பினவர்களுக்கு உண்மையான வார்த்தையைப் பதிலாக உரைக்கும்படி உறுதியும் உண்மையுமான வாக்கியங்களை உனக்குக் கற்றுக் கொடுத்தேன்.
நீதிமொழிகள் 22 : 22 (RCTA)
ஏழையை வலுவந்தம் செய்யாதே. ஏனென்றால், அவன் ஏழையாய் இருக்கிறான். எளியவனையும் வாசலில் நசுக்காதே.
நீதிமொழிகள் 22 : 23 (RCTA)
ஏனென்றால், ஆண்டவரே அவனுடைய வழக்கைத் தீர்த்து, அவனுடைய ஆன்மாவைக் குத்தினவர்களைக் குத்துவார்.
நீதிமொழிகள் 22 : 24 (RCTA)
கோபியான மனிதனின் நண்பனாய் இராதே. கோபவெறியுள்ள மனிதனோடு பழகாதே.
நீதிமொழிகள் 22 : 25 (RCTA)
ஏனென்றால், அவன் வழிகளை நீயும் ஒரு வேளை கற்றுக் கொள்ளவும், உன் ஆன்மாவுக்கு இடறலைத் தேடிக் கொள்ளவும் கூடுமன்றோ ?
நீதிமொழிகள் 22 : 26 (RCTA)
தங்கள் கைகளைக் கட்டுகிறவர்களோடும், கடனுக்குத் தங்களை உத்தரவாதிகளாக ஒப்புக் கொடுக்கிறவர்களோடும் இராதே.
நீதிமொழிகள் 22 : 27 (RCTA)
ஏனென்றால், ஈடு செய்ய உனக்கு வகையில்லாதபோது உன் கட்டிலின் மூடு துணியை அவன் எடுத்துக் கொண்டு போவதற்குக் காரணம் ஏது ?
நீதிமொழிகள் 22 : 28 (RCTA)
உன் முன்னோர் முன்னாளில் நட்டின எல்லைக் கற்களைப் பெயர்க்காதே.
நீதிமொழிகள் 22 : 29 (RCTA)
தன் அலுவலில் சுறுசுறுப்புள்ள மனிதனைக் கண்டாயோ ? அவன் அரசனின்முன் நிற்பானேயன்றிக் கீழ் மக்களிடத்தில் இரான்.
❮
❯